கிறிஸ்தவம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிறிஸ்தவம் ஏக கடவுள் சமயமாகும்.நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி செயற்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை மேசியா (மீட்பர்) என்றும் கிறிஸ்த்து (ஆசிர்வதிக்கப் பட்டவர்) எனவும் விசவாசிக்கின்றனர். 2.1 பில்லியன் விசுவாசிகளை கொண்டு உலகின் பெரிய சமயமாக காணப்படுகிறது. கிறிஸ்தவம் பல உற்கிளை கொண்டுள்ளது இதில் கத்தோலிக்கம் மிகப்பெரிய உற்கிளையாகும். கிறிஸ்தவம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் ஒரு பிரிவாக ஆரம்பிக்கப்பட்டதன் காரணத்தினால் யூத மதத்தோடு பல சமய நூல்களை பொதுவாக கொண்டுள்ளது. இதில் யூதரின் புனித நூலான எபிரேய விவிலியத்தை கிறிஸ்தவர் விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்கின்றனர். யூத,இஸ்லாம் மதங்ளைப் போலவே கிறிஸ்தவமும் அபிரகாமிய (Abrahamic) சமயமாகும்.
[தொகு] உட்பிரிவுகள்
கிறிஸ்தவம் பல உட்பிரிவுகளையும் வழக்குகளையும் திருச்சபைகளையும் கொண்டது. இவை இடத்துக்கும் காலாச்சாரத்துக்குமேற்றபடி வேறுபடும் சமய கோட்பாடுகளை(doctrine) கொண்டுள்ளன. 2001 ஆண்டு உலக கிறிஸ்தவ கலைக்களஞ்சியத்தின் படி உலகம்முழுவதும் சுமார் 33,830 கிறிஸ்தவ பிரிவுகள் உள்ளன. சீர்த்திருத்ததுக்குப் பிறகு கிறிஸ்தவம் பிரதான மூன்று பிரிவுகளாக பிரிந்ததாக கொள்ளப்படுகிறது.
- உரோமன் கத்தோலிக்கம் : உரோமன் கத்தோலிக்க திருச்சபையானது கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய உட்பிரிவாகும். இது சில கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மொத்தமாக 1 பில்லியன் ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளை கொண்டுள்ளது.
- கிழக்கு கிறிஸ்தவம் : இது கிழக்குப்பகுதி(ஒரியன்டல்) மரபுவழி,கிழக்கு ஆசிறியன்,கிழக்கு மரபுவழி(மேற்கு மரபுவழி திருச்சபை உற்பட) திருச்சபைகளை கொண்டுள்ளதோடு மொத்தம் 300 மில்லியன் ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளை கொண்டுள்ளது.
- சமய சீர்த்திருத்த வாதம் அல்லது புரடஸ்தாந்தம்: இதில் பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன. அங்கிலிக்கன்,லூதரன்,Reformed,ஆவிக்குரிய(Evangelical), Charismatic, Presbyterians, Baptists, மெதோடிஸ்த, Nazarenes, Anabaptists,மற்றும் பெந்தகோஸ்தே போன்றவை பிரதானமானவையாகும். முதன் முதலாக 16 ஆம் நூற்றாண்டில் இச்சபைகள் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்தன. இவர்கள் தாங்களை கிறிஸ்தவரென்றோ மீலபிறந்த கிறிஸ்தவரென்றே அழைக்கின்றனர்.அங்கிலிக்கன் மற்றும் புதிய-லூதரன்(Neo-Lutheranism) திருச்சபைகள் 592-650 மில்லியன் விசுவாசிகளை கொண்டுள்ளது. மற்றைய திருச்சபைகள் சுமார் 275 மில்லியன விவாசிகளை கொண்டுள்ளது.