கலிங்க மாகன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கலிங்க மாகன் 13 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அக்காலத்தில் இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையைக் கைப்பற்றி 40 ஆண்டுகள்வரை ஆண்டவன் ஆவான். பாளி மொழியிலுள்ள சிங்கள வரலாற்று நூல்கள் மாகன் கலிங்க நாட்டிலிருந்து 24,000 வீரர்களைக் கொண்ட படையுடன் இலங்கையில் இறங்கியதாகக் கூறுகின்றன. பௌத்த மதத்துக்கு எதிரான இவனது ஆட்சி, இலங்கை வரலாற்றில் பெரும் தாக்கங்களை உருவாக்கியது ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச பரம்பரையை உருவாக்கியவனும் இவனே என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்[1].
[தொகு] கலிங்க இளவரசன்
கலிங்கமாகனின் ஆட்சி பற்றிப் பல விபரங்களைத் தருகின்ற சூளவம்சம், ராஜாவலிய போன்ற பாளி நூல்கள் அவனை ஒரு கலிங்க தேசத்தவனாகக் கூறுகின்றன. மட்டக்களப்பின் வரலாறு கூறும் தமிழ் நூலான மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் என்னும் நூல், அவனைக் கலிங்க மன்னான மனுவரதன் என்பவனின் மூன்றாவது மகன் என்கிறது. இவன் கலிங்க தேசத்தவனாக இருந்தபோதிலும், அவனுடைய படைகள் கலிங்க தேசத்துப் படைகள் அல்ல. வரலாற்று நூல்களின் கூற்றுப்படி, மாகன், தென்னிந்தியாவிலிருந்தே படை திரட்டி வந்ததாகத் தெரிகிறது. அவனுடைய படையில், தமிழரும், கேரளருமே அடங்கியிருந்ததாகத் தெரிகிறது.
[தொகு] குறிப்புகள்
- ↑ சுவாமி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - தமிழர் உகம், 1928, பதிப்பாசிரியர்: கந்தையா குணராசா, கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், 2004.