ஏ. ஆர். முருகதாஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏ. ஆர். முருகதாஸ் (பிறப்பு - கள்ளக்குறிச்சி), தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது ரமணா திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது. கஜினி திரைப்படம், அதன் ஒயிலான திரையாக்கத்துக்காகவும் பாத்திரப்படைப்புக்காகவும் பாராட்டப்பட்டது.
[தொகு] இயக்கியுள்ள திரைப்படங்கள்
- 2001 - தீனா
- 2002 - ரமணா
- 2005 - கஜினி
- 2006 - ஸ்டாலின் (தெலுங்கு)
[தொகு] வெளியிணைப்பு
- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் A. R. Murugadoss