எ-கலப்பை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழா எ-கலப்பையானது (எறும்புகளின் கலப்பை அல்லது இலத்திரனியற் கலப்பை) தமிழர்களால் தமிழர்களுக்காக தமிழில் கணினியில் உள்ளீடு செய்யப் பயன்படும் மென்பொருள். இது ஒருங்குறி மற்றும் தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறைகளை ஆதரிக்கின்றது. இது கீழ்வரும் விசைப் பலகை அமைப்புக்களில் கிடைக்கின்றது
- ஆங்கில ஒலியியல் முறை
- பாமினி
- தமிழ் 99
இம்மென்பொருள் விண்டோஸ் 2000/XP/2003/Vista இயங்குதளங்களில் இயங்கவல்லது. இயங்குதளங்களின் துணையின்றியே யுனிக்கோட் முறையில் எழுதப்பட்ட ஆவணங்களை காட்டவல்லது. எனினும் நிறுவானால் இச்சேவையைப் பெற்றுக் கொள்ளும். தமிழா எ-கலப்பையை ALT+2 மூலம் தமிழுக்கும் பின்னர் ALT+2 மீண்டும் அழுத்துவதன் மூலம் ஆங்கிலத்திற்கும் வரமுடியும். இணையத்தில் மற்றும் GoogleTalk and Windows/MSN Messenger தூதுவர்ளூடாக இணைய உரையாடல்கள் செய்யமுடியும். தமிழா எ-கலப்பை மென்பொருளானது பதிவிறக்கம் செய்யக்கூடியது.
பொருளடக்கம் |
[தொகு] தொழில் நுட்பத் தகவல்கள்
தமிழா எ-கலப்பை தனித்தியங்க வல்லது தமிழை ஒருங்குறி முறையில் உட்புகுத்த Alt+2 விசைகளைப் பயன்படுத்தவும். எனினும் மைக்குறோசொவ்ற் Office XP/2003/2007 பதிப்புக்களில் உள்ளீட்டு மொழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யும் என்பதால் கீழ்வரும் முறையைப் பின்பற்றவும். இது ஓப்பின் ஆபிஸிற்குத் தேவையற்றது.
[தொகு] விண்டோஸ் 2000
Start -> Settings -> Control Pannel -> Regional Options-> Input locals ->Add ->Input local Tamil and Keyboard layout UNICODE Tamil.
[தொகு] விண்டோஸ் XP/2003
- Click Add
- Select Input language as Tamil and keyboard layout as UNICODE Tamil.
- Now you can click the language bar and make selection