எழுத்து முறைமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எழுத்து முறைமை (writing system), என்பது ஒரு மொழியைப் பார்க்ககூடிய வகையில் குறியீடுகள்மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும். மிகப் பழைய வகை எழுத்துக்கள் ஓவிய எழுத்துக்கள் (pictographical) அல்லது பொருட்குறி வரியுருக்கள் (ideographical) ஆகும். பெரும்பாலான எழுத்து முறைமைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: logographic, அசையழுத்த முறைமை (syllabic) மற்றும் ஒலியன் முறைமை (alphabetic). எழுத்து முறைமையில் குறியீடுகளை எழுத்துக்கள் என அழைப்பர். glyph என்பது ஒரு எழுத்தை வரைபு முறையில் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.
பொருளடக்கம் |
[தொகு] எழுத்து முறைமைகளின் வரலாறு
உலகின் முதல் எழுத்து முறைமை, கி.மு. 4 ஆவது ஆயிரவாண்டின் இறுதியையொட்டிச் சுமேரியர்களிடையே உருவான ஆப்பெழுத்து (cuneiform) ஆகும். எனினும் இதனை மிக அண்மையாகத் தொடர்ந்து, எகிப்திலும், சிந்துப் பள்ளத்தாக்கிலும் எழுத்து தோற்றம் பெற்றது. இதில் தொடங்கி, வெவ்வேறு நாகரிகங்கள் தொடர்பில் பல இடங்களிலும் எழுத்துக்கள் தோன்றின.
[தொகு] Logographic எழுத்து முறைமை
முதன்மைக் கட்டுரை: Logogram
logogram என்பது ஒரு முழுச் சொல்லைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எழுத்தாகும். பல சீனமொழி எழுத்துக்கள் logogram ஆக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
ஒவ்வொரு குறியீடும், ஒவ்வொரு சொல்லைப் பிரதிநிதித்துவம் செய்வதனால், ஒரு மொழியின் சகல சொற்களையும் எழுதப் பெருமளவு logogram தேவைப்படும். ஏராளமான குறியீடுகளும் அவற்றுக்கான பொருள்களை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியதும், alphabetic முறைமையோடு ஒப்பிடும்போது, இம்முறைமைக்குள்ள முக்கியமான வசதிக்குறைவாகும். எனினும் சொல்லின் பொருள் குறியீட்டிலேயே பொதிந்திருப்பதால், கோட்பாட்டளவில் ஒரே குறியீட்டையே வெவ்வேறு மொழிகளுக்குப் பயன்படுத்த முடியும். செயற்பாட்டளவில், syntactical constraints ஒரே குறியீட்டு முறைமையைக் காவிச் செல்லக்கூடிய தன்மையைக் குறைப்பதால், இது, சீன மொழியின் வட்டார வழக்குகள் (dialects) போல மிக நெருக்கமான மொழிகளிடையே மட்டுமே சாத்தியமாகும். கொரிய மொழியும் ஜப்பானிய மொழியும் சீன logogramகளைத் தங்கள் எழுத்து முறைமைகளில் பயன்படுத்துவதுடன், பல குறியீடுகளும் ஒரே பொருளிலேயே பயன்படுகின்றன. எனினும் அவையிரண்டும், சீன மொழியில் எழுதப்பட்டவைகளை ஜப்பானியர்களோ, கொரியர்களோ இலகுவில் வாசித்து விளங்க முடியாத அளவுக்கு, சீன மொழியிலிருந்து வேறுபட்டவையாகும்.
பெரும்பாலான மொழிகள் முழுமையாக logographic எழுத்து முறைமைகளைப் பயன்படுத்தாவிட்டாலும், பல மொழிகள் சில logogram களைப் பயன்படுத்துகின்றன. நவீன logogramகளுக்குச் சிறந்த உதாரணம் அராபிய எண்கள்ஆகும். இக் குறியீடுகளைப் பயன்படுத்தும் எல்லோருக்கும், அவர்கள் அதை வண், யூனோ, ஒன்று, ஏக் என்று எப்படி அழைத்தாலும், 1 எதைக் குறிக்கிறது என்று விளங்கும். பல மொழிகளிலும் பயன்படும் ஏனய logogramகள் &, @ என்பவற்றையும் உள்ளடக்கும்.
Logograms சில சமயங்களில் ideogramகள் என அழைக்கப்படுவதுண்டு. abstract எண்ணங்களை வரைபுருவினாற் குறிப்பதால் இந்தப் பெயர். மொழியியலாளர்கள் இதன் உபயோகத்தைத் தவிர்க்கிறார்கள்.
மிக முக்கியமான (அத்துடன், ஓரளவுக்கு, வாழுகின்ற ஒரே) நவீன logographic எழுத்து முறைமை சீனம் ஆகும். இதன் எழுத்துக்கள் வேறுபாடான அளவு மாற்றங்களுடன், சீன மொழி, ஜப்பானிய மொழி, கொரிய மொழி, வியட்நாமிய மொழி மற்றும் பல ஆசிய மொழிகளில் பயன்படுகின்றன. பழங்கால எகிப்திய hieroglyphics மற்றும் மாயன் எழுத்து முறைமையும் logographic வகையைச் சார்ந்தவையே. இவை இப்போது வழக்கிலிருந்து மறைந்து விட்டன.
முழு logographic எழுத்து முறைமையினதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும்.
[தொகு] Syllabic எழுத்து முறைமைகள்
முதன்மைக் கட்டுரை: Syllabary
logographic எழுத்து முறைமைகள் ஒரு முழுச் சொல்லுக்கு ஒரு குறியீட்டையே பயன்படுத்துகின்றவேளை, syllabary, சொற்களை உருவாக்கும் syllable களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுதப்பட்ட ஒரு தொகுதி குறியீடுகளைக் கொண்டுள்ளது. syllabary யிலுள்ள ஒரு குறியீடு பொதுப்படையாக மெய்யொலியையும் அதைத் தொடர்ந்து வரும் உயிரொலியையும் கூட்டாகவோ; அதாவது ஒரு உயிர்மெய்யொலியையோ அல்லது தனியாக ஒரு உயிரொலியையோ குறிக்கின்றது. ஒரு உண்மையான syllabary யில், ஒத்த ஒலியமைப்பையுடைய எழுத்துக்களிடையே ஒழுங்கு முறையிலமைந்த வரைபு ஒப்புமை இருப்பதில்லை (சில முறைமைகளில் உயிரெழுத்துக்களில் இவ்வாறான ஒற்றுமை காணப்படுகின்றது). அதாவது, "கே", "க", மற்றும் "கோ" போன்றவற்றைக் குறிக்கும் எழுத்துக்களிடையே ஒரு பொது "க்" தன்மையைக் காணமுடியாது.
ஜப்பானிய மொழியைப்போல் ஒப்பீட்டளவில் எளிமையான syllable அமைப்பைக் கொண்ட மொழிகளுக்கே Syllabaries மிகவும் பொருத்தமானது. ஆங்கில மொழியைப் போன்ற சிக்கலான syllable அமைப்பையும், பெருமளவிலான மெய்யொலிகளையும், சிக்கலான consonant clusterகளையும் கொண்ட மொழிகளில் சொற்களை syllabary முறையில் எழுதுவது கடினமாகும். அமையக்கூடிய ஒவ்வொரு syllableக்கும் ஒரு எழுத்துப்படி ஜப்பானிய மொழியில் 100 எழுத்துக்களுக்குமேல் கிடையா. ஆங்கிலத்தை இதேமுறையில் எழுதுவதாயின் பல ஆயிரம் எழுத்துக்கள் வேண்டியிருக்கும் எனக்கூறப்படுகிறது.
syllabic எழுத்து முறைமையைப் பயன்படுத்தும் மொழிகளுள் பின்வருவனவும் அடங்கும். மைசீனியன்Mycenaean கிரேக்கமொழி (லீனியர் B) மற்றும் செரோக்கீ போன்ற உள்ளூர் அமெரிக்க மொழிகள். பழங்கால அண்மைக் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பல மொழிகள், சில syllabic அல்லாத அம்சங்களையும் கொண்ட syllabary முறையிலான ஆப்பெழுத்து வடிவங்களைப் பயன்படுத்தின.
முழு syllabaries இனதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும்.
[தொகு] Alphabetic எழுத்து முறைமை
முதன்மைக் கட்டுரை: Alphabet
alphabet என்பது ஒவ்வொன்றும், பேச்சு மொழியொன்றிலுள்ள, ஒரு phonemeஐ, அண்ணளவாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது பிரதிநிதித்துவப்படுத்திய சிற்றளவிலான எழுத்துக்களைக் கொண்ட தொகுதி - அடிப்படையான குறியீடுகள் - ஆகும். ஆங்கிலத்தில் இச் சொல்லைக் குறிக்கும் "அல்பபெட்" (alphabet) என்னும் சொல், கிரேக்க அரிச்சுவடியின் முதல் இரண்டு எழுத்துக்களான "அல்பா", "பீட்டா" என்பவற்றைச் சேர்த்துப் பெறப்பட்டது.
ஒரு முழுமையான ஒலியன் எழுத்து முறைமையில் (phonological alphabet), ஒலியன்களும் (phoneme), எழுத்துக்களும் ஒன்றுடனொன்று இரண்டு திசைகளிலே முழுமையாகப் பொருந்தக்கூடியன: ஒரு சொல்லின் உச்சரிப்புக் கொடுக்கப்பட்டால், எழுதுபவர் ஒருவர் அதற்குரிய எழுத்துக்களைக் கண்டுகொள்ளக்கூடியதாகவும், சொல்லுக்குரிய எழுத்துக்கள் கொடுக்கப்படும்போது, பேசுபவரொருவர் அதன் உச்சரிப்பை அறியக்கூடியதாகவும் இருக்கும். ஒவ்வொரு மொழிக்கும், அதன் எழுத்துக்களுக்கும், ஒலியன்களுக்கும் இடையிலான கூட்டைக் (association) கட்டுப்படுத்தும் பொது விதிகள் உள்ளன. ஆனால், மொழிகளைப் பொறுத்து, இவ் விதிகள் ஒரு தன்மைத்தாகப் பின்பற்றப்படவோ அல்லது பின்பற்றப்படாமலிருக்கவோகூடும்.
முழுமையான ஒலியன் எழுத்துக்கள் பயன்படுத்துவதற்கும், பயிலுவதற்கும் இலகுவானது என்பதுடன், கல்வி வளர்ச்சியில் அவ்வாறான மொழிகள், சிக்கலானதும், ஒழுங்கற்றதுமான எழுத்துக்கூட்டு முறைகளைக் கொண்ட ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் குறைந்த தடைகளைக் கொண்டவையாகும். பொதுவாக மொழிகள் எழுத்துமுறைமைகளில் தங்கியிராமல் வளர்வதாலும், எழுத்து முறைமைகள், குறிப்பிட்ட மொழிகளுக்கென வடிவமைக்கப்படாது, வேறு மொழிகளிலிருந்து கடன் பெறுவது உண்டு என்பதாலும், ஒலியன்களும், எழுத்தும் ஒன்றுடனொன்று பொருந்தும் அளவு மொழிக்கு மொழி வேறுபடுகின்றது. சில சமயம் ஒரு மொழிக்குள்ளேயே வேறுபடுகின்றது. நவீன காலத்தில், மொழியியலாளர், ஏற்கெனவே எழுத்துமுறைகளைக் கொண்டிராத மொழிகளுக்குப் புதிய எழுத்துமுறைமைகளை உருவாக்கும்போது, முழுமையான ஒலியன் எழுத்து முறைமைகளை உருவாக்குவதே இலக்காக உள்ளது.
ஒலியன் எழுத்து (alphabet) பற்றிய மேலதிக விபரங்களுக்கு, ஒலியன் எழுத்து கட்டுரையைப் பார்க்கவும். எல்லா ஒலியன் எழுத்துக்களினதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும்.
===அப்ஜாட்கள்=== (Abjad)
விருத்தியாக்கப்பட்ட முதலாவது வகை உருபன் எழுத்து, அப்ஜாட் ஆகும். அப்ஜாட் என்பது ஒவ்வொரு மெய்யெழுத்துக்கும் ஒவ்வொரு குறியீட்டைக் கொண்டுள்ள, உருபன் எழுத்து முறைமையாகும். அப்ஜாட்கள், மெய்யொலிகளுக்கு மட்டுமே எழுத்துக்களைக் கொண்டுள்ளன. இந்த வகையில் அவை, வழமையான ஒலியன் எழுத்துக்களிலிருந்து வேறுபடுகின்றன. அப்ஜாட்டில் உயிரொலிகளுக்குக் குறியிடப்படுவதில்லை.
அறியப்பட்ட எல்லா abjad களும் செமிட்டிக் குடும்ப எழுத்துவகையைச் சார்ந்தவை. அத்துடன் அவையனைத்தும், மூல வடக்கு Linear Abjad இலிருந்து பெறப்பட்டவயாகும். செமிட்டிக் மொழிகள், பெரும்பாலான சமயங்களில் உயிர்க் குறியீட்டைத் தேவையற்றதாக்கும் உருபன் அமைப்பைக் (morphemic structure) கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும்.
அரபி, ஹீப்ரூ பொன்ற சில அப்ஜாட்கள் உயிர்களுக்கான குறியீடுகளையும் கொண்டுள்ளனவெனினும், கற்பித்தல் போன்ற விசேட சந்தர்ப்பங்களில் மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன. அப்ஜாட்களிலிருந்து பெறப்பட்ட பல மொழிகள், உயிர்க் குறியீடுகளைச் சேர்த்து விரிவாக்கப்பட்டதன் மூலம், முழுமையான உருபன் எழுத்துகள் ஆகின. போனீசியன் அப்ஜாட்டிலிருந்து, முழுமையான கிரேக்க ஒலியன் எழுத்து உருவானது, ஒரு பிரபலமான உதாரணமாகும். இவ்வெழுத்துக்கள் செமிட்டிக் அல்லாத மொழிகளுக்குப் பயன்படுத்தப்பட்டபோதே பெரும்பாலும் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
The term abjad takes its name from the old order of the Arabic alphabet's consonants Alif, Bá, Jim, Dál, though the word may have earlier roots in Phoenician or Ugaritic.
முழு abjads இனதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும்.
[தொகு] Abugidas
An Abugida is a alphabetic writing system whose basic signs denote consonants with an inherent vowel and where consistent modifications of the basic sign indicate other following vowels than the inherent one.
Thus, in an abugida there is no sign for "k", but instead one for "ka" (if "a" is the inherent vowel), and "ke" is written by modifying the "ka" sign in a way that is consistent with how one would modify "la" to get "le". In many abugidas the modification is the addition of a vowel sign, but other possibilities are imaginable (and used), such as rotation of the basic sign, addition of diacritical marks, and so on.
The obvious contrast is with syllabaries, which have one distinct symbol per possible syllable, and the signs for each syllable have no systematic graphic similarity. The graphic similarity comes from the fact that most abugidas are derived from abjads, and the consonants make up the symbols with the inherent vowel, and the new vowel symbols are markings added on to the base symbol.
The Ethiopic script is an abugida, although the vowel modifications in Ethiopic are not entirely systematic. Many North American Indian scripts, such as Cree syllabary, are abugidas as well. The largest single group of abugidas is the Brahmic family of scripts, however, which includes nearly all the scripts used in India and Southeast Asia.
The name abugida is derived from the first four characters of an order of the Ethiopic script used in some religious contexts. The term was coined by Peter T. Daniels.
முழு abugidas இனதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும்.
[தொகு] Featural எழுத்து முறைமை
In a featural writing system, each part of each symbol corresponds to a phonetic feature. That is, sounds that are phonetically related have symbols that are related, and different phonetic features, like place of articulation or voicing, will be represented the same way for different sounds. The most important featural writing system is Korean Hangeul, which also incorporates aspects of logographic writing systems and alphabets in addition to features.
There are also systems for recording sign languages, such as SignWriter, where symbols stand for particular features of signs, the symbols often resembling those sign features they stand for.
முழு featural எழுத்து முறைமைகளினதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும்.
[தொகு] எழுத்து முறைமை வகைபிரிப்பு
எழுத்து முறைமை வகை | ஒவ்வொரு குறியீடும் பிரதிநிதித்துவப்படுத்துவது | உதாரணம் |
---|---|---|
Logographic | சொல், எண்ணக்கரு, அல்லது எண்னக்கரு+phonetic | சீன ஹான்ஸி |
Syllabic | syllable | கட்டக்கானா |
Alphabetic | phoneme | இலத்தீன் |
Abugida | உயிர்மெய்யெழுத்து, உயிரெழுத்து | தேவநாகரி |
Abjad | மெய்யெழுத்து | அரபி |
Featural | phonetic feature | கொரியன் |
[தொகு] பின்வருவனவற்றையும் பார்க்கவும்
- calligraphy
- penmanship
- majuscule letter and minuscule letter
- orthography
- pasigraphy
- spelling
- transliteration
- For technical aspects of computer support for multiple writing systems, see the articles CJK and BiDi.
[தொகு] வெளி இணைப்புகள்
- About African writing systems by the John Henrik Clarke Africana Library at Cornell University:
- General about writing systems
- Alphabetic Writing Systems
- Alphabets of Europe
- The Unicode Consortium
- A Typographic Outcry: a curious perspective
[தொகு] உசாத்துணைகள்
- Hannas, William. C. 1997. Asia's Orthographic Dilemma. University of Hawaii Press. ISBN 082481892X (paperback); ISBN 0824818423 (hardcover)
- DeFrancis, John. 1990. The Chinese Language: Fact and Fantasy. Honolulu: University of Hawaii Press. ISBN 0824810686
- Smalley, W.A. (ed.) 1964. Orthography studies: articles on new writing systems, United Bibe Society, London.