உறைபொதியாக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தரவுகளை மறைத்து குறிப்பிடப்பட்ட நிலைகளிலோ அல்லது செயலிகளுக்கோ அனுமதி அளிப்பது உறைபொதியாக்கம் (Encapsulation) எனப்படும். உதாரணமாக, ஜாவா நிரலாக்க மொழியில் மூன்று visibility modifiers மூலம் உறைபொதியாக்கம் செய்யலாம். அவை பொது (Public), காக்கப்பட்ட (Protected), தனியார் (Private) என்பவனவாம்.
- பொது (Public): பொது மாறிகளின் தரவுகளை பயன்படுத்துவதற்கு மாற்றியமைப்பதற்கு எந்த ஒரு பொருளுக்கும் அனுமதி உண்டு.
- காக்கப்பட்ட (Protected): ஒரே நிரல் பொதியில் உள்ள பொருட்களுக்கு அல்லது கீழ்நிலை வகுப்புக்களுக்கு மாறிகளை பயன்படுத்த அல்லது மாற்றியமைக்க அனுமதி உண்டு.
- தனியார் (Private): எந்த பொருளில் மாறிகள் வரையறை செய்யப்பட்டதோ அந்த பொருளுக்கு மட்டுமே மாறிகளின் தரவை பயன்படுத்த மாற்ற அனுமதி உண்டு.