உரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விளை நிலத்தில் உள்ள ஊட்டச் சத்துகளைப் பெருக்கும் பொருட்டு இடப்படுவது உரம் (Fertilizer) ஆகும்.அது இலை, தழை, எரு போன்று இயற்கையானதாகவோ தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.
உரம் பாஸ்பரஸ், பொட்டாசியம், நைட்ரஜன் ஆகிய முக்கிய தனிம ஊட்டச் சத்துகளையும் கால்சியம், மக்னீசியம், கந்தகம் ஆகிய இரண்டாம் நிலை ஊட்டச் சத்துகளையும் இரும்பு, மயில் துத்தம்,போரான், மாலிப்டினம்,தாமிரம், மாங்கனீஸ் போன்ற தாதுப்பொருட்களையும் நிலத்திற்கு தருகிறது.
அளவுக்கு மீறிய உரமிடுவதால், நிலம், பயிர் மற்றும் உணவு ஆகியவை நச்சுத் தன்மையடைவதுடன் அதிகப்படியான உரங்கள் பாசன நீரால் கழுவிச்செல்லப்பட்டு ஆறுகளிலும் நீர் நிலைகளிலும் தேங்குகிறது.இதனால் அவையும் நச்சுத் தன்மை அடைகின்றன. மேலும், அதிகப்படியான ஊட்டச் சத்துக்கள் நீர் நிலைகளில் பாசிப் பெருக்கதிற்கும் (algal bloom) அதனால் ஏற்படும் ஆக்சிஜன் குறைவிற்கும் (eutrophication) காரணமாகின்றது.