ஈரோடு மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஈரோடு மாவட்டம் தமிழ்நாட்டிலுள்ள 30 மாவட்டங்களுள் ஒன்றாகும். ஈரோடு இதன் தலைநகராகும்.
பொருளடக்கம் |
[தொகு] புவியியல்
இது தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் கர்நாடக மாநிலம், தெற்கில் திண்டுக்கல் மாவட்டம், மேற்கில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன. காவிரி, பவானி, மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகள் ஈரோடு மாவட்டத்தின் வழியாகப் பாய்கின்றன.
[தொகு] வரலாறு
இம்மாவட்டமானது ஆகஸ்டு 31, 1979-ஆம் ஆண்டு கோவை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. முதலில் பெரியார் மாவட்டம் என்று பெயரிடப்பட்டது. பின்னர் இது ஈரோடு மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.ஈ. வெ. ராமசாமி பெரியார் மற்றும் கணித மேதை சீனிவாச ராமனுஜம் ஆகியோர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்களாவர்.
[தொகு] நிர்வாகம்
ஈரோடு மாவட்டம் மொத்தம் 7 தாலூக்காக்களை உள்ளடக்கியது. அவை:
- பவானி
- தாராபுரம்
- ஈரோடு
- கோபிசெட்டிபாளையம்
- பெருந்துறை
- காங்கேயம்
- சத்தியமங்கலம்
இம்மாவட்டத்திலுள்ள ஐந்து நகராட்சிகளாவன:
- பவானி
- தாராபுரம்
- ஈரோடு
- கோபிசெட்டிபாளையம்
- சத்தியமங்கலம்
[தொகு] பொருளாதாரம்
ஈரோடு மாவட்டம் மஞ்சள், சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களுக்கான முக்கிய சந்தையாகும். மஞ்சளானது துணிகளுக்கு சாயமாகவும் பயன்படுத்தப் படுகிறது. மஞ்சளானது ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தமிழ்நாட்டு, கர்நாடக மாவட்டங்களிலிருந்தும் வருகிறது. ஊத்துக்குளி வெண்ணெய்யும் காங்கேயம் காளைகளும் புகழ் பெற்றவை.
ஈரோடு மாவட்டம் இங்கு தயாரிக்கப்படும் கைத்தறி மற்றும் விசைத்தறி துணிகளுக்கு பெயர்பெற்றது. இங்கு பருத்திப் புடவைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கி, வேட்டிகள் ஆகியன தயாரிக்கப் படுகின்றன.