பேச்சு:இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிபீடியா உள் இணைப்புக்களை மட்டும் கொண்டு இக்காலக் கோட்டை அமைந்தால் நன்று. --Natkeeran 16:09, 10 செப்டெம்பர் 2006 (UTC)
கட்டுநாயக்க விமானப்படைத் தளத் தாக்குதல் இருப்பது நல்லதா.ஏனெனில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் பட்டியல் என்ற ஒரு தனிப்பக்கத்தை உருவாக்க முனைந்திருக்கின்றேன் அப்பட்டியலில் சேர்க்க விரும்புகின்றேன்.அவ்வாறு இப்பக்கம் இங்கிருப்பது தேவையில்லையெனில் நீக்கிவிடவும்.நன்றி--சக்திவேல் நிரோஜன் 16:18, 28 அக்டோபர் 2006 (UTC)
அது ஒரு முக்கிய நிகழ்வு, இனவே இங்கு இடம்பெறுவது பொருத்துமே. பொதுவாக இனப்பிரச்சினையின் போக்கை மாற்றக்கூடிய நிகழ்வுகளையே இங்கு குவிக்க முனையப்படுகின்றது. --Natkeeran 19:27, 28 அக்டோபர் 2006 (UTC)
- நிரோஜன், ஒரு கட்டுரை ஒன்றுக்கு மேற்பட்ட பட்டியல்களில் இருக்கலாம். அதில் தவறில்லை. அத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட பகுப்புக்குள்ளும் உள்ளடக்கலாம்.--Kanags 04:06, 29 அக்டோபர் 2006 (UTC)
[தொகு] இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு ?
--Natkeeran 16:41, 3 நவம்பர் 2006 (UTC)
இப்படி ஒரு கட்டுரை உருவாக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கட்டுரைக்கான கருத்துருவை உருவாக்கியவருக்கு பாராட்டுக்கள். இக்கட்டுரை போதுமான அளவு வளர்ந்து விரியும்போது மிகச்சிறந்த பெறுபேறுகளை உருவாக்கும். தமிழ்த்தேசிய கருத்துருவாக்கம், ஆவணப்படுத்தல் தொடர்பான விடயங்களில் இக்கட்டுரை பெரிய அளவிலான உதவிகளை செய்யப்போகிறது. --மு.மயூரன் 16:59, 12 நவம்பர் 2006 (UTC)
இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு தொடர்பில் எந்தவிதமான தகவல்கள் இற்றைப்படுத்தப்பட வேண்டும் என கொள்கை எதும் இருக்கின்றதா? சம்பவங்கள் சார்ந்து UNICEF,UN இனால் வெளியீடப்படும் அறிக்கைகள் இதில் இணக்கலாமா?--கலாநிதி 17:10, 13 நவம்பர் 2006 (UTC)
[தொகு] சுட்டிகள்
இந்தப் பக்கத்தின் வெளி இணைப்புகளும் காலக்கோடுகளாக இருந்தால் நன்று. பின்வரும் சுட்டி அப்படி ஒன்றல்ல, வேறு பல பயனர்கள் கருத்து மாறுபடம் இடத்து இதையும் சேர்க்கலாம்.
--Natkeeran 02:22, 24 நவம்பர் 2006 (UTC)