இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, முதல் சுற்று
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கை அரசுக்கும் (ஐக்கிய தேசியக் கட்சி) விடுதலைப் புலிகளுக்குமிடையான முதல் சுற்று பேச்சுவார்தை எனப்படுவது நோர்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002 பின்னர் தாய்லாந்தின் பேங்காக் நகரில் செப்ரம்பர் 16-18 திகதிகளில் இடம்பெற்ற முதல் சுற்று நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும். இந்தச் சுற்றில் பின்வரும் இரு முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பது என முடிவு செய்யப்பட்டது, அவை:
- கண்ணிவெடி அகற்றும் பணிகளை விரைவு செய்வது
- உள்நாட்டு அகதிகளை மீள்குடியமர்த்துவது.
இப் பேச்சுவார்த்தைகளில் மேலும் பேசுவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளின் தலைமை பிரதிநிதியான பாலசிங்கம் வெளியிட்ட பின்வரும் கருத்து "விடுதலைப் புலிகள் தனிநாடு என்கின்ற கருத்தோடு செயல்படவில்லை" The LTTE doesn’t operate with the concept of a separate state., அவர்கள் விட்டுக்கொடுத்து சமாதான தீர்வு ஒன்றை ஏற்படுத்தி கொள்வதற்கான ஒரு சமிக்கையாக அரசியல் அவதானிகளால் கருதப்பட்டது.