இனியவை நாற்பது
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் இலக்கியத்தில் உள்ள தலைப்புகள் | |
---|---|
சங்க இலக்கியம் | |
அகத்தியம் | தொல்காப்பியம் |
பதினெண் மேற்கணக்கு | |
எட்டுத்தொகை | |
ஐங்குறுநூறு | அகநானூறு |
புறநானூறு | கலித்தொகை |
குறுந்தொகை | நற்றிணை |
பரிபாடல் | பதிற்றுப்பத்து |
பத்துப்பாட்டு | |
திருமுருகாற்றுப்படை | குறிஞ்சிப் பாட்டு |
மலைபடுகடாம் | மதுரைக் காஞ்சி |
முல்லைப்பாட்டு | நெடுநல்வாடை |
பட்டினப் பாலை | பெரும்பாணாற்றுப்படை |
பொருநராற்றுப்படை | சிறுபாணாற்றுப்படை |
பதினெண் கீழ்க்கணக்கு | |
நாலடியார் | நான்மணிக்கடிகை |
இன்னா நாற்பது | இனியவை நாற்பது |
கார் நாற்பது | களவழி நாற்பது |
ஐந்திணை ஐம்பது | திணைமொழி ஐம்பது |
ஐந்திணை எழுபது | திணைமாலை நூற்றைம்பது |
திருக்குறள் | திரிகடுகம் |
ஆசாரக்கோவை | பழமொழி நானூறு |
சிறுபஞ்சமூலம் | முதுமொழிக்காஞ்சி |
ஏலாதி | கைந்நிலை |
சங்ககாலப் பண்பாடு | |
தமிழ்ச் சங்கம் | தமிழ் இலக்கியம் |
பண்டைத் தமிழ் இசை | சங்ககால நிலத்திணைகள் |
சங்க இலக்கியங்களில் தமிழர் வரலாறு | |
edit |
பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இதன் பெயரினால் குறிக்கப்படுவதுபோல இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ் நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவது மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.
[தொகு] எடுத்துக்காட்டு
சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது, கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று, சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும் இந் நூற் பாடலொன்று பின்வருமாறு:
- சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
- மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
- எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
- எத்துணையும் ஆற்ற இனிது.