அவுட்லுக் எக்ஸ்பிரஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மின்னஞ்சல் மென்பொருள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 95 இரண்டாம் பதிப்பில் இருந்து. இது மைக்ரோசாப்ட் இன்ரநெட் எக்ஸ்புளேளருடனும் இணைத்தே விநியோகிக்க்பபடுகின்றது. ஆப்பிள் வகைக்கணிகன்களிலும் இப்பதிப்பானது விநியோகிப்படுகின்றது எனினும் இதன் Mac OS X இலிருந்து மாக்கிண்டோஷ் கணினிகளிற்கு மைக்ரோசாப்ட் ஆபிஸ் பதிப்புடன் சேர்து விநியோகிப்பதால் இது உள்ளடக்கபடவில்லை.
மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் 3.0 இல் இணைப்பாக வந்த மைக்ரோசாப்ட் இணைய மின்னஞ்சல் மற்றும் செய்தி மென்பொருளை இது மாற்றீடு செய்துள்ளது.
மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மைக்ரோசாப்ட் இயங்குதளத்துடன் வருவதால் மிகப்பெருமளவில் பாவிக்கப்பட்ட மென்பொருளாக விளங்கியது இது வைரஸ் தாக்குதல்களிற்கும் அடிக்கடி உட்பட்டது. மாக்கிண்டோஷ் கணினிகளுக்கான பதிப்பானது இதைவிட வைரஸ் பிரச்சினைகள் இருந்தாலும் இப்பதிப்பானது நிறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 2005இல் இதன் அடுத்த பதிப்பான விண்டோஸ்மெயில் விஸ்டா இயங்குதளத்திற்கானது. மைக்ரோட்சாப்ட் விண்டோஸ் லைவ்மெயில் டெக்ஸ்டாப் என்ற ஓர் மென்பொருளையும் விருத்தி செய்து கொண்டு வருகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] விளக்கம்
மைக்ரோசாப்ட் அவுட்லுக் மைக்ரோக்சாப்ட் ஆபீஸ் பதிப்புடன் வெளிவருவது. மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் விண்டோஸ் உடன் வெளிவருவது.
[தொகு] ஆரம்பித்தல்
- Start -> All Program (Programs) -> Outlook Express
- Start -> Run ->msimn
[தொகு] மின்னஞ்சலைச் சேமித்தல்
மின்னஞ்சலகள் பொதுவாக "C:\Documents & Settings\Administrator\Local Settings\Application Data\Identities\{SDOCE8ABD-5896-3E3D5}\Microsoft\Outlook Express" இங்கு identies ஆவது 'Administrator' அல்லது பிறிதோர் விண்டோஸ் பயனாளர் கணக்காகும். இஙகுள்ள கோப்புக்களைப் பிறிதோர் கணினியிலோ அல்லது வேறு ஓர் ஊடகம் அதாவது இறுவட்டு போன்றவற்றில் சேமிக்கலாம். உங்கள் கணினியில் சேமிக்கப் பட்ட இடத்தைக் காண்பதற்கு Tools ->Options->Maintenace->Store Folderஐக் கிளிக் பண்ணவும். இங்கு காட்டும் இடமே மின்னஞ்சல் சேமிக்கப் பட்டுள்ள இடமாகும். இவ்விடத்திற்கு விண்டோஸ் எக்ஸ்புளோளர் மூலம் சென்று கோப்புக்களைப் பிரதியெடுத்துக் கொள்ளலாம்.
[தொகு] மின்னஞ்சல்கள மீள்வித்தல்
கணினிகள் காலத்திற்குக் காலம் இயங்க மறுப்பது வழமையே. நீங்கள் சேமிக்கப் பட்ட மின்னஞ்சல்களை பிறிதோர் கணினிக்குச் சென்று File -> Import ->Messages ->Mircrosoft Outlook Express 6 ->Import mail from an OE6 Stored directory. மூலம் மீள்விக்கலாம்.
[தொகு] மின்னஞ்சல் முகவரிகள்
அவுட்லுக் எக்ஸ்பிரஸ் சொந்த முகவரிப் புத்தகம் எதனையும் கொண்டிராது இது விண்டோஸ் முகவரிப் புத்தகத்தையே நம்பியிருக்கின்றது. இது விண்டோஸ் NT/2000/XP/விஸ்டா இயங்குதளங்களில் "C:\Documents and Settings\%USERNAME%\Application Data\Microsoft\Address Book\". பொதுவாகச் சேமிக்கப்படும்
[தொகு] பதிப்புக்களும் கோப்பு முறையும்
- அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 4 விண்டோஸ் 98 உடன் வெளிவந்தது. கோப்புக்களானது *.mbx முறையில் சேமிக்கப்படும்.
- அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 5 விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்புடன் வெளிவந்தது. *.dbx முறையில் கோப்புக்கள் சேமிக்கப்ப்டும் இதிலிருந்து ஒவ்வோர் கோப்புறைக்க்கும் தனித்தனியான கோப்புக்கள் உருவாக்கப் பட்டன.
- அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 5.5. விண்டோஸ் மில்லேனியம் பதிப்புடன் ஜீன் 2006 இல் வெளிவந்தது .
- 'அவுட்லுக் எக்ஸ்பிரல் 6' விண்டோஸ் XP பதிப்புடன் வெளிவந்தது.
- விண்டோஸ் மெயில் விண்டோஸ் விஸ்டா சோதனைப் பதிப்பாக வெளிவந்துள்ளது. இதில் ஒவ்வோர் மின்னஞ்சலும் *.eml முறையில் சேமிக்கப்படும்.