அப்பல்லோ திட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அப்பல்லோ திட்டம் என்பது 1961-[1972]] வரை, ஐக்கிய அமெரிக்க நாட்டினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்பறப்புத் திட்டமாகும். இது, தசாப்தம் 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கிப் பாதுகாப்பாகப் பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் அடையப்பட்டது. சந்திரனில், ஆரம்ப ஆள்மூல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது.
பொருளடக்கம் |
[தொகு] அறிமுகம்
மேர்கூரித் திட்டம், ஜெமினித் திட்டம் ஆகிய வற்றைத் தொடர்ந்து, அப்பல்லோ திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது ஆளேற்றிய விண்பறப்புத் திட்டமாகும். அப்பல்லோ, ஐசனோவருடைய நிர்வாகத்தில், மேர்க்கூரித் திட்டத்தின் தொடர்ச்சியாக, உயர்நிலை பூமிச்சுற்று ஆய்வுகளுக்காக, உருக்கொடுக்கப்பட்டது. பின்னர், மே 25, 1961ல், அமெரிக்கக் காங்கிரசின் விசேட கூட்டு அமர்வில், ஜனாதிபதி கெனடியால் அறிவிக்கப்பட்டபடி, தீவிர நிலவில் இறங்கும் நோக்கத்துக்காக மாற்றியமைக்கப்பட்டது.
I believe this nation should commit itself to achieving the goal, before this decade is out, of landing a man on the Moon and returning him safely to Earth. No single space project in this period will be more impressive to mankind, or more important in the long-range exploration of space; and none will be so difficult or expensive to accomplish. Excerpt from "Special Message to the Congress on Urgent National Needs"
[தொகு] ஒரு திட்ட முறையைத் தெரிவுசெய்தல்
சந்திரனை இலக்காகத் தீர்மானித்ததன் பின்னர், மனித உயிருக்கான ஆபத்து, செலவு, தொழில்நுட்பம், விமானிகள் திறமை ஆகிய தேவைகளின் குறைந்த அளவு உபயோகத்துடன், கெனடி அறிவித்த நோக்கங்களை அடைவதற்காகப் பறப்புத் திட்டங்களை வடிவமைப்பதில், அப்பல்லோ திட்டத்தின் திட்டமிடலாளர்கள் பெரும் சவாலை எதிர்நோக்கினார்கள்.
மூன்று திட்டங்கள் கருத்திலெடுக்கப்பட்டன. முதலாவதாக, விண்கலத்தை நேரடியாகச் சந்திரனுக்கு boost செய்தல். இதற்குத் தற்போது திட்டமிடப்பட்டிருப்பனவற்றிலும் பார்க்கச் சக்தி கூடிய நோவா booster வேண்டியிருக்கும். இரண்டாவது, பூமிச் சுற்றுப்பாதை rendezvous (EOR) என அழைக்கப்பட்டது. இதன்படி, ஒன்றில் விண்கலத்தையும், மற்றதில் எரிபொருளையும் வைத்து, இரண்டு சனி V (Saturn V) ராக்கெட்டுகள் ஏவப்பட வேண்டும். விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் தரித்து நிற்க, நிலவுக்குச் சென்று திரும்பிவரப் போதுமான அளவு அதற்கு எரிபொருள் நிரப்பப்பட வேண்டும்.
Apollo Command and Service Modules
[தொகு] சந்திரச் சுற்றுப்பாதை Rendezvous
உண்மையாகக் கடைப் பிடிக்கப்பட்ட திட்டத்தின் கர்த்தா, ஜோன் ஹூபோல்ட் என்பவராவர். இத்திட்டம் 'சந்திரச் சுற்றுப்பாதை Rendezvous' (LOR) என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியது. விண்கலம் modular ஆக உருவாக்கப் படும், இவற்றுள் ஒரு 'கட்டளை/சேவை Module' (CSM) மற்றும் ஒரு 'நிலா Module' (LM; சந்திரப் பயண Module என்ற அதன் ஆரம்ப ஆங்கிலப் பெயரையிட்டு, 'லெம்' என உச்சரிக்கப்படும்) என்பன அடங்கியிருக்கும். CSM மூன்று பேரடங்கிய குழுவுக்கு, 5 நாள் நிலவுக்குச் சென்று திரும்பும் பயணத்துக்குத் தேவையான, உயிர் காப்பு முறைமைகளைக் கொண்டிருப்பதுடன், அவர்கள் பூமியின் காற்றுமண்டலத்துள் நுழையும்போது தேவைப்படும், வெப்பத் தடுப்புகளையும் கொண்டிருக்கும். LM, சந்திரச் சுற்றுப்பாதையில், CSM இலிருந்து பிரிந்து, இரண்டு விண்வெளிவீரர்களை நிலா மேற்பரப்பில் இறக்குவதற்காகக் கொண்டுசெல்லும்.
LM தன்னுள் இறங்கு மேடையொன்றையும், ஏறு மேடையொன்றையும் கொண்டுள்ளது. முன்னது, ஆய்வுப்பயணக் குழு, சந்திரனைவிட்டுப் புறப்பட்டுப் பூமிக்குச் திரும்புமுன், சுற்றுப்பாதையிலிருக்கும் CSM உடன் இணையச் செல்லும்போது, பின்னையதற்கு ஏவு தளமாகப் பயன்படும். இத் திட்டத்திலுள்ள ஒரு வசதி என்னவென்றால், LM கைவிடப்படவுள்ள காரணத்தால், அது மிகவும் பாரமற்றதாகச் செய்யப்படலாம் என்பதுடன், சந்திரப்பயணம் ஒற்றை சற்றேர்ண் V ராக்கெட்டால் ஏவப்படவும்கூடியதாக உள்ளது.
[தொகு] பறப்புகள்
அப்பல்லோத் திட்டம் அப்பல்லோ 7 முதல் அப்பல்லோ 17 வரையான, 11 ஆளேற்றிய பறப்புக்களை உள்ளடக்கியிருந்தது. இவையனைத்தும், புளோரிடாவிலுள்ள கெனடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டன. அப்பல்லோ 2 இலிருந்து அப்பல்லோ 6 வரை, ஆளில்லா சோதனைப் பறப்புகள். முதல் ஆளேற்றிய பறப்பாகத் திட்டமிடப்பட்டிருந்த அப்பல்லோ 1, ஏவுதளச் சோதனையொன்றின்போது தீப் பிடித்து, மூன்று விண்வெளிவீரர்களும் இறந்துபோயினர். முதல் ஆளேற்றிய பறப்பில் சற்றேர்ண் 1-B ஏவுவாகனம் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து வந்த பறப்புகள் அனைத்தும், கூடிய சக்தி வாய்ந்த சற்றேர்ண் V ஐப் பயன்படுத்தின. இவற்றில் இரண்டு (அப்பல்லோ 7 உம் அப்பல்லோ 9 உம்) பூமிச் சுற்றுப் பாதைப் பயணங்கள். அப்பல்லோ 8 உம் அப்பல்லோ 10 உம் நிலாச் சுற்றுப்பாதைப் பயணங்கள். ஏனைய 7 பயணங்களும், சந்திரனில் இறங்கும் பயணங்களாகும். (இவற்றுள் அப்பல்லோ 13 தோல்வியடைந்தது.)
சுருக்கமாக, அப்பல்லோ 7, அப்பல்லோ கட்டளை மற்றும் சேவைக் கூறைப் (CSM) புவியின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 8 CSM ஐச் சந்திரனின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 9, லூனார் கூறை (LM), புவியின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 10, லூனார் கூறை (LM), சந்திரனின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 11, ஆளேற்றிக்கொண்டு நிலவிலிறங்கிய முதற் பயணமாகும். அப்பல்லோ 12, சந்திரனில், குறித்த இடத்தில் சரியாக இறங்கிய முதற் பயணம் என்ற பெயரைப் பெற்றது. அப்பல்லோ 13, சந்திரனில் இறங்கும் முயற்சியில் தோல்வியுற்றதெனினும், பேரழிவாக முடிந்திருக்கக்கூடிய பறப்பினுள் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பாகப் பயணக்குழுவைப் பூமியிலிறக்கி வெற்றிகண்டது. அப்பல்லோ 14, சந்திர ஆய்வுப் பயணத் திட்டத்தை மீண்டும் துவக்கியது. அப்பல்லோ 15, சந்திர ஆய்வுப்பயண வல்லமையில், நீண்ட தங்கு நேரம் கொண்ட LM, மற்றும் நிலவில் திரியும் வாகனம் மூலம், புதிய மட்டத்தை அறிமுகம் செய்தது. அப்பல்லோ 16 தான் சந்திரனின் உயர் நிலத்திலிறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும். அப்பல்லோ 17, அறிவியலாளரான, விண்வெளி வீரரைக் கொண்ட முதற் பயணமும், திட்டத்தின் இறுதிப் பயணமுமாகும்.
[தொகு] திட்ட நிறைவு
தொடக்கத்தில், அப்பல்லோ 18 தொடக்கம் அப்பல்லோ 20 வரை மூன்று மேலதிக பயணங்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பயணங்கள், விண்வெளி விமான உருவாக்கத்தின் நிதித் தேவைகளுக்காகவும், அப்பல்லோ விண்கலத்தையும், சற்றேர்ண் V ஏவு வாகனங்களையும், ஸ்கை லாப் திட்டத்துக்குக் கொடுக்கும் பொருட்டும், கைவிடப்பட்டது. ஒரு சற்றேர்ண் V மட்டுமே உண்மையில் பயன்படுத்தப்பட்டது; ஏனையவை நூதனசாலைக் காட்சிப்பொருள்களாயின.
[தொகு] அப்பல்லோவுக்கான காரணங்கள்
அப்பல்லோ திட்டமானது, சோவியத் யூனியனுடனான கெடுபிடிப் போர்ச் சூழலில், விண்வெளித்தொழில் நுட்பத்தில், அமெரிக்கா, சோவியத் யூனியனிலும் தாழ்ந்த நிலையிலிருந்ததற்குப் பதிலளிக்குமுகமாகவே, ஓரளவுக்கு ஒரு உளவியல்சார்-அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் தூண்டப்பட்டது. இதில் அது மிகத் திறமையான முறையில் வெற்றிபெற்றது. உண்மையில் ஆளேற்றிய விண்பறப்புக்களில் அமெரிக்காவின் மேலாண்மை, முதலாவது அப்பல்லோ பறப்புக்கு முன்னரே, ஜெமினி திட்டம் மூலம் பெறப்பட்டது. தங்களுடைய N-1 ராக்கெட்டுகளை முழுமை நிலைக்குக் கொண்டுவர இயலாமை காரணமாக சோவியத் சந்திரனுக்குச் செல்வது தடைப்பட்டதுடன், 1990 கள் வரை அவர்கள் ஒரு நிலவுத் திட்டத்தைக் கொண்டிருப்பதையும் தடுத்துவந்தது.
அப்பல்லோத் திட்டம் தொழில்நுட்பத்தின் பல துறைகளுக்குத் தூண்டுதலாக அமைந்தது. லூனாரிலும், கட்டளை module இலும் பயன்படுத்தப்பட்ட, ஒரேமாதிரியான, பறப்புக் கணனியே ஒருங்கணைந்த சர்க்கியூட்டுகளையும், magnetic core memory ஐயும் பயன் படுத்திய முதற் சந்தர்ப்பமாகும். இக் கணனிகள் அப்பல்லோ வழிகாட்டுக் கணனிகள் (AGC - Apollo Guidance Computer) என அழைக்கப்பட்டன. Apollo rapidly forced Texas Instruments to make them work, and provided the crucial first customer when simple integrated circuits cost more than $1000/chip (in 1960 dollars). The fuel cell developed for this program was the first practical fuel cell. Computer controlled machining (CNC) was pioneered in fabricating Apollo structural components.
Many astronauts and cosmonauts have commented on the profound effects that seeing earth from space has had on them. One of the most important legacies of the Apollo program was the now-common, but not universal view of Earth as a fragile, small planet, captured in the photographs taken by the astronauts during the lunar missions. These photographs have also motivated many people toward environmentalism and space colonization.
[தொகு] நானாவித தகவல்கள்
அப்பல்லோ திட்டத்துக்கான செலவு: $25.4 பில்லியன்
சந்திரனிலிருந்து கொண்டுவரப்பட்ட சந்திரப் பொருட்களின் அளவு: 381.7 கிகி
அப்பல்லோ என்ற பெயர் கிரேக்கக் கடவுளைக் குறிக்கும்.
[தொகு] பயணங்கள்
அப்பல்லோ பறப்புகளில் கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம், சற்றேர்ண் ராக்கெட்டுகளை வடிவமைத்த மார்ஷல் விண்வெளிப் பறப்பு மையம், பறப்புகளை, சற்றேர்ண் - அப்பல்லோ (SA) என்று குறிப்பிட, கெனடி விண்வெளி மையம் அப்பல்லோ - சற்றேர்ண் (AS) என்று குறிப்பிடுகிறது.
[தொகு] ஆளில்லா சற்றேர்ண் 1
- SA-1 - S-1 ராக்கெட்டின் சோதனை
- SA-2 - S-1 ராக்கெட்டின் சோதனை மற்றும், வானொலி ஒலிபரப்பு, காலநிலை என்பவற்றின் தாக்கங்களைப் பரிசோதிக்க, 109,000 லீற்றர்களை ஏற்றிச் செல்லல்.
- SA-3 - SA-2 போல
- SA-4 - நிறைவுக்கு முந்திய இயந்திர நிறுத்தத்தின் தாக்கம் பற்றிய சோதனைகள்.
- SA-5 - live முதற் பறப்பு, இரண்டாம் கட்டம்.
- A-101 - Tested the structural integrity of a boilerplate Apollo Command and Service Module
- A-102 - Carried the first programmable computer on the Saturn 1 launch vehicle; last test flight
- A-103 - carried Pegasus satellite which investigated micrometeorite impacts in Earth orbit
- A-104 - A-102 போல
- A-105 - A-102 போல
[தொகு] ஆளில்லா Pad Abort Tests
- Pad Abort Test-1 - Launch Escape System ignited at ground level
- Pad Abort Test-2 - same as Pad Abort Test-1
[தொகு] ஆளில்லா லிட்டில் ஜோ II
- A-001 - test launch escape system after launch
- A-002 - A-001 போல
- A-003 - A-001 போல
- A-004 - A-001 போல
[தொகு] ஆளில்லா அப்பல்லோ-சற்றேண்
- AS-201 - Saturn IB ராக்கெட்டின் முதற் சோதனைப் பறப்பு.
- AS-203 - நிறையற்ற தன்மையை S-IVB இன் எரிபொருட் தாங்கியில் பரிசோதித்தல்.
- AS-202 - கட்டளை மற்றும் சேவை Module இன் துணை சுற்றுப்பாதைச் சோதனைப் பறப்பு.
- அப்பல்லோ 4 - சற்றேர்ண் V booster பரிசோதனை
- அப்பல்லோ 5 - சற்றேர்ண் IB booster பரிசோதனையும் நிலா Module உம்.
- அப்பல்லோ 6 - சற்றேர்ண் V booster இன் ஆளில்லாப் பரிசோதனை
[தொகு] ஆளியக்கியவை
- அப்பல்லோ 1 - விமானிகள் குழு சோதனை முயற்சியொன்றிபோது அழிந்தனர்
- அப்பல்லோ 7 - முதலாவது ஆளேற்றிய அப்பல்லோ பறப்பு
- அப்பல்லோ 8 - நிலவுக்கு முதலாவது ஆளேற்றிய பறப்பு
- அப்பல்லோ 9 - நிலா Module இன் முதலாவது ஆளேற்றிய பறப்பு
- அப்பல்லோ 10 - நிலவைச் சுற்றிய,நிலா Module இன் முதலாவது ஆளேற்றிய பறப்பு
- அப்பல்லோ 11 - நிலவில் முதல் மனிதனின் இறக்கம்.
- அப்பல்லோ 12 - நிலவில் முதலாவது அச்சொட்டான இறக்கம்
- அப்பல்லோ 13 - வழியில் ஒட்சிசன்தாங்கி வெடிப்பினால் குலைந்துபோன இறக்கம்.
- அப்பல்லோ 14 - அலன் ஷெப்பேட், சந்திரனில் நடந்த முதல் அசல் விண்வெளி வீரரானார்.
- அப்பல்லோ 15 - லூனார் ரோவர் வாகனத்துடன் முதலாவது பயணம்.
- அப்பல்லோ 16 - சந்திர உயர் நிலத்தில் முதல் இறக்கம்.
- அப்பல்லோ 17 - நிலவுக்குக் கடைசி ஆளேற்றிய பறப்பு. (இது வரை...)
[தொகு] பின் தொடர்ந்த திட்டங்கள்
- ஸ்கை லாப்
- அப்பல்லோ-சோயுஸ்
[தொகு] பின் வருவனவற்றையும் பார்க்கவும்
- அப்பல்லோ சந்திர இறக்க ஏமாற்றுக் குற்றச்சாட்டுகள்
முன்னைய திட்டங்கள்: ஜெமினி திட்டம் |
அடுத்த திட்டங்கள்: விண்வெளி விமானத் திட்டம் |
[தொகு] மேலதிக வாசிப்பு
- Gene Kranz, Failure is Not an Option. Factual, from the standpoint of a chief flight controller during the Mercury, Gemini, and Apollo space programs.