அன்ரன் பாலசிங்கம் காலமானார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 தனது 68 ஆவது வயதில் லண்டனில் காலமானார். இவர் அண்மைக் காலத்தில் புற்று நோய்க்கும், 90களிலிருந்து நீரழிவு நோய்க்கும் உட்பட்டிருந்தார்.
பொருளடக்கம் |
[தொகு] உடல் நிலை பாதிப்பு
2000 ஆம் ஆண்டு நீண்ட காலமாக இருந்த நீரிழிவு நோய் காரணமாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துப் போனதால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக, 2006 நவம்பர் மாதம் வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச்சைகள் போன்ற உடலின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ளதை இங்கிலாந்தில் வைத்தியர்கள் உறுதி செய்தனர்.[1][2].
[தொகு] தேசத்தின் குரல் விருது
அன்ரன் பாலசிங்கத்துக்கு "தேசத்தின் குரல்" எனும் கௌரவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறிவித்துள்ளார்.[3]
[தொகு] அன்ரன் பாலசிங்கத்தின் மறைவின் விளைவுகள்
அன்ரன் பாலசிங்கம் த.வி.பு மிதவாதத் தலைவராக பொதுவாக கருதப்பட்டவர்[4]. இந்த கூற்றை அவரின் அரசியல் எதிரியான கதிர்காமரும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது [5]. இவரே த.வி.பு வெளிப்படையாக விமர்சிக்க பலம் பொருந்திய த.வி.பு தலைவராகவும் இருந்தார். தாய்லாந்து பேச்சு வார்த்தைகளின் போது புலிகள் 'ஆடம்பர பொருட்களை' கொள்ளனவு செய்ததை நகைச்சுவையாக மறைமுகமாக சுட்டிக் காட்டியது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Anton Balasingham afflicted by rare cancer. தமிழ்நெட். இணைப்பு 2006-11-25 அன்று அணுகப்பட்டது.(ஆங்கிலம்)
- ↑ Tamil Tiger negotiator has cancer. பிபிசி. இணைப்பு 2006-11-25 அன்று அணுகப்பட்டது.(ஆங்கிலம்)
- ↑ பாலாண்ணைக்கு "தேசத்தின் குரல்" கௌரவம்: தமிழீழத் தேசியத் தலைவர் அறிவிப்பு
- ↑ பிபிசி செய்தி
- ↑ இந்து பத்திரிகை
[தொகு] வெளி இணைப்புக்கள்
- 20ஆம் நூற்றாண்டின் 100 தமிழர்கள் - தமிழ் தேசியம் (தமிழ்)/(ஆங்கிலம்)
- அன்ரன் பாலசிங்கம் மறைவு பிபிசி தமிழோசை (தமிழ்)
- அன்ரன் பாலசிங்கம் மறைவு - ஐக்கிய இராச்சிய டைம்ஸ் செய்தி (ஆங்கிலம்)
- தேசத்தின் குரல் - ஆசியன்டிரிபியூன் (ஆங்கிலம்)