விசை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றுக்கு விசை என்று பெயர். சுருக்கமாக ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம். விசை இல்லாமல் ஒரு பொருள் தன் நிலையில் இருந்து மாறாது. மரத்தில் இருந்து பழம் கீழே விழுவது, நீர் ஓரிடத்தில் இருந்து ஓரிடத்திற்குப் பாய்வது எல்லாம் நிலத்தின் ஈர்ப்பு விசையால் (நிலம் தன் பால் ஒரு பொருளை இழுக்கும் அல்லது ஈர்க்கும் விசை). இது தவிர, மின் விசை, காந்த விசை, நாம் நம் கையால் ஒருபொருளை உந்தித்தள்ளும் விசை என்று ஒரு பொருளின் மீது எவ்வாறேனும் விசை செலுத்தப்படலாம் (தொழிற்படலாம்).
விசையைப்பற்றி நியூட்டன் கூறிய விதிகள் பரவலாக அறிந்தவை.
இவ்விதிகளைக் கீழ்க்காணுமாறு கூறலாம்:
- விதி-1: ஒரு பொருளின் மீது விசை ஏதும் செலுத்தாதிருந்தால், அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான விரைவோடு சென்று கொண்டிருந்த தன் நிலையிலோதான் தொடர்ந்து இருந்துவரும்.
- விதி-2: ஒரு விசை ஒரு பொருளின் மிது செலுத்தும் பொழுது, அப்பொருளின் நகர்ச்சியில் ஏற்படும் விரைவு முடுக்கம் அவ்விசையின் திசையிலேயே இருப்பதுடன் அவ்விசைக்கு நேர் சார்புடையதும் ஆகும். (முடுக்கம் என்பது நேரத்திற்கு நேரம் விரைவே மாறுபடும் விரைவுதனைக் குறிப்பது. ) முடுக்கம்=கால அடிப்படையில் விரைவு மாறும் விரைவு)
- விதி-3: ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர் வினை உண்டு.
[விளக்கம் படங்களுடன் பின்னர் வளரும்]