யாழ் பரி யோவான் கல்லூரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாழ் பரியோவான் கல்லூரி யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்று. நல்லூரில் 1823 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இக்கல்லூரியானது பின்னர் யாழ்ப்பாணம் சுண்டிக்குளிப்பகுதிக்கு இடமாற்றப்பட்டது. பல வல்லுனர்களையும் உருவாக்கிய இந்தக் கல்லூரி 1998ஆம் ஆண்டில் தனது 175ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இக்கல்லூரி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறது. இக்கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் நடைபெறும் இரண்டு நாள் நடைபெறும் மிகப் பிரபலமான கிரிக்கட் போட்டியானது "Battle of the North" என்றழைக்கப் படுகின்றது.
பழைய மாணவர்கள் பெரும்பாலும் பல நாடுகளிலும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ளதால் இணையம் மூலமாக தொடர்பு கொள்கின்றனர். இது தவிரப் பல சங்கங்களும் இயங்குகின்றன.