மாலைதீவுகளின் கொடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாலைத்தீவுகள் குடியரசின் கொடி, வெள்ளை நிலைக்குத்தான பிறையை கொண்ட பெரிய பச்சை நிற செவ்வகத்தை மத்தியில் கொண்ட சிவப்பு நிற செவ்வக கொடியாகும். இதில் பிறையின் மூடிய பக்கத்தில் கொடிக் கம்பம் வரவேண்டும். இது யூலை 25 1965 இல் ஏற்றுகொள்ளப்பட்டது.
[தொகு] வரலாறு
பாரம்பரிய மாலைத்தீவுகளின் கொடி தனிசிவப்பு செவ்வகமாக காணப்பட்டது இது கடல் நீல நிற்த்திருந்து இலகுவாக பிரித்து காட்ட உதவியிருக்கும். இது 20ஆம் நூற்றாணடு வரையும் சுல்தான்களால் பாவிக்கப்பட்டுவந்தது.அதில் கருப்பு வெள்ளை நிற்த்திலான கொடிக்கம்பம் காணப்பட்டது.
1947 இல் வெண்பிறையும் பச்சை நிற செவ்வகமும் சேர்க்கப்பட்டு புதிய கொடி உருவாக்கப்பட்டது. இதில் பிறையின் கொம்புகள் கம்பத்தை நோக்கி காணப்பட்டமை சாதாரன இஸ்லாமிய வழக்கின் படி பிழையானதாகும். இக்கொடி 1947 வரை பாவனயில் இருந்த்தது. 1947 இல் இப்பிழை திருத்தப்பட்டு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
1965 ஆம் ஆண்டு கருப்பு வெள்ளை பகுதி நீக்கப்பட்டு புதிய கொடி அறிமுகமானது. அதே வருடம் சுல்தான் அக்கொடியில் ஐந்து மூலை நட்சத்திரம் ஒன்றை பிறையின் ந்டுவேயிட்டு அதனை தனது கொடியாக பயன்படுத்தினார், இதுவே இன்றும் மாலைத்தீவு அதிபரின் கொடியாக பயன்படுகிறது.
[தொகு] அடையாளங்கள்
சிவப்பு நிற செவ்வகம் முன்னாள், தற்போதைய, வரவிருக்கும் தேசிய வீரர்களின் வீரத்தை குறிக்கிறது. பச்சை தென்னை மரங்களை குறிக்கிறது அதன் பயன்பாடுகள் நினைவு கூறப்படுகிறது. வெண்ணிற பிறை ஒன்றுப்பட்ட இஸ்லாமிய விசுவாத்தை குறிக்கிறது.
[தொகு] படத்தொகுப்பு
கருப்பு வெள்ளை கொடிக்கம்பத்துட கூடிய கடைசி கொடி 1965 வரை |