மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் (Project Madurai) என்பது தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். இத்திட்டம் 1998-ல் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறையிலும் பின்னர் ஒருங்குறியிலும் (UNICODE) இலும் கிடைக்கின்றது. சுவிட்சர்லாந்தில் இருக்கும் டாக்டர் கே. கல்யாணசுந்தரம் மற்றும் அமெரிக்காவிலுள்ள குமார் மல்லிகார்ஜுன் அவர்களால் தமிழில் உள்ள அரிய பல நூல்கள் காலவோட்டத்தில் இல்லாமல் போய்விடக்கூடும் என்றாலும் என்றும் மின்னூல்களாக இருக்குமாறு மாற்றியமைக்க ஆரம்பிக்கப்பட்ட முயற்சியே மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டமாகும்.
15 அக்டோபர் 2003 கணக்கெடுப்பின்படி 195 புத்தகங்கள் தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறையிலும் 100 புத்தகங்கள் ஒருங்குறியிலும் கிடைக்கின்றன.