தனிச் சிங்களச் சட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எஸ்.டபில்யு.ஆர்.டி பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956இல் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "சிங்களம் மட்டுமே இந்நாட்டின் அரசகரும மொழி" என்ற சட்டமே தனிச்சிங்கள சட்டம் ஆகும். இதன் காரணமாக அரசுப்பணியில் உள்ள தமிழர்கள் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இச்சட்டத்தினை தமிழ் சிறுபான்மை சமுகத்தினர் எதிர்த்தனர். இதனால் 1958இல் தமிழர் வாழ் பகுதிளில் தமிழும் பயன்படுத்தப்படலாம் எனும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சுதந்திர இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டமாக, இச்சட்டம் பலராலும் கருதப்படுகிறது.