கே. எஸ். ராஜா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா அல்லது கே.எஸ்.ராஜா முன்னர் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பிரபலமாக இருந்த வானொலி அறிவிப்பாளர் ஆவார்.[1]
பொருளடக்கம் |
[தொகு] ஆரம்ப வாழ்க்கை
இவர் இலங்கையின் யாழ்ப்பாணம் காரைநகரில் நடுத்தர வகுப்புத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார். இவர் கொட்டடியில் வளர்ந்தார்.
[தொகு] இலங்கை வானொலியில்
இவர் இலங்கை வானொலியில் முன்னணி அறிவிப்பாளராக இருந்தபோது பல வானொலி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடத்தி வந்தார். இவரின் நிகழ்ச்சிகளுக்கு கடல் கடந்து தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் இருந்தனர்.[2]
இலங்கையில் மனித உரிமைகள்
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் |
---|
ஐயாத்துரை நடேசன் • பலனதராஜா ஐயர் • கே. எஸ். ராஜா • மயில்வாகனம் நிமலராஜன் • ரிச்சர்ட் டி சொய்சா • தேவிஸ் குருகே • தர்மரத்தினம் சிவராம் • ரேலங்கி செல்வராஜா • நடராஜா அற்புதராஜா • ஐ. சண்முகலிங்கம் • சுப்ரமணியம் சுகிர்தராஜன் • சின்னத்தம்பி சிவமகாராஜா
|
[தொகு] இறப்பு
1983 கறுப்பு யூலைக்குப் பிறகு இந்தியா சென்ற இவர் அப்போது அங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார். இந்நிலையில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது.
[தொகு] கொலை பற்றிய கருத்துக்கள்
ஈழ இயக்கங்களுள் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ரி. மதிவாணன் என்பவர் தெற்காசிய ஊடக சேவை (South Asian Media Service - SAMS)க்கு அளித்த பேட்டியில் கே. எஸ். ராஜா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் கொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்[3]. இது குறித்து ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவாநந்தாவிடம் வினவிய போது அவர் இக்குற்றச்சாட்டை நேரடியாக மறுக்காமல் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலைச் செய்யப்பட்டதாக கருதப்படும் சந்தர்ப்பங்களை எடுத்துக் காட்டினார்.[4]
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] ஆதாரங்கள்
- ^ The Hindu on his legendary status
- ^ EPDP accused of his murder
- ^ Ask Douglas Devananda questions series