கே.வி.சுப்பண்ணா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கே.வி.சுப்பண்ணா (K.V.Subbanna) (1932 - 2005) என்று அழைக்கப்படும் சுப்பண்ணாவின் முழுப்பெயர் குண்டகோடு விபூதி சுப்பண்ணா. இவர் ஒரு நாடகாசிரியர், கன்னட மொழியில் மிகவும் மதிக்கப்படும் எழுத்தாளர், பதிப்பாசிரியர். சுப்பண்ணா 1949இல் ஹெக்கோடு கிராமத்தில், துவக்கி வைத்த நீலகண்டேஷவர நாடக சமஸ்தே என்ற நீநாசம், உலகில் மிகவும் புகழ்பெற்ற நாடகப் பள்ளி. கன்னட நாடகக்கலைக்கும் மற்ற பிற நிகழ்த்துக் கலைக்கும் புத்துயிர் அளிக்கும் வண்ணம் செயல்பட்டவர் சுப்பண்ணா. இவருடைய கலைப்பணிக்காக ரேமொன் மக்ஸசே விருது வழங்கப்பட்டது.
ஷேக்ஸ்பியர், மொலியே, ப்ரெஹ்ட் போன்ற புகழ்பெற்ற நாடகாசிரியர்களின் படைப்புகளை கன்னட நாடகங்களாக அரங்கேற்றி மக்களுக்கு உலகின் சிறந்த நாடகங்களை நிகழ்த்திக் காட்டினார். பல கன்னட எழுத்தாளர்களையும் நாடகாசிரியர்களையும் ஊக்குவித்தது நீநாசம். அரசின் உதவியோடும் மற்ற உதவி நிறுவனங்கள் மூலமும் உதவி பெற்று, சிறந்த அரங்கு ஒன்றினை ஹெக்கோட்டில் கட்டினார் சுப்பண்ணா. மக்களின் ஆதரவு இவருக்கு மிக்க அதிகமாகவே இருந்தது. நாடகம் மட்டுமன்றி சிறந்த திரைப்படங்களையும் அரங்கேற்றினார். நீநாசம் மூலம் உலகின் சிறந்த கலைப்படைப்புகளை மக்களுக்கு கொண்டு சென்றதோடில்லாமல் மக்களின் கலையறிவு வளர்க்க பல வகுப்புகளையும் நடத்தினார்.
கன்னடத்தில் சிறந்த நாடக இலக்கிய வளர்ச்சிக்காக, அக்ஷர ப்ரக்ஷனா என்ற புத்தக பதிப்பு நிறுவனம் ஒன்றினையும் நிறுவினார்.
[தொகு] வெளி இணைப்புகள்
- சுப்பண்ணாவின் மறைவின் போது வெங்கட் சாமிநாதன் எழுதிய இரங்கல் உரை
- சுப்பண்ணா பற்றி நஞ்சுண்டன் காலச்சுவடில் எழுதிய கட்டுரை
- தி ஹிந்து நாளிதழில் சுப்பண்ணா பற்றிய கட்டுரை
- ரேமொன் மக்ஸசே விருது அமைப்பின் சுப்பண்ணா பற்றிய குறிப்பு
- எழுத்தாளர் உமா மஹாதேவன் தாஸ்குப்தா, சுப்பண்ணாவின் மறைவின் போது எழுதிய இரங்கல் கட்டுரை