கம்ப இராமாயணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தமிழில் காப்பியமாக்கியவர் கம்பர். இதனால் இவர் ஆக்கிய இந் நூல் கம்ப இராமாயணம் என வழங்கப்படுகின்றது. காப்பிய வளம், கற்பனைச் செறிவு, பாத்திரப் படைப்பு, இலக்கிய நயம் முதலியவற்றால் தமிழ் இலக்கியங்களில் தலையாய இடம் பெற்றுள்ளது கம்ப இராமாயணமே என்பர். மேற்படி அம்சங்களில் மூல நூலையே விஞ்சுமளவுக்குக் கம்பரின் படைப்பு அமைந்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.