அன்பே சிவம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அன்பே சிவம் | |
இயக்குனர் | சுந்தர்.சி |
---|---|
தயாரிப்பாளர் | கே.முரலிதரன் வி.சுவாமிநாதன் ஜி.வேணுகோபால் |
கதை | -திரைக்கதை- கமலஹாசன் -வசனம்- மதன் |
நடிப்பு | மாதவன் கமலஹாசன் நாசர் கிரன் ரதோட் சந்தான பாரதி பாலு ஆனந்த் செல்லத்துரை உமா ரியாஸ் கான் லக்ஸ்மி ரேட்டன் R.S. சிவாஜி நடராஜன் நெல்லை சிவா தாத்தா ராமச்சந்திரன் K.விஷ்வனாத் விஜய்கணேஷ் |
இசையமைப்பு | வித்யாசாகர் |
ஒளிப்பதிவு | ஆர்தர் வில்சன் |
படத்தொகுப்பு | சுரேஷ் பாய் |
வினியோகம் | லக்ஸ்மி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | 2003 |
கால நீளம் | 160 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
IMDb profile |
அன்பே சிவம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் கமலஹாசன், மாதவன்,நாசர்,கிரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2003 இல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
தொழிலாளர்களுக்காகப் போராடும் நல்லசிவம் (கமலஹாசன்) அந்நிய நாட்டினரின் விளம்பரங்களை விற்பனை செய்பவராக தொழில் புரியும் அன்பரசு (மாதவன்) இருவரும் புவனேஷ்வரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல இருக்கும் போது எதிர்பாராதா வண்ணமாக சந்தித்துக்கொள்கின்றனர்.அங்கு ஏற்படும் பிரச்சனை காரணமாக விமானத்தில் பயணிக்க முடியவில்லை எனவே இருவரும் புகையிரதம், பேருந்து ஆகிய பல ஊர்திகளின் மூலம் பயணம் செய்கின்றனர்.இதற்கிடையில் பல சோதனைகள், பல விபத்துகள் ,புகையிரதம் ஒன்று விபத்துக்குள்ளாக காயப்பட்ட ஒரு சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வேளையில் அவன் மரணிக்கவே.இதன் மூலம் "என்ன கடவுளையா இது" எனக் கேட்கும் அன்பரசு வாழ்க்கையினைக் கண்டு சலித்துப் போகின்றார்.பின்னர் நல்லசிவம் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவம், தொழிலாளர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடியாத படையாச்சி (நாசர்) போன்றவர்களைப்பற்றியும் கூறுகின்றார்.அன்பரசும் தனக்கு நல்ல சிவமே அண்ணனாக வரவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு அவரை தனக்கு ஏர்பாடு செய்யப்பட்டிருந்த கல்யாண மண்டபத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.அங்கு அவர் அதிர்ச்சி அடைகின்றார் காரணம் அவர் காதலித்திருந்த பெண்ணே அன்பரசிற்கு மணப்பெண்ணாக இருப்பதனையும் உணர்கின்றார்.இவ்வாறு இருந்தும் தனது காதலைத் தியாகம் செய்யும் நல்ல சிவம் தொழிலாளர்களுக்குத் தேவையான ஊதிய உயர்வுக்கான பத்திரத்தில் கையொப்பம் வாங்கியும் செல்கின்றார்.
[தொகு] துணுக்குகள்
- இத்திரைப்படத்தில் வரும் சில காட்சியமைப்புகள் ஆங்கிலத்திரைப்படங்களான ஃபாரஸ்ட் கம்ப்,மற்றும் 1987 ஆண்டில் வெளிவந்த Planes, Trains and Automobiles போன்ற ஆங்கிலத் திரைப்படங்களுடன் ஒத்துள்ளது குறிப்பிடத்தக்கது.