கோல்ஃப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோல்ஃப் (Golf) விளையாட்டு சுமார் 500 வருடங்களுக்கு முன் ஸ்காட்லாந்திலிருந்து தொடங்கியது. கோல்ஃப் மட்டை 'க்ளப்' (Club) எனப்படும், இந்த க்ளப் கொண்டு வெண்பந்தை மைதானத்திலுள்ள இடர்களில் மாட்டிக் கொள்ளாமல் சிறிய குழிக்குள் தள்ளுவதே ஆட்டம். பொதுவாக நன்கு பராமரிக்கப்படும், கவனத்துடன் உருவாக்கப்பட்ட 18 குழிகள் கொண்டது ஒரு கோர்ஸ். இந்தக் குழிகளில் ஒவ்வொன்றாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அடிகள் (Stroke) மூலம் பந்தை விழச் செய்பவரே வெற்றி பெற்றவர்.
கோல்ஃப் மைதானங்கள் மிகப் பெரியவையாக இருப்பதால், வீரர்கள் சில சமயம் சிறு பேட்டரி வாகனங்களில் குழிகளுக்கிடையே பயணம் செய்வதும் உண்டு. இது வர்த்தக உலகில் மிக அந்தஸ்துள்ள விளையாட்டாக இருப்பதால், இப்போட்டிகளில் பரிசுத் தொகையும், புகழும் அதிகம்.
[தொகு] மட்டைகள்
றும் புட்டர் (Putter) என்று மூன்று வகை மட்டைகள் உபயோகப்படுத்தப்படும். இவற்றிலும் மட்டை நுனியின் தடிமன் மற்றும் கணம் பல வேறுபாடுகள் உண்டு. ஆட்டவீரர்கள் ஒரு ஆட்டத்தில் 14 மட்டைகள் வரை உபயோகிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மரம் - இவ்வகை மட்டைகளை உபயோகித்து முதல் அடிகளை ஆடுவார்கள். இது பந்தை நீண்ட தூரம் அடிக்க பயன்படுத்தப்படும். சாதாரணமாக 220மீட்டர் முதல் 180மீட்டர் வரை பந்தை செலுத்த இதனை உபயோகப்படுத்தலாம்.
இரும்பு - இது 1 முதல் 10 வரை எண் கொண்ட வேறுபட்ட கணம் கொண்டது. 175மீட்டர் தூரம் முதல் குழி உள்ள பசுந்தரை (Putting Green) வரை பந்தைச் செலுத்த இரும்பு க்ளப்களை உபயோகப்படுத்தலாம்.
புட்டர் - குழி அமைந்துள்ள பசுந்தரையை (Putting Green) அடைந்த பின்னர் இவ்வகை மட்டையைக் கொண்டு பந்தின் மிக அருகில் நின்று மெதுவாக தட்டி பந்தை குழியை நோக்கி உருட்டுவார்கள்.
[தொகு] கோல்ஃப் மட்டை வீச்சு (Swing)
பந்தை நீண்ட தூரம் அடிப்பதற்கு, அருமையான மட்டை வீச்சு முறையை பயில்வது மிக முக்கியம். பந்தை முதலில் அடிக்கும் போது டீ (Tee) எனும் ஒரு சிறிய பின்னை தரையில் பொருத்தி அதன் மீது பந்தை வைத்து அடிக்க வேண்டும். அப்பொழுது அதன் பின்னரும் நமது வீச்சின் முழு வேகமும் பந்தை செலுத்த, அந்த வீச்சு தரையிலோ அல்லது பின்னிலோ படாமல் பந்தின் மீது மட்டும் பட வேண்டும். சிறந்த வீரர்கள் அருமையான வீச்சு உடையவர்களாக இருப்பார்கள்.