Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
Wikipedia:உங்களுக்குத் தெரியுமா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

Wikipedia:உங்களுக்குத் தெரியுமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மின் விலாங்குமீன்

மின் விலாங்குமீன்கள் 660 வோல்ட் திறனுள்ள மின் அதிர்வுகளை உண்டாக்கவல்லவை.

சீனப் பெருஞ் சுவர்

சீனப் பெருஞ் சுவர், மூன்றாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'காட்டுமிராண்டி'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காகக் கட்டப்பட்ட அரண் ஆகும். சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அல்ல, ஆனால் அவர்கள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பது ஆகும்.

திறந்த பாடத்திட்டங்கள்

எவ்வித கட்டணம், நிர்பந்தங்கள் இல்லாமல் அதி சிறந்த பல்கலைக்கழகங்களின் பாடங்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

டெடி கரடிக்குட்டி

டெடி கரடிக்குட்டி அமெரிக்க குடியரசுத் தலைவரான தியோடோர் ரூஸ்வெல்ட் அவர்களின் நினைவாகப் பெயரிடப்பட்டது. அவரது செல்லப்பெயர் டெடி என்பதாகும்.

சந்திராயன் I

சந்திராயன் I என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் 2007-08ல் நிகழ்த்தத் திட்டமிடப்பட்டுள்ள ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும்.

புணர்ச்சிப் பரவசநிலை

ஆண்களைப்போலன்றி பெண்களால் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடுத்து தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் பல பரவசநிலைகளைப் பெற முடியும்.

மௌ டம்

மௌ டம் (Mau tam) என்பது 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூங்கில் மரங்கள் எல்லாம் ஒன்றாக ஒருசேர பூத்து மடியும் ஒரு விந்தையான சுற்றுச்சூழல் நிகழ்வைக் குறிக்கும், மூங்கிற் சாவு எனப்பொருள்படும் மிசோ மொழிச் சொல்லாகும். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம். இம்மாநிலத்தின் நிலப்பகுதியில் முப்பது விழுக்காடு பகுதியில் மூங்கில் காடுகள் உள்ளன. மௌ டம் நிகழ்வின்போது மெலொகன்னா பாக்கிஃபெரா என்ற மூங்கில் இன மரங்களில் பெரும்பாலானவை ஒருசேரப் பூக்கின்றன. இதைத் தொடர்ந்து பெருச்சாளிகள் அளவுக்கதிகமாகப் பெருகிவிடுகின்றன. இதன் விளைவாக பிளேக் நோய் பரவ வாய்ப்புண்டாகிறது.

கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை

ஜியார்கு கேண்டர்

கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை அல்லது கேண்டரின் கோணல்கோடு வாதம் (Cantor's diagonal argument) என்பது ஜியார்கு கேண்டர் என்ற கணித அறிஞர் மெய்யெண்கள் (real numbers) எண்ணவியலா முடிவிலிகள் (uncountably infinite) என்று நிறுவுதற் பொருட்டு கையாண்ட நிறுவல் முறையைக் குறிக்கும். இந்த கணித உண்மைக்கு அவர் ஏற்கெனவே வேறு ஒரு முறையில் நிறுவல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதே முறையைக் கொண்டு பல முடிவிலி கணங்களின் (sets) எண்ணவியலா தண்மையை நிறுவ முடிந்தது. இதன் விளைவாக இவ்வாறான அனைத்து நிறுவல்களுக்கும் "கோணல்கோடு சார்பின் மாறி" என்பது பொதுப் பெயராயிற்று.

வெண்பா

வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். அவற்றுள் வெண்பா என்னும் வகையில் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரைக் கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது. திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்றி முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை.

உபுண்டு லினக்ஸ்

உபுண்டு லினக்ஸ் (ubuntu linux) என்பது, க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தின் வழங்கல்களில் ஒன்றாகும். டெபியன் க்னூ/லினக்ஸ் (debian GNU/Linux) இனை அடிப்படையாகக்கொண்டது இதில் அடங்கியுள்ள அத்தனை மென்பொருட்களும் தளையறு மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்று முழுதாக இலவசமாக கிடைக்கிறது. இவ்வழங்கல் பொதியப்பட்ட இறுவட்டுக்களை தபால் மூலம் பெறுவதற்கு கூட பணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை. Mark Shuttleworth என்பவருடைய Canonical Ltd எனும் நிறுவனம் உபுண்டுவுக்கு அநுசரணை வழங்குகிறது.

முதல் இந்திய விடுதலைப் போர்

திப்பு சூல்த்தான் 1799ல் இறந்த பின்னர் ஆங்கிலேயர்கள் திப்புசுல்த்தானின் குடும்பத்தாரை வேலூர் கோட்டையில் சிறை வைத்திருந்தனர். அங்கே, நிகழ்ந்த சீராடைபற்றிய புதிய சட்டத்தை எதிர்த்த வீரர்களை ஆங்கிலேயர் தண்டித்ததை அடுத்து ஒரு திட்டமிட்ட எழுச்சி நடந்தது. இதில் அங்கிருந்த 350 ஐரோப்பியரில் 100 பேர் கொல்லப்பட்டனர். இதுவே இந்திய விடுதலைக்கான முதல் எழுச்சி எனப்படுகின்றது.

மதியிறுக்கம்

சின்னம்

மதியிறுக்கம் (autism) என்பது ஒருவருடைய மக்கள் தொடர்பு திறன், சமுதாய அரங்கில் செயல்பாடுகள், ஆர்வம் கொள்ளும் துறைகள், நடத்தைப் பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி வேறுபாட்டைக் குறிக்கும்.

மதியிறுக்கத்தின் குறிப்பிட்ட நோய்க்கூறு முழுமையாக அறியப்படாவிட்டாலும், ஆய்வாளர்கள் சுற்றுச்சூழல் காரணிகளின் பாதிப்புக்கு ஒருவர் உள்ளாகும் வண்ணம் அமையும் மரபுக் கூறுகளினாலேயே இவ்வேறுபாடு ஏற்படுகிறது எனக் கருதுகின்றனர். சுற்றுச்சூழல் காரணிகளின் தண்மை, பருமை (magnitude), மற்றும் இயக்கமுறை ஆகியவற்றைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவி வந்தாலும், ஏழு முதன்மையான மரபணுக்கள் காரணிகளாக அறியப்பட்டுள்ளன.

அனைத்துலக நியமப்படுத்தல் நிறுவனம்

ISO என்பது அனைத்துலக நியமப்படுத்தல் நிறுவனத்தின் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகப் பிழையாகக் கருதப்பட்டு வருகிறது. பல்வேறு மொழிகள் வழங்கும் பல நாடுகள் இந்த நிறுவனத்தில் இருப்பதால், ஒவ்வொரு நாடும் தங்கள் மொழிகளிலுள்ள இந்நிறுவனத்தின் பெயர்களை வெவ்வேறு விதமாகச் சுருக்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமுகமாக சமம் எனப் பொருள் தரும் isos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ISO (ஐஎஸ்ஓ) என்ற பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

கலேவலா

கலேவலா (Kalevala) உலக இலக்கியத்தின் மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றாகும். இது பின்லாந்தின் தேசீய காவியம். இக்காவியம் 1849லேயே ஒழுங்கான வடிவத்தைப் பெற்றது. எனினும், இவற்றுக்கு நேரடியான அடிப்படைகளாக அமைந்த வாய்மொழிப் பாடல்கள் கி.பி. முதலாவது நூற்றாண்டு காலப் பகுதியிலேயே உருவாகிவிட்டன.

வெண்தலைக் கழுகு

வெண்தலைக் கழுகு (Haliaeetus leucocephalus),என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் கழுகினத்தில் ஒரு வகை (மற்றொரு வகை பொன்னாங் கழுகு). இக்கழுகு எளிதில் அறியக்கூடிய வகையில், தலை முழுவதும் வெள்ளையாய் இருக்கும். இதன் கூரிய நுனி உடைய வளைந்த அலகு மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடல் கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

இக்கழுகை அமெரிக்கக் கழுகு என்று சிறப்பித்துக் கூறும் வழக்கும் உண்டு. ஏனெனில், இதுதான் அமெரிக்க கூட்டு நாடுகளின் நாட்டுப் பறவை என சிறப்பிக்கப்படுவது.

மெக்கா கோலா

மெக்கா கோலாவின் சின்னம்

மெக்கா கோலா ஒரு வகை கோலா மென்பானமாகும். அமெரிக்க எதிர்ப்பு உணர்வு கொண்ட வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் அமெரிக்க மென்பானங்களான கொகா கோலா, பெப்சி போன்றவற்றுக்குப் பதிலாக அறிமுகமான பானம் இதுவாகும். இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்கா என்பதை பெயரில் கொண்டிருக்கும் இவ்வகைப் பானம் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் விற்பனையாகிறது. இப்பானம் முதலில் பிரான்சில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தானியங்கி இராணுவம்

மனித இராணுவ வீரர்கள் போன்றோ அவர்களுக்கு மேற்பட்ட செயல்திறனோ கொண்ட தானியங்கிகளால் கட்டமைக்கப்படும் இராணுவமே தானியங்கி இராணுவம் (Robot army) எனலாம். இன்று, போரில் கன்னிவெடிகளையும் குண்டுகளையும் விதைக்கவும் அகற்றவும், வேவு பார்க்க பல தரப்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், இவற்றின் திறன் மட்டுப்படுத்தப்பட்டதே. பல, மனிதர்களால் இயக்கப்படுவன. விரைவில் ,முற்றிலும் தாமாகவே இயங்கும் தானியங்கி இராணுவ அமைப்பை பயன்படுத்த ஐக்கிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. கொரியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளும் தானியங்கி இராணுவங்களை உருவாக்கி வருகின்றன.

றோய்யன் போர்

றோய்யன் போரே (Trojan War) கோமர் எழுதிய இரு பெரும் கிரேக்க காப்பியங்களான இலியட் மற்றும் ஓடிஸிக்கு பின்புலம் ஆகின்றது. இலியட் பத்து ஆண்டு நிகழந்த றோயன் போரின் இறுதி ஆண்டின் ஓரு ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிஸி றோயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான ஓடியஸ் நாடு திரும்புகையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது.

கிப்பன் பண்டம்

கிப்பன் பண்டங்களின் விலை-நுகர்தேவை கோட்டுப்படம்

கிப்பன் பண்டம் (Giffen good) என்பது விற்பனை விலை ஏறும்போது நுகரப்படும் அளவு மிகுதியாகும் தன்மையுடைய இழிவுப்பண்டத்தைக் குறிக்கும். கிப்பன் பண்டங்கள் அனைத்து சூழல்களிலும் இத்தன்மையைப் பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை. இவை உலகில் இருக்க வேண்டுமென்பதுகூட இல்லை. குறிப்பிட்ட மெய்யுலகு அல்லது கருத்தளவு சூழல்களில் மட்டும் இவை இத்தன்மையைக் கொண்டிருக்கலாம்.

பொதுவாக, விலை நெகிழ்திறன் (price elasticity) நுகர்தேவையுடன் (demand) எதிர்மறை உறவு கொண்டிருக்கும். இவ்வழக்கத்திற்கு மாறாக கிப்பன் பண்டங்கள் நேர்மறை விலை-நிகழ்திறன் உறவு கொள்வன. இதன் பின்புலச் சூழல்களின் பொருளியல் மாதிரியை இயற்றியவர் சர் இராபர்ட்டு கிப்பன் என ஆல்பிரடு மார்சல் என்பவர் தனது பிரின்சிப்பில்ஸ் ஆப் எகனாமிக்ஸ் ("பொருளியல் கோட்பாடுகள்") என்ற நூலில் தெரிவித்துள்ளார். கிப்பனின் நினைவாகவே இப்பொருளியல் நிகழ்வு கிப்பன் விளைவு என்றும் இப்பண்டங்கள் கிப்பன் பண்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

சீம்பால்

சீம்பால் (colostrum) என்பது பாலூட்டி விலங்குகளில் கன்று ஈனுவதற்கு சற்று முன்னரும் பின்னரும் தாயின் முலைகளில் சுரக்கும் பாலைக் குறிக்கும் சொல். இச்சொல் பொதுவாக பசு இனங்களின் இத்தகைய பாலைக் குறிக்கவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சீம்பால் மனிதர்களிலும், மாடுகளிலும் மஞ்சள் நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும். இது கூடுதலான அளவு மாவுச் சத்து, புரதம், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்புச் சத்து ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக, இதை உட்கொள்ளும் கன்றுகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க ஏதுவாகிறது. அதே நேரம், முழுமையாக வளர்ச்சியடையாத கன்றின் செரிமான முறைமை வலு குன்றியிருக்குமென்பதால் ஓரளவு வயிற்றுப்போக்கு ஏற்படவும் இது காரணமாகிறது. இவ்வயிற்றுப்போக்கும் ஒருவகையில் குழந்தையின் உடலில் தங்கியுள்ள (இறந்துபட்ட இரத்த சிவப்பணுக்களை உடைப்பதால் உருவாகும்) பைலிருபின் போன்ற வீண்பொருட்கள் வெளியேற உதவுகிறது. இதன் மூலம் மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

பொடா-பொடா

பொடா-பொடா என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப் படும் வாடகை மிதிவண்டிகளைக் குறிக்கும். மிதிவண்டி ஓட்டுபவர்களும் இவ்வாறு அழைக்கப்படுவதுண்டு.

பொருட்களையும் ஆட்களையும் கொண்டுசெல்ல இங்கு மிதிவண்டிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த மிதிவண்டிகளின் இருக்கைகளும் பின்னிருக்கைகளும் நன்கு பஞ்சு வைத்துத் தைக்கப்பட்டிருக்கும். விலைகுறைவான இம்மிதிவண்டிகள் ஆசியாவில் பயன்படுத்தப்படும் மூன்று சக்கர மிதிவண்டிகளைக் காட்டிலும் விலை குறைந்தவை. ஓட்டுவதற்கும் எளிதானவை.


Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com