Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சந்திராயன் I - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சந்திராயன் I

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சந்திராயன் I (Original Configuration)
சந்திராயன் I (Original Configuration)

சந்திராயன் I என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் 2007-08ல் நிகழ்த்தத் திட்டமிடப்பட்டுள்ள ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனமான பி.எஸ்.எல்.வி சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவிச் சுற்றுப்பாதையில் செலுத்தும். பின்னர் விண்கலமானது தன்னகத்துள்ள முன்னுந்து அமைப்பின் துணைகொண்டு நிலவைச்சுற்றிய 100 கி.மீ துருவச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். சந்திராயன் I விண்கலமானது சுற்றிவரக்கூடிய அமைப்பையும் நிலவில் இறங்கக்கூடிய அமைப்பையும் ஒருங்கே கொண்டிருக்கும்.

இப்பணித்திட்டத்தின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்து வருகிறார். இத்திட்டத்திற்கு இந்திய ரூபாயில் 3.8 பில்லியன் (சுமார் 83 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆய்வுக் கருவிகள் போக பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் பல்கேரியாவின் ஆய்வுக் கருவிகளும் இத்திட்டத்தில் அடங்கும்.

[தொகு] திட்ட இலக்குகள்

  • தொலையுணர்வுக் கருவிகளைப் பயன்படுத்தி நிலவின் முழுப்பரப்பிலும் விரவியுள்ள பல்வேறு தாதுக்கள் மற்றும் கதிரியக்க அணுக்கருத் தனிமங்கள் உள்ளிட்ட வேதிமூலகங்களின் பரவலையும், இட விவரங்களையும் முப்பரிமாணத்தில் அதிக துல்லியத்துடன் வரைபடமாக்கல். இதன் மூலம் கிடைக்கும் புதிய தகவல்கள் சூரியக் குடும்பத்தின், குறிப்பாக நிலவின், தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த புரியாத பல புதிர்களுக்கு விடையளிப்பனவாக இருக்கும்.
  • அறிவியல் ஆய்வுக் கருவிகள், நிலவுக் கலம், ஏவுவாகனம், டி.எஸ்.என் நிலையம் உள்ளிட்ட தரைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் கட்டுப்பாடு, ஒருங்கிணைத்தல் மற்றும் சோதித்தல்,ஏவுதல் மற்றும் ~100கி.மீ நிலவுச் சுற்றுப்பாதையை எய்துதல், சுற்றுப்பாதை ஆய்வுகள், தொலைத்தகவல் பரிமாற்றம், தெரிந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகளின் உடனடிப் பயன்பாட்டிற்கான தகவல் சேகரிப்பு மற்றும் தொகுப்பு ஆகியவற்றில் நிர்ணயித்த இலக்குகளை எட்டுதல்.

[தொகு] குறிப்பான ஆய்வுத் துறைகள்

  • நிரந்தரமான மறைவுப் பகுதிகளான வட மற்றும் தென் துருவப் பகுதிகளை அதிக துல்லியத்துடன் கூடிய கனிமவியல் மற்றும் வேதியியல் படமாக்கல்.
  • நிலவில், குறிப்பாக துருவப் பகுதிகளில் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்புக்கு அடியில் நீர் அல்லது உறைபனி உண்டா எனத் தேடுதல்.
  • நிலவின் உயர் நிலப் பாறைகளின் இறுதிஉறுப்பு தாதுப்பொருட்களை அடையாளம் காணுதல்.
  • நிலவுப் பெருங்குழியின் மத்திய மேட்டுப் பகுதியினைத் தொலையுணர்வுக்கு உட்படுத்துவதன் மூலம் நிலவின் புற ஓட்டினை வேதி நில அடுக்கு வரைவு செய்தல்.
  • செயற்கைக்கோள் பாதை நெடுக, நிலவின் மேற்பரப்பில் காணப்படும் உயர வேறுபாடுகளை வரைபடமாக்கல்.
  • நிலவின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த புரிதலில் புத்தொளி பெற வேண்டி, 10 கிலோ எலெக்ட்ரான் வோல்ட்டுக்கும் அதிகமான எக்ஸ்-கதிர் நிறமாலையை உற்றறிதல் மற்றும் 5 மீ துல்லியத்துடன் நிலவுப் பரப்பின் பெரும்பகுதியை உருவமொத்த வகையில் பதிவாக்கல்.

[தொகு] ஆய்வுக் கருவிகள்

இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் கருவிகள் ஆறும், ஆறு அந்நியக் கருவிகளுமாக 55 கிகி மொத்த நிறையுடைய ஆய்வுக்கருவிகள் அனுப்பி வைக்கப்படும்.

  • 5 மீ துல்லியமும் அனைத்துநிறப் பட்டையில் 40 கி.மீ வீச்சும் கொண்ட நிலப்பரப்பு படவரைவு நிழற்படக் கருவி (The Terrain Mapping Camera (TMC)).
  • 400 - 900 நேனோமீட்டர் பட்டையில் 15 நேனோமீட்டர் நிறமாலைப் பிரித்துணர்வுடனும், 80 மீ இடப் பிரித்துணர்வுடனும் கனிமவியல் வரைபடமாக்கல் புரியும் மீ நிறமாலை படிமமாக்கி (Hyper Spectral Imager (HySI).
  • மேற்பரப்பு இடவிவரங்களைத் தீர்மானிக்கும் லேசர் நிலவு நில அளவீட்டுக் கருவி (Lunar Laser Ranging Instrument (LLRI)).
  • எக்ஸ்-கதிர் ஒளிர்வு நிறமாலைமானி (X-ray Fluoresence Spectrometer).இது பின்வரும் மூன்று உறுப்புகளைக் கொண்டிருக்கும்:
    • 10 கி.மீ நிலப் பிரித்துணர்வுடன் 0.5 - 10 கி.எ.வோ அளவீடுகளுக்கான குறைந்த ஆற்றல் எக்ஸ்-கதிர் நிறமாலைமானி (Low Energy X-ray Spectrometer (LEX)).இது Si, Al, Mg, Ca, Fe மற்றும் Ti ஆகியவற்றின் பரவலை வரைவு செய்யும்.
    • 20 கி.மீ நிலப் பிரித்துணர்வுடன் 10 - 200 கி.எ.வோ அளவீடுகளுக்கான உயர் ஆற்றல் எக்ஸ்-கதிர் / காம்மா கதிர் நிறமாலைமானி (High Energy X-ray / Gamma ray Spectrometer (HEX)).இது U, Th, 210Pb, 222Rn உள்ளிட்ட கதிரியக்கத் தனிமங்களை அளவிடும்.
    • 2 - 10 கி.எ.வோ அளவிலான சூரியப் பாயத்தைக் கண்டறியும் சூரிய எக்ஸ்-கதிர் கண்காணிப்புக் கருவி (Solar Flux Monitor (SXM)).இது சூரியப் பாயத்தைக் கண்காணித்து LEX மற்றும் HEX-இன் முடிவுகளை நெறிப்படுத்தும்.
  • நிலவு மோதல் சலாகை (Moon Impact Probe (MIP) ஒன்று.இது சந்திராயன் - I கலத்தால் எடுத்துச்செல்லப்படும் ஒரு செயற்கைக்கோள். கலமானது நிலவைச் சுற்றிய 100 கி.மீ சுற்றுப்பாதையை அடைந்ததும் இச்செயற்கைக்கோள் வெளித்தள்ளப்பட்டு நிலவின்மீது மோதவிடப்படும். MIP ஆனது அதிக துல்லியத்துடன்கூடிய நிறை நிறமாலைமானி, எஸ்-பட்டை உயர அளவி, கண்ணுரு படமாக்கக் கருவி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com