மின்தேக்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இக் கட்டுரை மாற்றி அமைக்க வேண்டும். மின்காந்த சக்தி என்று சொல்வது சரியில்லை
மின்தேக்கி (Capacitor) என்பது மின்னூட்டத்தைத் தேக்கி வைக்கும் அல்லது சேமிக்கும் ஒரு மின் உறுப்பு. மின் சுற்றுக்களில், இலத்திரனியல் சாதனங்களில் மின்ன்னூட்டத்தைத் தேக்கிப் பயன்படுத்தவும், மின் அழுத்ததை நெறிப்படுத்தவும் மின் தேக்கி பயன்படுகின்றது.
மின்தேக்கிகளின் அடிப்படை வடிவமைப்பு இரு இணை தகடுகளை கொண்டது. இவ் இணை தகடுகளின் இடையே மின் புலம் ஒன்றை பேணுவதன் மூலம் மின்காந்த சத்தி தேக்கி வைக்கப்படுகின்றது.
மின்தேக்கி மின்காந்த சத்தி மூலத்திலிருந்து மின் புலம் ஒன்றை தோற்றுவித்து, அவ்மின்புலத்தில் மின்காந்த சத்தியை தேக்குகின்றது. மின்தேக்கி மின்காந்த சத்தியை தேக்கி வைக்கின்றதே தவிர, அது ஒரு மின்காந்த சக்தி மூலம் இல்லை. அதாவது, மின் தேக்கி மின்காந்த சத்தியை உற்பத்தி செய்வதில்லை.
பொதுவாக, மின்தேக்கி தற்காலிக மின்காந்த சத்தி சேமிப்புக்கே பயன்படுகின்றது. மின்தேக்கி மின்காந்த சத்தியை வேகமாக தேக்கி, வேகமாக வழங்க வல்லது. இவ் இயல்புக்கு மின் சுற்று, சாதன வடிவமைப்புக்களில் பல பயன்பாடுகள் உண்டு. உதாரணங்கள் கணினி நினைவகம், மின் அழுத்த சீர்படுத்தி, மினுங்கு விளக்குகள் ஆகும்.
ஒரு மின்தேக்கிக்கு ஒரு குறிப்பிட்ட மின்தேக்கதிறன் (capacitance) இருக்கும். இவ் தேக்கதிறன் இணை தகடுகளின் வடிவமைப்பில் தங்கியுள்ளது.
[தொகு] கணித விபரிப்பு
-
-
-
- மின்தேக்கதிறன் = மின்னூட்டு தேக்கம் / மின் அழுத்தம்
- C = Q / V
-
-
-
-
-
- மின்னோட்ட விகிதம் = மின்னூட்ட மாற்றம் / நேர மாற்றம்
- i = dq / dt
-
-
-
-
-
- மின்னோட்ட விகிதம் = மின்தேக்கதிறன் x மின் அழுத்த விகிதம்
- dq / dt = Cdv / dt
- i = Cdv / dt
-
-
மின் தேக்கி சரிவர இயங்கும் போது மின் தேக்கியின் ஊடாக மின்னோட்டம் இருக்காது. மேலே தரப்பட்ட மின்னோட்ட சமன்பாடு மின்தேக்கி வழங்க வல்ல மின்னோட்டத்தையே குறிக்கும்.
[தொகு] நுட்பியல் சொற்கள்
- மின்தேக்கி - Capacitor
- மின்தேக்கதிறன் - Capacitance
- தகடு - Plate
- இணை தகடுகள் - Parallel Plates
- மின்காந்த சத்தி - Electromagnetic Energy
- மின் சுற்று - Electric Circuit
- மின் புலம் - Electric Field
- மின்காந்த சத்தி மூலம் - Electromagnetic Energy Source
- மின்னூட்டம் - Electric Charges
- மின்னழுத்தம் - Voltage
- கணினி நினைவகம் - Computer Memory
- மின் அழுத்த சீர்படுத்தி - Voltage Regulator
- மினுங்கு விளக்குகள் - Flash Lights