ஐபிஎம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
"ஐபிஎம்" (IBM) என்றழைக்கப்படும் "இண்டர்னேஷ்னல் பிஸ்னஸ் மெஷீன்ஸ் கொர்பரேஷன்" (International Business Machines Corporation) அர்மாங்க் (நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிடமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம்.
[தொகு] வரலாறு
1911-ஆம் ஆண்டு கொம்ப்யூட்டிங்-டாபுலேட்டிங்-ரெகார்டிங் கொம்பனி (சி-டி-ஆர்) (Computing-Tabulating-Recording Company) என்ற பெயரிலே துவங்கிய இந்நிறுவனம் தொமஸ்.ஜெ.வாட்ஸன் சீனியர் என்பவரது திறமையால் மிகுந்த வளர்ச்சியடைந்தது.
1924-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 14-ஆம் நாளன்று 'இண்டர்னேஷ்னல் பிஸ்னஸ் மெஷீன்ஸ் கொர்பரேஷன்' ('ஐபிஎம்') என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.