Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
விவிலியம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

விவிலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இக்கட்டுரை கிறிஸ்தவ விவிலியம் தொடர்பானது.

 அமெரிக காங்கிரஸ் நூலகத்திலுள்ள கற்றன்பேக் விவிலியம்
அமெரிக காங்கிரஸ் நூலகத்திலுள்ள கற்றன்பேக் விவிலியம்

விவிலியம் ( புனித வேதாகமம், பைபிள்), யூதர் மற்றும் கிறிஸ்தவர்களது புனித நூல்களாகும். விவிலியம் உலகில் அதிகளவு மொழிகளுக்கு பெயர்க்கப்பட்ட நூல் எனற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரை கொண்டிருப்பினும் யூதரதும் கிறிஸ்தவரதும் விவிலியங்கள் வெவ்வேறானவையாகும் (சில பொதுவான பகுதிகளும் உண்டு). இவ்விருபாலாருமே விவிலியத்தை தங்கள் கடவுளது புனிதச் சொல்லாக நம்புகின்றனர். இக்கட்டுரை கிறிஸ்தவ விவிலியத்தைக் குறித்து மட்டுமே கருத்திற்கொள்ளும்.

விவிலியமானது பல தனி நூல்களின் தொகுப்பாகும். விவிலியத்திலிருக்க கூடிய இச்சிறு நூல்கள் தொடர்பில் கிறிஸ்தவ பிரிவினரான கத்தோலிக்கர், கீழக்கு மரபுவழி(Eastern Orthodox), சீர்த்திருத்தர்கள் ஆகியோரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக யெருசலேமின் இரண்டாவது ஆலயத்துக்குப் பின்னரான காலப்பகுதியின் நூல்களை (The Deuterocanonical books) கத்தோலிக்க,கீழக்கு மரபுவழி,மற்றும் சில சீர்த்திருத்த திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் நூல்களாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பெரும்பாலான சீர்த்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை ஏற்றுக்கொள்வதில்லை. மேலும் இந்நூல்கள் யூதமத விவிலியத்திலும் காணப்படுவதில்லை. இச்சிறு வேறுபாடுகளை தவிர்த்தவிடத்து விவிலியத்தில் வேறு வேற்றுமைகள் இலலை. மேலும் The Deuterocanonical புத்தகங்கள் சேர்க்கப்படுவதாலோ அல்லது அவை நீக்கப்படுவதாலோ கிறிஸ்தவத்தின் அடிபபடைகள் மாற்றமடைவ்தில்லை.

பொருளடக்கம்

[தொகு] கிறிஸ்தவ விவிலியம்

கிறிஸ்தவ விவிலியம் இரு பெரும் பிரிவுகளை கொண்டுள்ளது.அவையாவன முதலாம் ஏற்பாடு அல்லது பழைய ஏற்பாடு (எபிரேய புனித நூல்கள்) மற்றும் இயேசுவின் பிறப்புக்கு பின்னரான காலத்தை விளக்கும் புதிய ஏற்பாடு என்பனவாகும். விவிலியத்தின் மொழிபெயர்ப்பு மாறுப்பாடுகள் காணப்படுகின்றன.

[தொகு] விவிலிய வரலாறு

விவிலியத்திலுள்ள நூல்கள் வரலாற்றின் ஒவ்வொரு பகுதியை குறித்து கூறுகின்றன. விவிலியத்தில் கூரப்பட்டுள்ள வரலாற்றை பின்வ்வருமாறு சுருக்கலாம்.

  1. கடவுள் உலகையும் அதிலுள்ள சகலத்தையும் படைத்தார். மனிதனை அவர் சாயலாக படைதார். உலகம் பாவமற்றிருந்தது. மனிதன் அவரைவிட்டு நீங்கி பாவம் செய்கிறான்.
  2. மனிதனை பாவத்திலிருந்து மீட்க கடவுள் மனிதனுக்கு விளங்கும் வகையில் அவரை வெளிப்படுத்துகிறார்.
  3. கடவுள் அபிரகாமை அழைத்து புதிய நாட்டை கொடுக்கிறார். அவருக்கு பெரிய சந்ததியை கொடுப்பதாகவும் வாக்களிக்கிறார்.
  4. கடவுள் மோசே வழியாக சட்டங்களை கொடுக்கிறார்.
  5. இஸ்ரவேல் மக்கள் பவம் செய்வதும் பின்னர் கடவுளிடம் திரும்புவதுமாக சிலகாலம் கழிகிறது. அவர்கள் கடவுளின் சட்டங்களை மென்மேலும் அறிந்துகொள்கின்றார்கள்.
  6. இயேசு இவ்வுலகில் பிறக்கிறார். மோயீசனின் சட்டங்களை தெளிவுபடுத்தி அன்பு என்னும் புதிய சட்டத்தை கொடுக்கிறார்.
  7. அவரது சிலுவை மரணமும் உயித்தெலுதலும்.
  8. இயேசுவின் சீடரும் ஆதி கிறிஸ்தவரும்.

[தொகு] பழைய ஏற்பாடு

1723 இல் தரங்கம்பாடியில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் விவிலியம்
1723 இல் தரங்கம்பாடியில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் விவிலியம்

இது உலகம் படைக்கபட்டது தொடக்கம் இயேசு இவ்வுலகிற்கு வரும் வரையானா காலப்பகுதியில் கடவுள் மக்களூடன் தொடர்பு கொண்ட முறைகளையும் இஸ்ரவேலரின் வரலாறையும் கூறுகிறது. இதில் காணப்படும் நூல்கள் தொடர்பில் கிறிஸ்தவ பிரிவினரிடையே ஒற்றுமை கிடையாது.

  • பொதுவான நூல்கள்: இவை எல்லா கிறிஸ்தவ பிரிவினரின் விவிலியத்தின் ப்ழைய ஏற்பாட்டிலும் காணப்படும் நூல்களாகும். மொத்தம் 39 நூல்கள் இதில் அடங்கும். சீர்திருத்த திருச்சபைகள் இநூல்களை மட்டுமே தமது பழைய ஏற்பட்டில் கொண்டுள்ளன.
    • ஆகம நூல்கள் 5
    • வரலாற்று நூல்கள் 12
    • இலக்கிய நூல்கள் 5
    • தீர்க்கதரிசன நூல்கள் 17
  • கத்தோலிக்க விவிலியம்: பொதுவான நூல்களுக்கு மேலதிகமாக சில நூலகள் கத்தோலிக்க விவிலியத்தில் காணப்படுகின்றன.இவை மொத்தம் 7 நூல்களாகும். யெருசலேமின் இரண்டாவது ஆலயத்து கால நூல்களாகும். பொதுவான நூல்களையும் சேர்த்து மொத்தம் 46 நூல்கள் கத்தோலிக்க விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படுகிறது. மேலும் கத்தோலிக்க விவிலியத்தில்,சீர்திருத்த திருச்சபைகளுடன் பொதுவாக கொண்டுள்ள 39 நூல்களில் சில மேலதிக அதிகாரங்களும் காணப்படுகின்றன.
  • மரபு வழி திருச்சபை விவிலியம் : இவை கத்தோலிக்க பழைய ஏற்பாட்டு நூல்களுக்கு மேலதிகமாக 5 நூல்களை ஏற்றுக்கொள்கின்றனர்.மொத்தம் 51 நூல்கள் மரபு வழி பழைய ஏற்பாட்டிலுண்டு.

[தொகு] புதிய ஏற்பாடு

முதன்மைக் கட்டுரை: புதிய ஏற்பாடு

புதிய ஏற்பாடு இயேசுவின் பிறப்புடன் ஆரம்பிக்கிறது. இவ்வேற்பாட்டில் 27 நூல்கள் காணப்படுகின்றன. இவையனைத்திலும் இயேசு மையகர்தாவாக இருக்கிறார். கிறிஸ்தவத்தின் எல்லா உற்பிரிவினரும் இவற்றை மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். புதிய ஏற்பாடு விவிலியத்திலுள்ள நூல்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  • நற்செய்திகள் (4 நூல்கள்)
  • அப்போஸ்தலர் பணி (1 நூல்)
  • சின்னப்பர்(பவுல்) எழுதிய நிருபங்கள் (10 நூல்கள்)
    • உரோமருக்கு எழுதிய நிருபம்
    • கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது நிருபம்
    • கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது நிருபம்
    • கலாத்தியருக்கு எழுதிய நிருபம்
    • பிலிப்பியருக்கு எழுதிய நிருபம்
    • பிலேமோனுக்கு எழுதிய நிருபம்
    • தெசலோனிக்கியருக்கு எழுதிய முதலாவது நிருபம்
    • தெசலோனிக்கியருக்கு எழுதிய இரண்டாவது நிருபம்
    • எபேசியருக்கு எழுதிய நிருபம்
    • கொலோசெயருக்கு எழுதிய நிருபம்
  • போதனை நிருபங்கள் (4 நூல்கள்)
    • தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாவது நிருபம்
    • தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது நிருபம்
    • தீத்துவுக்கு எழுதிய நிருபம்
    • எபிரேயருக்கு எழுதிய நிருபம்
  • பொதுவான நிருபங்கள் (7 நூல்கள்)
    • யாக்கோபு எழுதிய நிருபம்
    • இராயப்பர் (பேதுரு) எழுதிய முதலாவது நிருபம்
    • இராயப்பர் (பேதுரு) எழுதிய இரண்டாவது நிருபம்
    • அருளப்பர் (யோவன்) எழுதிய முதலாவது நிருபம்
    • அருளப்பர் (யோவன்) எழுதிய இரண்டாவது நிருபம்
    • அருளப்பர் (யோவன்) எழுதிய மூன்றாவது நிருபம்
    • யூதா எழுதிய நிருபம்
  • வெளிபபடுத்தல்கள் (1 நூல்)

[தொகு] உசாத்துணை

  • Berlin, Adele, Marc Zvi Brettler and Michael Fishbane. The Jewish Study Bible. Oxford University Press, 2003. ISBN 0195297512
  • Anderson, Bernhard W. Understanding the Old Testament (ISBN 0139483993)
  • Head, Tom. The Absolute Beginner's Guide to the Bible. Indianapolis, IN: Que Publishing, 2005. ISBN 0789734192.
ஏனைய மொழிகள்
Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com