வடிவவியல் பட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாற்கரம் ஒன்றின் ஒரு சோடி அயல் பக்கங்கள் சம அளவு கொண்டவையாகவும், அதுபோல் ஏனைய இருபக்கங்களும் முன்னதிலும் வேறான சம அளவு கொண்டவையாகவும் இருக்ககும்போது, அந்த நாற்கரத்தின் வடிவம் வடிவவியல் பட்டம் (kite) எனப்படுகின்றது. நான்கு பக்கங்களும் ஒன்றுக்கொன்று சமனாகும்போது அது சாய்சதுரம் ஆகிவிடுகின்றது.
[தொகு] இயல்புகள்
வடிவவியல் பட்டம் பின்வரும் இயல்புகளைக் கொண்டது.
- இதன் சமனற்ற இரு சோடி பக்கங்களுக்கு இடையேயான கோணங்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று சமனானவை.
- மூலைவிட்டங்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தானவை (perpendicular).
- ஒரு மூலைவிட்டம், வடிவவியல் பட்டத்தை இரண்டு இருசமபக்க முக்கோணங்களாகப் பிரிக்கிறது. மற்ற மூலைவிட்டம் அதனை இரண்டு சர்வசமனான முக்கோணங்களாகப் (congruent triangles) பிரிக்கிறது.
- இவ் வடிவம் எப்பொழுதும் ஒரு சமச்சீர் அச்சையாவது (symmetry axis) கொண்டிருக்கும்.
- வடிவவியல் பட்டத்துக்கு ஒரு உள்வட்டம் (inscribed circle) உண்டு. அதாவது, இவ்வடிவத்தின் நான்கு பக்கங்களையும் தொடலியாகக் கொண்ட வட்டம் ஒன்றை அதற்குள் வரைய முடியும்.
- d1, d2 என்பன பக்கங்களின் நீளமாக இருப்பின், வடிவவியல் பட்டத்தின் பரப்பளவு
- இன்னொரு முறையில், a, b என்பன பக்கங்களின் நீளங்களாகவும், θ என்பது சமனற்ற பக்கங்களுக்கு இடையேயான கோணமாகவும் இருப்பின், பரப்பளவு
[தொகு] சிறப்பு நிலைகள்
- இவ்வடிவத்தின் நான்கு பக்கங்களும் சமமானவையாக இருப்பின் அது ஒரு சாய்சதுரம் ஆகும்.
- இரண்டு மூலைவிட்டங்களும் ஒன்றுக்கொன்று சமனானவையாக இருந்தால் அது ஒரு சதுரம் ஆகும்.