மொஹெஞ்சதாரோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மொஹெஞ்சதாரோ என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று. இது இன்றைய பாகிஸ்தானின் சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாகும். இது ஹரப்பாவை விட நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பாவில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ளது. இது கி.மு. 2600இல் உருவாக்கப்பட்டு இருக்கலாம். இது கி.மு. 1700-இல் சிந்துநதியின் தடம் மாறியதால் அழிந்திருக்கலாம். இது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் 1920களில் கண்டறியப்பட்டது.