Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பயனர் பேச்சு:Kanags - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பயனர் பேச்சு:Kanags

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வாருங்கள், Kanags!

விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--ரவி 11:19, 17 ஜனவரி 2006 (UTC)

பொருளடக்கம்

[தொகு] வாருங்கள் சிறீதரன்:

உங்கள் தளம் சென்று பார்த்தேன். பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. உங்கள் பங்களிப்புகளால் தமிழ் விக்கிபீடியா (த.வி.) மேலும் சிறப்பாகும். --Natkeeran 18:14, 22 ஜனவரி 2006 (UTC)

[தொகு] Well come

உங்கள் பங்களிப்பால் தமிழ் விக்கிப்பீடியா மேலும் செழுமை அடையும் என்பதில் ஐயமில்லை. உங்கள் பங்களிப்புகளை தொடருக.--ஜெ.மயூரேசன் 09:47, 26 மார்ச் 2006 (UTC)

[தொகு] பாராட்டு

திறந்த ஆவண வடிவம் கட்டுரையை மேம்படுத்துவது குறித்து மிகவும் மகிழ்ச்சி. உங்கள் பங்களிப்பு மிகவும் நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள் விக்கிப்பீடியாவில் தொடர்ந்தும் எழுதுங்கள். --Umapathy 14:54, 12 ஏப்ரல் 2006 (UTC)

[தொகு] அவுஸ்திரேலியா தமிழ் சஞ்சிகைகள்

அஸ்திரேலியா தமிழ் சஞ்சிகைகள் பற்றி தகவல்களை சில தகவல்களை பகிர்ந்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும். --Natkeeran 06:01, 15 ஏப்ரல் 2006 (UTC)

முயற்சிக்கிறேன் நற்கீரன். தங்களின் கனடா சஞ்சிகைகள் மற்றும் துறைசார் சஞ்சிகைகள் பற்றிய தகவல்கள் மிக நன்றாக இருக்கின்றன. அவுஸ்திரேலியத் தமிழர்கள் குறித்தும் சில தகவல்கள் சேர்த்து வருகின்றேன். விரைவில் தருவேன். நன்றிகள்.--Kanags 06:08, 15 ஏப்ரல் 2006 (UTC)
வெளிநாட்டுக் கோவில்கள் பற்றிய தங்கள் கட்டுரைகள் அனைத்தும் நன்று. -- சிவகுமார் 14:12, 25 மே 2006 (UTC)

[தொகு] அவுஸ்திரேலியக் கோவில்கள்

நற்கீரன், இந்தக் கட்டுரையில் அவுஸ்திரேலியாவில் உள்ள கோயில்கள் அனைத்தினதும் பட்டியல் உள்ளது. இதில் உள்ள கோயில்களில் சிலவற்றுக்கு மட்டுமே தனித்தனிப் பக்கங்கள் அமைக்க இருக்கிறேன். ஆதலால் தான் இந்தக் கட்டுரையை 'ஆஸ்திரேலியா' பகுப்புக்குள்ளும் இட்டிருந்தேன். பொதுவாக ஆஸ்திரேலியா பகுப்புக்குள் செல்பவர்கள் அவுஸ்திரேலியக் கோயில்கள் கட்டுரைக்குச் சென்று அங்கிருந்து தனித்தனியே கோயில்களைத் 'தரிசிக்கலாம்'. 'ஆஸ்திரேலியா' பகுப்புக்குள் மேலும் 'அவுஸ்திரேலியத் தமிழர்', 'அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம்' போன்ற கட்டுரைகளையும் இணைக்க இருக்கிறேன்.--Kanags 06:36, 15 ஏப்ரல் 2006 (UTC)

அப்படியா, நான் மீண்டும் அப்படியே இட்டுள்ளேன். இக்குறிப்பையும் அக்கட்டுரையிலும் வெட்டி ஒட்டிவிடுகின்றேன். விளக்கத்துக்கு நன்றி. --Natkeeran 06:47, 15 ஏப்ரல் 2006 (UTC)
விரும்பினால் ஒரு பகுப்பில் பிரதான கட்டுரையை சிறப்பாக குறிக்கலாம். --Natkeeran 06:53, 15 ஏப்ரல் 2006 (UTC)

[தொகு] "ழ்" சரியான உச்சரிப்பு "MP3" கோப்பு

நண்பரே, தமிழின் சிறப்பெழுத்தான "ழ்" இப்பொழுது யாருக்கும் சரியாக உச்சரிக்க தெரிவதில்லை. ஆகவே உங்களால் முடிந்தால் இந்த எழுத்தை திருத்தமாக உச்சரிக்க கூடிய ஒருவரை கொண்டு உச்சரித்து அதனை ஒரு "MP3" கோப்பாக சேமித்து விக்கிபீடியாவின் "ழ்" கட்டுரையில் தொடுத்து விட்டால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். - சுரேன்.

[தொகு] naming articles

Kanags, all these articles are about books. But the name of a book only will confuse the users of wikipedia

//ஈழத்து இலக்கிய ஆய்வு நூல்கள்

ஈழத்தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வு முயற்சி எதுவும் இதுவரை முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை அப்படியானதொரு முயற்சி காலப்போக்கில் மேற்கொள்ளப்படுமாயின் பின்வரும் நூல்கள் அம்முயற்சிக்கு உதவக்கூடும்.// மேற்படி கட்டுரை நூல்களைக் குறித்த கட்டுரை. ஆகவே பட்டியலில் ஒவ்வொரு நூலுக்கும் (புத்தகம்) என்பது குறிக்கப்படத்தேவையில்லை என நினைக்கிறேன். ஆனால் இணைப்புக்கு (அதாவது குறித்த நூலைப் பற்றிய கட்டுரைக்கு) (புத்தகம்) என்ற அடைமொழி குறிக்கப்படலாம் என்பதே எனது கருத்து.--Kanags!

yes, within the article u need not mention the (புத்தகம்) suffix. BUt the actual page with that book title should have the (புத்தகம்) suffix--ரவி 14:35, 21 ஏப்ரல் 2006 (UTC)

Kanags, ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை தொடர்பான விபரங்களை நான் உங்களது தளத்திலிருந்தே எடுத்து விக்கிப்பீடியாவில் இட்டேன். உங்களது தளத்தின் குறித்த பக்கத்தை வெளி இணைப்பாக சேர்த்து விடுங்கள். gopi

[தொகு] stub expansion request

kanags, it will be every nice if u could expand the stub article ஆஸ்திரேலியா as u r in that country. thanks in advance :)--ரவி 18:35, 22 ஏப்ரல் 2006 (UTC)

Yes I will. That will be my next project. I am collecting some info about Australia, oher major cities and other related articles.--Kanags 23:11, 22 ஏப்ரல் 2006 (UTC)

[தொகு] நாடுகளும் தமிழர்களும்

உங்கள் தொடர் பங்களிப்பு உச்சாகம் தருகின்றது. நன்றி.


அஸ்ரேலியா பற்றி மேலும் தகவல்கள் சேர்பதாக நீங்கள் மேலே தெரிவித்து இருந்தீர்கள். அப்படியான ஒரு எண்ணக்கரு எனக்கும் இருந்து வந்தது. அதைப்பற்றி ஆலமரத்தடியில் இட்டுருக்கின்றேன். உங்கள் கருத்து அறிய ஆவல். நன்றி. --Natkeeran 03:46, 23 ஏப்ரல் 2006 (UTC)

[தொகு] உள் இணைப்புகள் பற்றி சிறு குறிப்புகள்

  • ஒரு முறை ஒரு பக்கத்தில் ஒரு பொருளை பற்றி உள்ளிணைப்பு தந்தால், அதை மீண்டு உள்ளிணைப்பது செய்வது தேவையற்றது.
  • உள்ளிணைப்பு தரும்போது கவனிக்கத்தக்கது:
யாழ் இந்துக் கல்லூரியிலும்
யாழ் இந்துக் கல்லூரியிலும்

நன்றி.--Natkeeran 03:59, 25 ஏப்ரல் 2006 (UTC)

நன்றி. இனிக் கவனத்திலெடுக்கிறேன்.--Kanags 04:03, 25 ஏப்ரல் 2006 (UTC)

[தொகு] நன்றி

சிறீதரன், chembox வார்ப்புரு திருத்தித் தந்தமைக்கு நன்றி. --C.R.Selvakumar 23:54, 10 ஜூன் 2006 (UTC)செல்வா

ஏதோ என்னாலானது. எத்தேன், மெத்தேன் போன்றவற்றை ஒரு பகுப்புக்குள் உள்ளடக்கவேண்டும்.--Kanags 00:24, 11 ஜூன் 2006 (UTC)


உங்களுக்கும் மின் துறை, இலத்திரனியல் பின்புலம் இருக்கின்றது போல தெரிகின்றது. மிக்க மகிழ்ச்சி. மேலும் விரைவாக அத்துறை பின்புலத்தை விரிவுபடுத்த முடியும். --Natkeeran 06:26, 12 ஜூன் 2006 (UTC)


வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. I learned about other Tamil encyclopedias later on.

1)Vaazhiviyar Kalanjiyam ( Encyclopedia )published by Tamil University  It is in 13 volumes and it costs Rs 700/= each.( Rs 9100/=.) 

2)  Ariviyar Kalai Kalanjiyam also published by Tamil University. This is also in 13 volumes and costs Rs Rs 5700/=. 

--Natkeeran 14:13, 23 ஜூன் 2006 (UTC)

[தொகு] கலைச்சொல்கள், கலைச்சொற்கள்

கலைச்சொல்கள், கலைச்சொற்கள் என்று இரண்டு மாதிரியும் எழுதுகின்றார்கள். எது சரி? இலக்கண பின்புலத்துடன் விளக்கம் தர முடியுமா. நன்றி. --Natkeeran 23:15, 23 ஜூன் 2006 (UTC)

இரண்டு மாதிரியும் எழுதப்படுவதில்லை. எனக்குத் தெரிய சொற்கள் தான் எங்கும் பயன்படுத்தப்படுகிறது. கூகிளில் சொல்களைத் தேடினீர்களென்றால் கிடைப்பது 19முடிவுகள்தாம். ஆனால் சொற்களைத் தேடினீர்களென்றால் கிடைப்பது 147,000. ஆறுமுகநாவலரின் நூல்கள் சொற்கள் என்று தான் சொல்லுகின்றன. எனினும் முறையான இலக்கண விளக்கத்தை (இனிமேற்தான் கற்கவேண்டும்:-)) பின்னர் இங்கு தருகிறேன். மேலும், பேச்சு வழக்கில் ஈழத்தில் சொல்லுகள் எனவும் பாவிக்கிறார்கள். இதில் இலக்கணப்பிழை இருப்பதாகத் தெரியவில்லை.--Kanags 23:35, 23 ஜூன் 2006 (UTC)
நன்றி.--Natkeeran 00:36, 24 ஜூன் 2006 (UTC)

[தொகு] கருத்து தெரிவிக்கவும்

Wikipedia பேச்சு:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு)--ரவி 08:44, 6 ஜூலை 2006 (UTC)

[தொகு] பிழையான பழைய பிரதியை நீக்கிவிடுதல் நன்று

பிழையான தலைப்புக்களை நகர்த்தல் மூலம் மாற்றலாம். ஆனால், பிழையான பழைய பிரதியை நீக்கிவிடுதல் நன்று. எதுவென்று சொல்லுங்கள் நீக்கிவிடுகின்றேன். --Natkeeran 13:01, 8 ஜூலை 2006 (UTC)

[தொகு] நிர்வாகி தரம்

அன்புடன் கனகு, உங்களை நிர்வாகி தரத்துக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். நிர்வாக வசதிகள் உங்கள் பங்களிப்புக்கு வசதியாக இருக்கும். நீங்கள் ஆட்சேபணை தெரிவிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். கோபி 16:04, 11 ஜூலை 2006 (UTC)

கோபி, தங்கள் பரிந்துரைக்கு நன்றிகள். எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதற்கு இன்னமும் காலம் இருப்பதாக நினைக்கிறேன். கொஞ்சக் காலம் பொறுத்திருங்கள்:))--Kanags 21:34, 11 ஜூலை 2006 (UTC)
பக்கங்களை நீக்குவதற்கு நிர்வாகியானால் நீங்களே செய்யலாம். பரிந்துரைக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. நேரமும் மிச்சமாகும். தொடர்சியாக ஆக்கபூர்வமாகப் பங்களிப்பை வளங்கிவருகின்றீர்கள் உங்களிற்கு விருப்பம் என்றால் தெரிவிக்கவும். --Umapathy 08:00, 23 செப்டெம்பர் 2006 (UTC)

[தொகு] நன்றி

பாராட்டுக்கு நன்றி. உங்களை போன்றவரின் உற்சாகமூட்டும் வசனங்கள் என்பணியை தொடர உதவும். --டெரன்ஸ் 09:30, 15 ஜூலை 2006 (UTC)

வார்ப்புரு:Newuser பக்கத்தைத் திருத்தியமைத்தமைக்கு நன்றி --Umapathy 12:11, 10 செப்டெம்பர் 2006 (UTC)

[தொகு] மேற்கோள் சுட்டும் முறை

கனகு, நீங்கள் எந்த மேற்கோள் சுட்டும் முறையை கையாளுகின்றீர்கள்?--Natkeeran 13:39, 20 ஜூலை 2006 (UTC)

தெரியவில்லை:)). அதற்கு ஏதாவது குறிப்பிட்ட முறை உள்ளதா?. தெரியப்படுத்தவும்.--Kanags 13:42, 20 ஜூலை 2006 (UTC)

en:Template talk:Cite book என்ற பக்கத்தையும், அந்த மேற்கோள் முறையை, கிப்பன் விளைவு கட்டுரையில் நான் பயன்படுத்தியுள்ளதையும் பாருங்கள். இது குறித்து ஒரு உதவிப் பக்கம் கூட எழுதலாம். -- Sundar \பேச்சு 13:44, 20 ஜூலை 2006 (UTC)

ஆமாம் கனகு, ஆங்கில சூழலில் என்ற இரண்டு முறைகள் (en:APA style and MLA) சமூக அறிவியல் மற்றும் humanities இயல்களுக்கு உண்டு. அவற்றுள் இலகுவானதாக APA எனக்கு படுகின்றது. மேலும் தகவல்களுக்கு:
--Natkeeran 13:50, 20 ஜூலை 2006 (UTC)

நன்றி, நற்கீரன், சுந்தர். சுருங்கச் சொன்னால், இப்படி எழுதுவது சரியான முறை:

சுப. சதாசிவம் (2001), சித்த மருத்துவம், வானதி பதிப்பகம், சென்னை அல்லது
சுப. சதாசிவம் (2001), சித்த மருத்துவம், வானதி பதிப்பகம், சென்னை

திருத்தம் - http://www.english.uiuc.edu/cws/wworkshop/writer_resources/citation_styles/apa/single_author.htm

  • சுப. சதாசிவம். (2001). சித்த மருத்துவம். சென்னை: வானதி பதிப்பகம்.

--Kanags 14:05, 20 ஜூலை 2006 (UTC)

[தொகு] வாக்குச் சேகரிப்பு :)

kanags,

  • தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது. அதிகாரி பொறுப்புக்கும் என்னை சுய நியமனம் செய்து உள்ளேன். இன்னும் போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. தங்கள் பொன்னான வாக்கை தவறாமல் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :)
  • ஏப்ரல் 2006லேயே தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவது குறித்த வேண்டுதலை உமாபதி இங்கு விடுத்துள்ளார். எனினும் உரிய கவனம் பெறாததால் இன்னும் போதுமான ஆதரவு வாக்குகள் பெறாமல் இருக்கிறது. அங்கும் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

மேற்கண்ட தளங்களில் பயனர் பக்கங்களை உருவாக்கும் போது மறக்காமல் உங்கள் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளை தாருங்கள். --ரவி 10:04, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி, விக்கிமூலத்தில் ஏற்கனவே எனது பொன்னான வாக்கைச் செலுத்தி விட்டேன். விக்கி செய்திகளுக்கு இப்போது அளித்து விட்டேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்.--Kanags 11:12, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

[தொகு] மற்றும்

கனகு, நீங்கள் மற்றும் என்பதை ஆங்கிலத்தில் and என்பது போல பயன்படுத்துவதாக தெரிகின்றது. தமிழில் and இல்லை என்றும், அப்படி மற்றும் பயன்படுத்துவது தமிழிற்கு பொருத்தமில்லை என்ற ஒரு கருத்து இருக்கின்றதே. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?--Natkeeran 16:17, 13 ஆகஸ்ட் 2006 (UTC)


[தொகு] firefox

பொதுவாக, தமிழ் விக்கிபீடியா மற்றும் ஆங்கில விக்கிபீடியா தளம் IEல் தெளிவாகத் தெரிவதாக தான் நினைக்கிறேன். firefoxல் சில வார்ப்புருக்கள் கட்டத்துக்கு வெளியே தெரியும். இது firefox பிரச்சினை என்றும் விக்கிபீடியாவில் ஒன்றும் செய்ய இயலாது என்றும் மு.மயூரன் ஒரமுறை என்னிடம் தெரிவித்து இருந்தார். எந்தப் பக்கத்தில் உள்ள frames பிரச்சினை என்று கூறினால், அதை நாம் இங்கு சரிசெய்ய இயலுமா என்று முயன்று பார்க்கலாம். html framesஐ சொல்கிறீர்களா இல்லை வார்ப்புரு borderகளை சொல்கிறீர்களா என விளங்க வில்லை. நன்றி--ரவி 09:22, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

நீங்கள் சொல்லும் html frames பிரச்சினை firefoxல் எனக்கு இல்லை. ஆங்கிலம், தமிழ் இரு தளங்களும் நன்றாகத் தான் வருகின்றன. பயர்பாக்ஸ் 1.5.0.6 பதிப்பு பார்க்கிறேன். உங்கள் விக்கிபீடியா விருப்பங்களில் skin பகுதியில் monobook (default) style இருக்கிறதா பாருங்கள். in firefox menu, check whether view--> page style is set as basic style. வேறு யோசனைகள் எதுவும் எனக்குத் தோன்றவில்லை--ரவி 00:52, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

நான் மேலே சொன்ன ஆலோசனைகள் தான் பயன் தந்ததா இல்லை தானாகவே சரியாகிவிட்டதா? சும்மா, தெரிந்துகொள்ளும் ஆர்வம் தான்..விக்கியும் சரி பயர்பாக்சும் சரி திடீர் திடீரென்று மக்கர் செய்வதும் பின்னர் அதுவே சரியாவதும் வாடிக்கை தான் :)--ரவி 10:59, 3 செப்டெம்பர் 2006 (UTC)

[தொகு] பாராட்டுக்கள்

நாள் தவறாமல் வந்து நாட்கள் குறித்த கட்டுரைகளை சேர்த்து வருவதற்கு நன்றி, மகிழ்ச்சி, பாராட்டுக்கள் :)--ரவி 08:59, 19 செப்டெம்பர் 2006 (UTC)

[தொகு] உருசிய நாட்டார் பாடல்

கனகு, நாட்டார் பாடல் கட்டுரை ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. இருப்பினும், உருசிய நாட்டார் பாடல் போன்ற பிற பகுதித் தகவல்களையும் பதிவேற்றினால் இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு கட்டுரையாக அமையும். தகவல் காத்திருப்பு வரிசையிலும் சேர்த்துவிடலாம். உங்களுக்கு உருசிய மொழி தெரிந்திருப்பதால் அவ்விக்கியில் சென்று தகவல்களைத் திரட்டித் தர முடியுமா? -- Sundar \பேச்சு 10:18, 7 அக்டோபர் 2006 (UTC)

ஒன்றும் சிக்கலில்லை, தகவல் கிடைக்கும்பொழுது சேர்த்துவிடுங்கள். -- Sundar \பேச்சு 09:13, 11 அக்டோபர் 2006 (UTC)

[தொகு] Wikipedia:இம்மாத பயனர் தெரிவுக் கட்டுரைகள்

Wikipedia:இம்மாத பயனர் தெரிவுக் கட்டுரைகள் போன்று இன்னொரு தொகுதியை தொகுக்க முடியுமா. அதற்குரிய Template அதன் பேச்சு பக்கத்தில் கிடைக்கின்றது. அனைத்து கட்டுரைகளையும் நீங்களே தெரிந்து தொகுத்தால் நன்றாக இருக்கும். நேர கட்டுப்பாடு கிடையாது. --Natkeeran 02:19, 21 அக்டோபர் 2006 (UTC)

[தொகு] குறிப்பு

கனக்ஸ், புதிய ஏற்றுக்கொள்ளத்தக்க வழிமாற்றுக்களை உருவாக்கும்போது அவற்றை சிறு தொகுப்புகளாக குறித்து விடலாமே? இது அண்மைய மாற்றங்கள் பக்கத்தை திறம்பட பார்வையிட மற்றவருக்கு உதவும். நன்றி--Ravidreams 20:03, 31 அக்டோபர் 2006 (UTC)

[தொகு] நவம்பர்

கனக்ஸ், நவம்பர் மாதத் தேதிக் கட்டுரைகளுக்கான skeletonகளை மட்டும் இட்டிருக்கிறீர்களே? விரைந்து அவற்றில் ஓரிரு தகவல்களாவது சேர்த்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். புதிய கட்டுரைகளாக இவற்றை நோக்குபவர்களுக்கு தமிழ் விக்கிபீடியாவின் தரம் குறித்த கேள்வி எழும் என்பது நீங்கள் அறியாதது அல்லவே? நன்றி.--Ravidreams 07:43, 9 நவம்பர் 2006 (UTC)

ரவி, நீங்கள் விடுப்பில் இருப்பீர்கள் என்ற துணிவில் தான் அப்படிச் செய்தேன். விளித்துக்கொண்டிருக்கிறீர்கள்:)). நவம்பர் 30 க்குள் நாளொன்றுக்கு ஒன்றாக அவற்றை மேம்படுத்துவேன். கட்டுரைப் பக்கம் இருந்தால் மற்றப்பயனர்கள் அவ்வப்போது இற்றைப்படுத்த இலகுவாக இருக்கும் என்றுதான் அப்படிச் செய்தேன்.--Kanags 08:02, 9 நவம்பர் 2006 (UTC)

ரொம்ப நாள் பழகிட்டீங்க என்பதற்காக உங்கள மன்னிச்சு விடுறேன்..:);) நான் இல்லாட்டியும் சுந்தர், கோபி (!!) போன்ற இன்ன பிற தரக் கண்காணிப்பாளர்கள் இருக்காங்க தானே? விடுப்பில் இருப்பது தொகுப்புகள் செய்யாமல் இருப்பதற்கு தான் (ஆனா..ரொம்ப கஷ்டமான வேலை இது..முதற்பக்கம் மூன்று வாரமாக இற்றைப்படுத்தப்படாமல் இருக்கு :() குறுங்கட்டுரைகளை உருவாக்கி வரும் புதியவர்களுக்கு நீங்க தரக்கண்காணிப்புக் குறிப்புகளை வழங்கி உதவலாமே?--Ravidreams 09:02, 9 நவம்பர் 2006 (UTC)

[தொகு] தகவல்கள்

நீங்கள் இட்ட தகவல்கள் இங்கு செய்திகளில் அப்படியே வாசிக்கப்பட்டது. --Natkeeran 18:13, 10 நவம்பர் 2006 (UTC)

எந்தத் தகவல்? எங்கு வாசிக்கப்பட்டது? ரவிராஜா படுகொலை குறித்த செய்திக்கட்டுரையா? பிற செய்தி ஊடகங்களில் விக்கிபீடியா கவனிக்கப்படுகிறது என்றால் அது நம் உழைப்புக்கு கிடைத்த மதிப்பு. வருங்காலத்தில் இன்னும் பொறுப்புடனும் தரத்துடனும் கட்டுரைகளை உருவாக்குவதற்கும் தகவல்களை இற்றைப்படுத்துவதற்கும் உள்ள அவசியத்தை வலியுறுத்துகிறது!--Ravidreams 18:57, 10 நவம்பர் 2006 (UTC)
நற்கீரன் மற்றும் ரவி, இந்தத் தகவல் ஊடகத்துறையில் நம்மீதுள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுகின்றது. இது எமக்கு ஊக்கத்தை அளிக்கும் ஓர் செய்தி. விக்கிசெய்திகள் ஆரம்பிக்கும் மேலும் சிறப்புறும் என்றே நம்புகின்றேன். --Umapathy 14:47, 11 நவம்பர் 2006 (UTC)

[தொகு] ஊடகவியலாளர்கள்

நன்றி கே. எஸ். ராஜா வையே முதன்மை படுத்தலாம். எப்படி செய்வது என தெரியாது நீங்களே செய்ய முடியுமா? :() --டெரன்ஸ் \பேச்சு 12:10, 17 நவம்பர் 2006 (UTC)

[தொகு] நாட்குறிப்புகள்

கனக்ஸ், ஓரிரு நாட்கள் முன்னரே நாட்கள் குறித்த கட்டுரைகளை எழுதி விட்டீர்கள் என்றால், (ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை மேம்படுத்தியும் தந்தால்), முதற்பக்கத்தில் ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளது போல் இன்று என்ற தலைப்பில் ஒரு பகுதி தொடங்கலாம்.--Ravidreams 13:44, 4 டிசம்பர் 2006 (UTC)

ரவி, இன்றிலிருந்து குறைந்தது இரண்டாவது எழுத முயற்சிக்கிறேன்.--Kanags 20:29, 4 டிசம்பர் 2006 (UTC)

நன்றி, கனக்ஸ். இனி இதை முதற்பக்கத்தில் போடப் பார்க்கிறேன் !--Ravidreams 09:39, 6 டிசம்பர் 2006 (UTC)

[தொகு] தமிழர் தகவல்கள்

  • இணையான தமிழ்த் திகதியும் தந்தால் நன்று.
  • தமிழர் நாட்காட்டிகள் சிலவற்றை பெற்றீர்கள் என்றால், அவற்றில் இருந்தும் சில தகவல்களை சேர்த்தால் நன்றாக இருக்கும்.

எல்லாம் நன்றாகத்தான் இருக்கும், நேரம் :-); --Natkeeran 09:10, 6 டிசம்பர் 2006 (UTC)

தமிழ்த் திகதி ஒவ்வொரு வருடமும் மாறுபடலாம் என நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. எனினும் நாட்காட்டியைப் பார்க்கிறேன். நேரம்!!--Kanags 09:19, 6 டிசம்பர் 2006 (UTC)
ஆமாம் தமிழ்த் திகதிக்கும் ஆங்கிலத் திகதிக்கும் linear தொடர்பு இல்லை. அதாவது +- போட்டு நிர்மாணிக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் வேறுபடும். அதுமட்டுமல்ல, வெவ்வேறு பஞ்சாங்கள் வெவ்வேறு திகதிகளையும் தருகின்றன. தமிழ்த் திகதிக்குள் இவ்வளவு மர்மமா!

[தொகு] வேண்டுகோள்

சிறீதரன், டிசம்பர் நாட்களை முடித்தபின்னர் தொடர்ந்து நாட்களுக்கான கட்டுரைகளைச் செய்ய உத்தேசித்திருக்கிறீர்களென்றால் மே மாத நாட்களைச் செய்யுங்கள். நான் ஏப்ரலுக்கான ஆரம்ப பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டேனாதலால் இந்த வேண்டுகோள். கோபி 14:36, 9 டிசம்பர் 2006 (UTC)

உங்கள் முதற்பெயர் கனக்ஸ்-ஆ, சிறீதரனா என்று எனக்கு இன்னும் குழப்பமாக இருக்கிறது. அதை தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன் :) சரி உண்மையான வேண்டுகோளுக்கு வருகிறேன். டிசம்பர் நாட்கள் குறித்த கட்டுரைகளை எழுதி முடித்தாலும் அன்றாட நாட்களுக்கான கட்டுரைகளை தொடர்ந்து சற்று முன்கூட்டியே கவனித்து மேம்படுத்தினீர்கள் என்றால் முதற்பக்கத்தில் இன்னும் தகவற் செறிவோடு காட்சிப்படுத்த ஏதுவாக இருக்கும். விக்கிபீடியா உள்ள மட்டும் முதற்பக்கத்தில் இன்றைய நாள் குறித்த கட்டுரைகள் வரும். அப்படிப்பட்ட முக்கியமான கட்டுரைகளை நீங்களும் கோபியும் முன்முயற்சி எடுத்து உருவாக்கியது நன்று. ஆக, உங்களின் கட்டுரை ஒன்று இனி தினம் முதற்பக்கத்தில் வரும் !!!--Ravidreams 22:11, 9 டிசம்பர் 2006 (UTC)

[தொகு] ஆண்டு அறிக்கை

கனகு, உங்களுடைய தொலைநோக்கிய, சற்று விரிவான கருத்துக்களை Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review நோக்கி பகிர்ந்தால் நன்று. நன்றி. --Natkeeran 02:13, 10 டிசம்பர் 2006 (UTC)

[தொகு] Kurów

Could you please write a stub http://ta.wikipedia.org/wiki/Kur%C3%B3w - just a few sentences based on http://en.wikipedia.org/wiki/Kur%C3%B3w ? Only 2-5 sentences enough. Please. Pietras1988 09:10, 10 டிசம்பர் 2006 (UTC)

PS. Article about Kurów is already on 121 languages ;). Pietras1988 09:10, 10 டிசம்பர் 2006 (UTC)

Very thx for article. You are great. Pietras1988 13:40, 10 டிசம்பர் 2006 (UTC)

You're welcome.--Kanags 20:13, 10 டிசம்பர் 2006 (UTC)
Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com