1 கனடா சதுக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1 கனடா சதுக்கம் (1 Canada Square) இலண்டனிலுள்ள அதியுயர்ந்த கட்டிடமாகும். 50 மாடிகளைக்கொண்ட, 244 மீட்டர் உயரமான இக்கட்டிடமே ஐக்கிய இராச்சியத்திலுள்ள மிக உயர்ந்த வாழ்வுக்குகந்த கட்டிடமாகும். (ஹட்டேர்ஸ்பீல்ட் (Huddersfield) என்னுமிடத்திலுள்ள, 330 மீட்டர் உயரமான எம்லே மூர் தொலைக்காட்சிக் கம்பமே நாட்டின் அதி உயரமான "அமைப்பு" ஆகும்.).
ரீச்மன் குடும்பத்துக்குச் சொந்தமான, ஒலிம்பியாவும், யோர்க்கும் என்ற கனடாவைச் சேர்ந்த நிறுவனத்தினால் கட்டப்பட்டமையாலேயே, இக்கட்டிடத்துக்குக் கனடா சதுக்கம் என்ற பெயர் வந்தது. "கனரி வார்வ்" (Canary Wharf ) பகுதியைக் கட்டும் முயற்சியில் இந் நிறுவனம் வங்குரோத்து நிலையடைந்தது.
இக்கட்டிடம் "கனரி வார்வ்"இன் (Canary wharf) ஒரு பகுதியாக இருப்பதால், இது கனரி வார்வ் கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
1996 ல், இங்கு, ஐரிஷ் குடியரசு இராணுவம் (IRA) என்ற தீவிரவாத இயக்கம் குண்டுத் தாக்குதல் நடத்தியது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- இலண்டனின் உயரமான கட்டிடங்கள்