புவிமையக் கோடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புவிமையக் கோடு என்பது வட துருவம், தென் துருவம் ஆகியவற்றுக்குச் சம அளவான தூரத்தில் புவியைச் சுற்றி இருப்பதாகக் கருதப்படுகின்ற கற்பனைக் கோடு ஆகும். புவிமையக் கோடு புவிக் கோளத்தை இரண்டு பிரிவிகளாகப் பிரிக்கின்றது. இக்கோட்டுக்கு வடக்கேயுள்ள பகுதி வட அரைக்கோளம் என்றும் தெற்கேயுள்ளது தென் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றது. புவிமையக் கோட்டின் நிலநேர்க் கோட்டு அளவு 0° ஆகும். இக்கோட்டின் மொத்த நீளம் ஏறத்தாள 40,075 கிமீ (24,901.5 மைல்கள்)ஆகும்.