பாபர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிறப்புப் பெயர்: | ஸாகிர்-உத்-தீன் மொகம்மத் பாபர் |
குடும்பப் பெயர்: | தைமூர் |
பட்டம்: | முகலாயப் பேரரசின் பேரரசன் |
பிறப்பு: | பெப்ரவரி 14, 1483 |
இறப்பு: | டிசம்பர் 26, 1530 |
வாரிசு: | ஹுமாயூன் |
திருமணம்: |
|
பிள்ளைகள்: |
|
பாபர் எனப்படும் ஸாகிருதீன் பாபர், அல்லது ஸாகிருதீன் முகம்மத் பாபர் (பெப்ரவரி 14, 1483 – டிசம்பர் 26, 1530) மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பேரரசன் ஆவான். இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவன் இவனே. இவன் 14 ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் இருந்த தைமூரியப் பேரரசை உருவாக்கிய தைமூர் பின் தராகே பர்லாஸ் (Tīmūr bin Taraghay Barlas) என்பவனுடைய நேரடியான பரம்பரையில் வந்தவனாவான். 13 ஆம் நூற்றாண்டில், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடர்ச்சியான பேரரசான மங்கோலியப் பேரரசை உருவாக்கிய கெங்கிஸ் கான் (Genghis Khan), பாபரின் தாய்வழி முன்னோனாகக் கருதப்படுகின்றான். பல பின்னடைவுகளை எதிர்கொண்ட போதும், இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற முகலாயப் பேரரசை உருவாக்குவதில் இவன் வெற்றி பெற்றான்.
[தொகு] பின்னணி
தற்கால உஸ்பெகிஸ்தானில் உள்ள, பெர்கானாப் பள்ளத்தாக்கில் (Fergana Valley) உள்ள அண்டிஜான் (Andijan) என்னும் நகரத்தில் 1483 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பாபர் பிறந்தான். பெர்கானாப் பள்ளத்தாக்கை ஆண்டுவந்த ஓமர் ஷேக் மீர்ஸா என்பவனுக்கும், அவனது மனைவியான குத்லுக் நிகர் கானும் என்பவளுக்கும் பாபர் மூத்த மகனாவான். இவன் மங்கோலிய மூலத்தைக் கொண்ட பார்லாஸ் என்னும் இனக்குழுவைச் சேந்தவன். எனினும், இந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், துருக்கிய மற்றும் பாரசீகப் பண்பாட்டைத் தழுவிக்கொண்டு, இஸ்லாம் மதத்தைச் சார்ந்து, துருக்கிஸ்தான் என்னும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். பாபரின் தாய் மொழி சகாட்டை (Chaghatai) என்பதாகும், ஆனாலும் அவன் பாரசீக மொழியையும் சரளமாகப் பயன்படுத்த வல்லவனாக இருந்தான்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- முகலாயப் பேரரசு
- முகலாய வம்சம்
[தொகு] வெளியிணைப்புகள்
- உஸ்பெக் இலக்கியம்-ஸாகிரித்தீன் முஹம்மத் போபர்
- முகலாயர் - பாபர்
- பாபரின் குறிப்புகள்
- பாபர் ஆட்சிக்காலம் தொடர்பான சிற்றோவியங்களும், பாபரின் சுயசரிதையில் இருந்து எடுத்த படங்களும்.
- இரானிக்கா கலைக்களஞ்சியம்: "ஸாகிர் அல் தீன் மொஹம்மத் பாபர்" முகலாயப் பேரரசின் நிறுவனர், இந்தியா, 15th 16th , Lehmann, F.
- குரு கிரந்த் சாஹிப்பில் பாபர் குரு நானக் தேவ் அவர்களின் அரசியல் எதிர்ப்பு.
- பாபர்