Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சி. ஜே. எலியேசர் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சி. ஜே. எலியேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பேராசிரியர் சி. ஜே. எலியேசர்
பேராசிரியர் சி. ஜே. எலியேசர்

பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், Christie Jeyaratnam Eliezer, 1918 - ஒக்டோபர் 3, 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் அபிமானியுமாவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். இவரது பெயரிலேயே 1948 வெளியிடப்பட்ட எலியேசர் தேற்றம் பௌதீகவியலில் இன்றும் பிரயோகிக்கப்படும் தேற்றமாகும்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

எலியேசர் அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று, பின்னர் லண்டன் கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி (PhD) பட்டம் பெற்றார். அங்கேயே 1949இல் பிரபல விஞ்ஞானியான போல் டிராக் (Paul Dirac, 1902-1984) அவர்களின் வழிகாட்டலில் டாக்டர் (DSc) பட்டமும் பெற்றார்.

[தொகு] பேராசிரியராகப் பணி

எலியேசர் பின்னர் கொழும்பு திரும்பி பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராகவும் விஞ்ஞானப் பீடத்தின் தலைவராகவும் கடமையாற்றினார். இவர் ஜெனீவா, வியன்னா, மும்பாய் நகரங்களில் ஜக்கிய நாடுகளின் சார்பாக அமைதிக்காக அணு சக்தி என்ற தலைப்பில் விசேட உரை ஆற்றவும் அழைக்கப்பட்டார்.

1959இல் மலேயா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியரானார். பின்னர் 1968இல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணிற்குக் குடியேறி லா ட்ரோப் (La Trobe) பல்கலைக்கழகத்தில் பிரயோக கணிதத்தில் பேராசிரியரானார். அங்கே அவர் பௌதீக விஞ்ஞான பீடத்தின் தலைவராகவும் பல்கலைக்கழகத்தின் பிரதி உப-வேந்தராகவும் இருந்தார். 1983இல் அங்கிருந்து இளைப்பாறினார்.

[தொகு] எலியேசரின் தேற்றம்

புரோத்தன் ஒன்றின் கூலோம் புலத்தினூடாக இலத்திரன் ஒன்று radially செல்லும் போது அவ்விலத்திரன் லோரன்ஸ்-டிராக் சமன்பாட்டின் படி எதிர்பார்த்தது போல புரோத்தனால் ஈர்க்கப்பட்டு மோதலை ஏற்படுத்தவில்லை. மாறாக, அது புரோத்தனிலிருந்து எதிர்க்கப்பட்டு நேரத்துடன் asymptotically அதிகரிக்கும் ஆர்முடுகலுடன் செல்கிறது என எலியேசர் நிறுவினார். இது எலியேசரின் தேற்றம் எனப்படுகிறது.[1]

[தொகு] தமிழ் ஆர்வலர்

அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமுகத்திற்கு இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. 1978 ம் ஆண்டில் விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ஆரம்பத் தலைவராக பதவியேற்று இங்கு குடியேறும் தமிழர்களுக்கு ஆணிவேராக உழைத்தது மட்டுமல்லாமல் 1983 ம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டபோது முழுமூச்சாக அம்மக்களின் விடிவுக்காக உழைத்தவரும் ஆவார். 1984 ம் ஆண்டின் அவுஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராகவும் பதவியேற்றார்.

[தொகு] அவுஸ்திரேலியாவின் உயர் விருது

இவர் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களுக்காகவும் கணிதத்துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவுஸ்திரேலிய அரசின் அதி உயர் Order of Australia விருது 1996 இல் வழங்கப்பட்டது.

[தொகு] தமிழீழத்தின் உயர் விருது

1997 ம் ஆண்டு தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது பேராசிரியருக்கு வழங்கப்பட்டது. முதல் முறையாக இவ் விருது தமிழீழத்துக்கு அப்பால் வாழும் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

[தொகு] குறிப்புகள்

  1. Eliezer, C.J., The hydrogen atom and the classical theory of radiation, Proc. Camb. Phil. Soc. 39, 173_ (1943)

[தொகு] வெளி இணைப்புகள்

Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com