Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பேச்சு:ஐக்கிய இராச்சியம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பேச்சு:ஐக்கிய இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிறப்பு கட்டுரை பதக்கம் ஐக்கிய இராச்சியம் ஒரு சிறப்புக் கட்டுரையாகும். இது விக்கிபீடியா பயனர்களால் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. இதன் தற்போதைய தரம் குறையாத வண்ணம் இதை மேலும் மேம்படுத்த உங்களை வரவேற்கிறோம்.
ஐக்கிய இராச்சியம் என்பது விக்கித் திட்டம் நாடுகளின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கங்களை திட்டப் பக்கத்தில் காணலாம்.

Mayooranathan, we need to translate the infobox country template. Then only it will refelect in this page. also we should use the infobox template for all country articles to maintain uniformity and to make the job easy--ரவி (பேச்சு) 05:47, 30 மே 2005 (UTC)

பொருளடக்கம்

[தொகு] Kudos for the translation!

இந்தக் கட்டுரையை நான் மொழி பெயர்க்க முயன்ற பொழுது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், பாராட்டத்தக்க வகையில் யாரோ? (Mayooranathan, arvinth?) மொழி பெயர்ப்பு செய்து வருகிறார்கள். இந்த கட்டுரை இதுவரை நான் UK பற்றி அறிந்திராத பல முக்கிய தகவல்களை தருகிறது. மொழிபெயர்ப்புக்கு நன்றியும் பாராட்டுக்களும் !--ரவி (பேச்சு) 09:48, 31 மே 2005 (UTC)

இன்னும் பதிவு செய்யாத ஒரு பயனராகவும் இருக்கலாம். பேச்சுப்பக்கத்தில் வரவேற்பு செய்தியை உள்ளிட்டேன். எனினும் அதற்குள் வேறு ஐ.பி. முகவரியிலிருந்து உள்ளீடு செய்யத்துவங்கி விட்டார் போலும். -- Sundar 09:57, 31 மே 2005 (UTC)

[தொகு] நன்றி

ரவி, சுந்தர், உங்கள் ஆதரவுக்கு நன்றி. சுந்தர், உங்கள் வரவேற்புச் செய்தியைக் கண்டேன். கொஞ்சம் மொழிபெயர்த்த பின், பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம் என்றே தாமதித்து விட்டேன். விக்கிபீடியா சமுதாயத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி :)

[தொகு] constitutional monarchy

Constitutional Monarchy என்பதற்கு, சட்டத்துக்குட்பட்ட இராச்சியம் என்பதிலும், அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி என்பது பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து. Mayooranathan 06:49, 3 ஜூன் 2005 (UTC)

Monarchy --> முடியாட்சி, நன்று. அதிகார வரம்பற்ற முடியாட்சி(absolute monarchy) என்பதிலிருந்து வேறுபடுத்திக் காட்டவே, சட்டத்துக்குட்பட்ட என்ற அடைமொழியைப் பயன்படுத்தினேன். (i.e. a system in which the monarch is limited by the Constitution). இதில் சட்டம் என்பது அரசியலைமைப்புச் சட்டத்தையே குறிக்கும். அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்ட என்று முழுமையாக எழுதினால் வெகு நீளமாகி விடுமேயென்று சுருக்கி விட்டேன். Limited powers (as against absolute powers) என்ற கருத்து வெளிபடும் வகையில் மொழிபெயர்க்க முடிந்தால் நன்றாக இருக்கும். உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். Voiceonwings 08:05, 3 ஜூன் 2005 (UTC)
Constitutional Monarchy என்பதன் உட்பொருள் "அரசியலமைப்பில் அங்கீகரிக்கப் பெற்ற முடியாட்சி" என்று வருமென நினைக்கிறேன். The adjective, I feel, does not connote the limitedness of powers rather than the fact that it's been recognised and granted by the constitution. In this light, I prefer அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி. Anyway, let's wait for Mayooranathan's comment. -- Sundar 08:12, 3 ஜூன் 2005 (UTC)
விக்கிபீடியாவின் ஆங்கிலப் பதிப்பில் உள்ளபடி "A constitutional monarchy is a form of government established under a constitutional system which acknowledges a hereditary or elected monarch as head of state". எனவே சுந்தர் குறிப்பிட்டதுபோல், அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட முடியாட்சியைக் குறிப்பதுதான் constitutional monarchy. அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்றவகையில்தான் இது பிற முடியாட்சி வகைகளிலிருந்து வேறுபடுகின்றது. அதனால்தான் அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி என்ற சொல் கூடிய பொருத்தமாயிருக்கும் என எண்ணுகிறேன்.Mayooranathan 09:12, 3 ஜூன் 2005 (UTC)
நன்றி. நீங்களிருவரும் கூறியபடியே மாற்றி விடுகிறேன் Voiceonwings 09:25, 3 ஜூன் 2005 (UTC)

சட்டமுறை முடியாட்சி என்பது பொருந்துமா?--C.R.Selvakumar 12:40, 26 ஜூன் 2006 (UTC)செல்வா

சட்டமுறை முடியாட்சி என்பது எளிமையாக உள்ளது. இருப்பினும், மக்களவைகளால் இயற்றப்படும் சட்டத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உள்ள வேறுபாட்டை காண்பிக்க வேண்டாமா? (பிற இடங்களைப்போலன்றி இவ்விடத்தில் அது அவ்வளவு பெரிய வேறுபாடு இல்லை என ஒப்புக் கொள்கிறேன்.) -- Sundar \பேச்சு 13:23, 26 ஜூன் 2006 (UTC)
ஆங்கிலத்தில் உள்ள Constituition என்னும் சொல் எப்படி இந்த சட்ட திட்டங்கள், சட்ட முறைகள் ஆக்கப்பட்டன என்பதை குறிப்பதில்லை. தமிழில் எண்ணும் பொழுது சற்று துல்லியமாக எண்ணுகிறோமோ? :) மக்கட்சட்டமுறை முடியாட்சி என சொல்லலாமா? தமிழில் முறைசெய்து என்னும் சொல்லாட்சி பொதுவாக அனைவருக்கும் ஏற்புடையதாகவும், அறம் காக்கும் வழியில் உள்ளுக்குள் முரண்படாது ஆக்கப்பட்ட முறை என்று சிறப்பிப்பதே Constituition. முறை எனில் நூல் என்றும் பொருள். திருவள்ளுவர்,

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

என்கிறார். எனவே மக்கள்முறை முடியாட்சி என்றும் சொல்லாலாம். --C.R.Selvakumar 14:43, 26 ஜூன் 2006 (UTC)செல்வா
மன்னிக்கவும். மக்கள் முறை முடியாட்சி என்பதை Democratic Monarchy என்று பொருள் கொள்ளக்கூடும். Constitution என்ற சொல் கட்டமைப்பை உருவாக்குதல் என்ற அடிப்படைப் பொருளிலிருந்து ஒரு அரசியலமைப்பை உருவாக்குதலையும் உணர்த்தத் துவங்கியிருக்கலாம். அதிலிருந்து இத்தகைய வரையறையைத் தாங்கி நிற்கும் ஆவணத்தையும் குறிக்கத் துவங்கியுள்ளது. மக்கள்முறை என்பது ஒரு குறிப்பிட்ட வகை ஆட்சிமுறையை உணர்த்துகிறது. ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகளுக்குக் கூட ஒரு அரசியலமைப்புச் சட்டம் இருக்கலாம், முடியாட்சியும் உள்ளது; ஆனால் அது மக்கள்முறை அமைப்பு அல்ல. இந்த இடத்தில் ஒரு விந்தையான தகவல் என்னவென்றால் ஐக்கிய இராச்சியத்திற்கென்று வகுக்கப்பட்ட அரசியலமைப்பு ஒன்று கிடையாது. நெடுங்கால வழக்கு, வட்டார சட்டதிட்டங்கள், நீதித்துறை முற்கோள்கள், மற்றும் பின்னர் வந்த மக்களவைத் தீர்மானங்கள் மற்றும் சட்டங்கள் ஆகியவையே இதன் இடத்தைப் பெறுகின்றன! -- Sundar \பேச்சு 15:10, 26 ஜூன் 2006 (UTC)
பின்குறிப்பு: தமிழில் எண்ணிப் பார்க்கையில் பல விடயங்களில் கூடுதல் தெளிவு ஏற்படுகிறது என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. எடுத்துக்காட்டாக, கேண்டரின் குறுக்குக்கோடு சார்பின்மாறியை நான் தொகுக்கும்போது இன்னும் பல மடங்கு புரிதல் ஏற்பட்டது. -- Sundar \பேச்சு 15:24, 26 ஜூன் 2006 (UTC)
முறை செய்து என்ற வள்ளுவரின் பயன்பாடு அரச கடமைகளைச் செய்து என்று பொருள் படும் என்று நினைக்கிறேன். இது முறை என்ற மிகப்பொதுவான சொல்லை ஒரு குறிப்பிட்ட பொருளுக்குப் பயன்படுத்துவது. பொருள்தெளிவு பொருட்டு இங்கு அரசியலமைப்புமுறை முடியாட்சி எனப் பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறேன். -- Sundar \பேச்சு 15:24, 26 ஜூன் 2006 (UTC)
எது சரியாகப்படுகிறதோ அதை ஆளலாம். இங்கு இந்த முறை என்னும் சொல்லைப்பற்றி கூற விரும்புகிறேன். முறையிடுதல் என்றால் appealing to the established constituitional principles, or governing principles என்று பொருள். முறைதவறி, முறைகேடாக என்னும் சொல்வழக்குகளிலும், முறை என்பது ஒழுங்குப்பாட்டோடு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுகலாறுகள் என்று பொருள். எனவே முறை என்பது a set of established principles (governing, consituitional,athoritative, approved, just, consistant). The words in brackets are all implied in tamil. முறை எனில் ஒழுக்கம், கிரமம் (வடமொழி)
(order), கற்பு (=firmly established, உறுதி), ராசநீதி என்பதெல்லாம் அகராதி சொல்லும் பொருட்கள். It is a word with deep connotations in tamil with meanings of system, order, justice, universal, consistent (organized) etc. --C.R.Selvakumar 15:43, 26 ஜூன் 2006 (UTC)செல்வா
முறை என்ற சொல்லின் ஆளமான பொருள் புரிகிறது. ஏற்றுக் கொள்கிறேன். மேலே கூட இதைச் சொல்லியிருக்கிறேன். சட்டமுறை முடியாட்சி எனக்கு ஏற்புடையதே. மக்கள்முறை முடியாட்சி என்ற பயன்பாட்டில்தான் எனக்குத் தயக்கம் இருந்தது. -- Sundar \பேச்சு 16:11, 26 ஜூன் 2006 (UTC)

[தொகு] suggestions and comments

The article is too big (89 kb) which might take time to download in slow internet connections. Some of the info in sections like politics can be moved to separate article.

Then, I observed that everytime the queen is mentioned in the article, she is addressed as மேன்மைமிகு இராணி அவர்கள். I understand that it needs to be done so as follow the custom and not to affect the sentiments of UK people. But we need to define in MOS who all shall deserve such respectful mention of name in the article. Because someone might want to follow the same style of writing for some unknown saamiyaar or local politician with all his titles !!!--ரவி (பேச்சு) 13:49, 29 ஜூன் 2005 (UTC)

[தொகு] please fix errors in countrx info box.

the info for capital in the country info box is not displayed properly. Could any one fix this?..The infobox looks confusing for me--ரவி (பேச்சு) 8 ஜூலை 2005 16:00 (UTC)

I've tried to fix this. It looks good in my browser now, but am not sure if it's okay in other browsers. - ஸ்ரீநிவாசன் 09:14, 31 ஜூலை 2005 (UTC)

Thanks for the correction. Looks fine in my IE browser--ரவி (பேச்சு) 11:15, 31 ஜூலை 2005 (UTC)

[தொகு] Great Britain

பெரிய பிரித்தானியா (sounds more like Big Britain rather than Great Britain), எனவே சிறு மாற்றம் செய்து பெரும் பிரித்தானியா என்று சொல்லாம் என நினைகிறேன். அல்லது அகண்ட பிரித்தானியா என்றும் சொல்லலாம். --C.R.Selvakumar 12:46, 26 ஜூன் 2006 (UTC)செல்வா

ஆம். இதில் எனக்கு ஒப்புதல் உண்டு. -- Sundar \பேச்சு 13:24, 26 ஜூன் 2006 (UTC)

[தொகு] தகவல் சட்டம்

Wikipedia:விக்கித் திட்டம் நாடுகள் இன் படி எல்லா நாட்டுகும் ஒரே தகவல் சட்டம் என்றக் கருத்துப் படி இதில் காணப்பட்ட வார்ப்புரு:தகவல்கட்டம்_நாடு என்பதை நீக்கி வார்ப்புரு:Infobox Country ஐ இட்டேன். எதேனும் கருத்துக்கள் இருப்பின் இங்கே தெரிவிக்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 08:19, 3 செப்டெம்பர் 2006 (UTC)

Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com