உபநிடதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உபநிடதங்கள் (उपनिषद्, Upaniṣad) பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் சுருதி நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு - சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. மொத்தம் 108 உபநிடதங்கள் இருந்தாலும், கதா உபநிடதம், சாண்டோக்ய உபநிடதம், பிருஹதாரண்யக உபநிடதம், முண்டக உபநிடதம் போன்றவை முக்கியமானவையாக கருதப்படுகின்றன.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] துணை நூல்கள்
-
- சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம்.