ஹரித்வார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹரித்வார் பலுக்கல், ஹரித்வார் மாவட்டத்தில் (உத்தராஞ்சல், வட இந்தியா) அமைந்துள்ள இந்து புனிதத் தலமாகும். ஹரித்வார் என்றால், இறைவனை அடைவதற்கான வாயில் என்று பொருள்படும். தேவர்கள் தங்கள் காற்தடங்களை இங்கு விட்டுச் சென்றிருப்பதாக நம்பப்படுவதால், இந்துக்களின் ஏழு மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்நகரம், கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ் ஆகிய பிற இந்து புனிதத் தலங்களுக்கு நுழைவாயிலாகவும் திகழ்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு நடக்கும் கும்ப விழாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.