பேச்சு:முஹம்மத் யூனுஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
mohammed, muhammed - வெவ்வேறா? தமிழ்நாட்டில் முகமது என்றே பொதுவாக எழுதுவது வழக்கம். முஹம்மத் என்று எழுதுவதில்லை. இச்செய்திக்கட்டுரையை உருவாக்கித் தந்ததற்கு நன்றி, kanags kalanithie. தொடர்ந்து இது போன்று செய்திக்கட்டுரைகளை முன்னுரிமை கொடுத்து உருவாக்கித் தர வேண்டுகிறேன். இதன் மூலம் கூடுதல் பயனர்களை ஈர்க்க முடியும் என்று நம்புகிறேன்.--ரவி 19:21, 18 அக்டோபர் 2006 (UTC)
ரவி அப்படியாயின் இதற்கு சரியான மொழிஉச்சரிப்பைக் கூறவும்.--கலாநிதி 16:33, 19 அக்டோபர் 2006 (UTC)
- ரவி, இக்கட்டுரைக்குச் சொந்தக்காரர் கலாநிதி. அவருக்கே உங்கள் வாழ்த்துக்கள் சேரவேண்டும்:)). மற்றும், பொதுவாக இலங்கையில் முஹம்மது என்றே இஸ்லாமியர்கள் எழுதுவது வழக்கம்.--Kanags 21:30, 19 அக்டோபர் 2006 (UTC)
ஓ, கனகு, கலாநிதி இருவரும் மன்னிக்கவும் :) கவனக்குறைவில் மாற்றிச் சொல்லிவிட்டேன். நன்றி, கலாநிதி. mohammed, muhammed ஆகிய இரண்டு எழுத்துக்கூட்டல்களுக்கும் தமிழ்நாட்டில் வேறுபாடு காட்டுவதாகத் தெரியவில்லை. முகமது என்றே சொல்கிறார்கள். முகமது என்பதில் வட மொழி எழுத்துக்களை தவிர்த்திருப்பதாலும், புழக்கத்திலும் இருப்பதாலும், இக்கட்டுரையை அத்தலைப்புக்கு நகர்த்தலாம் எனப் பரிந்துரைக்கிறேன். இலங்கை வழக்கை கருத்தில் கொண்டு முஹம்மத் யூனுஸ் என்ற நகர்த்தல் விளைவு வழிமாற்றியும் நீடிக்கட்டும்--ரவி 06:25, 20 அக்டோபர் 2006 (UTC)