சந்திரகுப்த மௌரியர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சந்திரகுப்த மௌரியர் (ஆட்சிக்காலம் கி.மு. 322 - 298) மௌரியப் பேரரசை நிறுவியவர் ஆவார். மேலும் இவர் பண்டைய இந்தியாவின் தலைசிறந்த மன்னர்களுள் ஒருவராக விளங்குகிறார். இவருடைய கடைக்காலத்தில் சமண நெறியைத் தழுவினார். இவருக்கு அடுத்து இவருடைய மகன் பிந்துசாரர் மௌரியப் பேரரசின் மன்னரானார்.