குழந்தைத் தொழிலாளர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பருவத்துக்கு ஏற்ற விளையாட்டு, கல்வி ஆகியவற்றில் ஈடுபடாமல் பெரும்பாலான தமது நேரத்தை ஒரு தொழிலில் செலவழிக்கும் குழந்தைகளை குழந்தைத் தொழிலாளர்கள் எனலாம். குழந்தைகள் ஆள் வளத்தை சுரண்டி இலாபம் ஈட்டும் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகளையே 'குழந்தைத் தொழிலாளர்' என்ற சொல்லாடல் குறிப்பாக சுட்டுகின்றது. குழந்தைத் தொழிலாளர் என்பது Child labour என்பதன் மொழிபெயர்ப்பு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] குழந்தைகள் ஈடுபடுத்தப்படும் வேலைகள்
- வீட்டுவேலை.
- கம்பளம் தயாரிப்பது.
- செப்பு வேலை.
- கைப்பணி.
- நெய்தல்.
- கண்ணாடி சிலேட் செய்தல்.
- இரத்தினக் கற்கள், வைரம் பட்டை தீட்டல். (புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகம் காணலாம்).
- தீப்பெட்டித்தொழில். (சிவகாசி நகரில் அதிகம் காணலாம்).
- கல்லுடைத்தல்.
- குப்பை பொறுக்குதல்.
- உணவகங்களில் துப்புரவு மற்றும் இதர வேலைகள்.
- பால்வினைத் தொழில்.
[தொகு] குடும்பத்தில் ஒத்தாசையும் குழந்தைத் தொழிலாளர்களும்
வீடுகளில் உள்ள சிறுவர்கள் தம் பெற்றோருக்கு ஒத்தாசை செய்வதையும் குழந்தைத் தொழில் என்று சிலர் வகைப்படுத்துவதுண்டு. தோட்டத்திலோ பிற பெற்றோர் ஈடுபடும் தொழில்களிலோ குடும்பப் பங்காக குழந்தைகள் ஒத்து செய்யும் வேலைகளை குழந்தைத் தொழில் என்பது எவ்வளவு பொருந்தும் என்பது கேள்விக்குரியது. குழந்தைகள் வேலை ஒன்றைக் கற்று அதன் மூலம் தமது கல்வியை மேற்கொள்ளலாம் என்ற மகாத்மா காந்தியின் கருத்தும் இங்கு குறிப்பிடத்தக்கது.
[தொகு] இவற்றையும் பார்க்க
- குட்டி (திரைப்படம்) - குழந்தைத் தொழிலாளர்களின் நிலையை, பிரச்சினையை நன்றாக விளக்கும் ஒரு திரைப்படம்.
[தொகு] ஆதாரங்கள்
- செ. கணேசலிங்கன். (2001). நவீனத்துவமும் தமிழகமும். சென்னை: குமரன் பதிப்பகம்.