இந்தியாவின் மக்கள்தொகை பரம்பல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தியாவானது உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தையே கொண்டிருந்தாலும் உலகின் 15 சதவீத மக்கள் தொகையைக்கொண்டுள்ளது. இந்தியாவை விட அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா மட்டுமேயாகும். ஏறக்குறைய 40 % இந்தியர்கள் 15 வயதிற்கு குறைந்தவர்களாவர். 70 %க்கும் அதிகமான மக்கள் இந்தியாவின் 5,50,000 க்கும் அதிகமான கிராமங்களில் வாழ்கின்றனர். மீதமுள்ள மக்கள் 200-க்கும் மேற்பட்ட பெரு மற்றும் சிறு நகரங்களில் வாழ்கின்றனர்.
இந்திய அரசானது மொத்தம் 22 மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரித்துள்ளது. 80%-க்கும் அதிகமான மக்கள் இந்துக்கள் ஆவர். மேலும் இந்தியாவில் 130 மில்லியன் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். இந்தியா உலகிலுள்ள முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாகும். கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், சமண, புத்த மதத்தினரும் இங்கு வாழ்கின்றனர்.