மேளகர்த்தா இராகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மேளகர்த்தா இராகங்கள் ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். வித்தியாசங்கள் வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே ஏற்படுகின்றன.

இதை ஜனக இராகம், தாய் இராகம், கர்த்தா இராகம், சம்பூர்ண இராகம், மேள இராகம் என்ற பெயர்களால் அழைப்பர். ஜனக இராகங்கள் 72 ஆகும். இவற்றிலிருந்து ஜன்னிய இராகங்கள் தோன்றுகின்றன. 72 மேளகர்த்தாக்களும் 12 ஸ்வரஸ்தான அடிப்படையில் 16 பெயர்களுடன் அமைந்துள்ளன.

[தொகு] அமைப்பு

ஜனக இராகங்கள் 5 விதிகளைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன:

  1. சம்பூர்ண ஆரோகணம் அவரோகணம்.
  2. கிரம சம்பூர்ண அரோகண அவரோகணம்.
  3. அரோகணத்தில் வரும் ஸ்வரஸ்தானங்களே அவரோகணத்திலும் வருதல்.
  4. ஆரோகண அவரோகணம் அஷ்டகமாக அமைந்திருத்தல்.
  5. மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து மேல்ஸ்தாயி ஷட்ஜம் வரை ஸ்வரங்கள் ஒழுங்காகச் செல்லுதல்.

[தொகு] வரலாறு

மேளகர்த்தாக்களின் வரலாறு 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த வெங்கடமகி எழுதிய சதுர்த்தண்டிப் பிரக்காசிகை என்னும் நூலிலும் கோவிந்தாச்சாரியார் என்பவர் இயற்றிய சங்கிரக சூடாமணி என்னும் நூலில் இருந்தும் அறிய முடிகின்றது.

[தொகு] மேளகர்த்தா இராகங்களின் பட்டியல்

மேளகர்த்தா இராகங்களையும், அவற்றின் வகைகளையும், அவை உருவாகும் விதத்தையும் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

சக்கரம் எண் பெயர் சுரங்கள்
ச ரி க ம ப த நி
ச
ட்
ஜ
ம்
சு
த்
த
ச
து
ச்
ரு
தி
ஷ
ட்
ச்
ரு
தி
சு
த்
த
சா
தா
ர
ண
அ
ந்
த
ர
சு
த்
த
பி
ர
தி
ப
ஞ்
ச
ம
ம்
சு
த்
த
ச
து
ச்
ரு
தி
ஷ
ட்
ச்
ரு
தி
சு
த்
த
கை
சி
கி
கா
க
லி
சுத்த மத்திம இராகங்கள்
I - இந்து 1 கனகாங்கி ச ரி1 . . க1 . . ம1 . ப த1 . . நி1 . .
2 ரத்னாங்கி ச ரி1 . . க1 . . ம1 . ப த1 . . . நி2 .
3 கானமூர்த்தி ச ரி1 . . க1 . . ம1 . ப த1 . . . . நி3
4 வனஸ்பதி ச ரி1 . . க1 . . ம1 . ப . த2 . . நி2 .
5 மானவதி ச ரி1 . . க1 . . ம1 . ப . த2 . . . நி3
6 தானரூபி ச ரி1 . . க1 . . ம1 . ப . . த3 . . நி3
.
II - நேத்ர 7 சேனாவதி ச ரி1 . . . க2 . ம1 . ப த1 . . நி1 . .
8 ஹனுமத்தோடி ச ரி1 . . . க2 . ம1 . ப த1 . . . நி2 .
9 தேனுக ச ரி1 . . . க2 . ம1 . ப த1 . . . . நி3
10 நாடகப்பிரியா ச ரி1 . . . க2 . ம1 . ப . த2 . . நி2 .
11 கோகிலப்பிரிய ச ரி1 . . . க2 . ம1 . ப . த2 . . . நி3
12 ரூபவதி ச ரி1 . . . க2 . ம1 . ப . . த3 . . நி3
.
III - அக்னி 13 காயகப்பிரிய ச ரி1 . . . . க3 ம1 . ப த1 . . நி1 . .
14 வகுளாபரணம் ச ரி1 . . . . க3 ம1 . ப த1 . . . நி2 .
15 மாயாமாளவகௌளை ச ரி1 . . . . க3 ம1 . ப த1 . . . . நி3
16 சக்ரவாகம் ச ரி1 . . . . க3 ம1 . ப . த2 . நி2 .
17 சூர்யகாந்தம் ச ரி1 . . . . க3 ம1 . ப . த2 . . . நி3
18 ஹாடகாம்பரி ச ரி1 . . . . க3 ம1 . ப . . த3 . . நி3
.
IV - வேத 19 ஐங்காரத்வனி ச . ரி2 . . க2 . ம1 . ப த1 . . நி1 . .
20 நடபைரவி ச . ரி2 . . க2 . ம1 . ப த1 . . . நி2 .
21 கீரவாணி ச . ரி2 . . க2 . ம1 . ப த1 . . . . நி3
22 கரகரப்பிரியா ச . ரி2 . . க2 . ம1 . ப . த2 . . நி2 .
23 கௌரிமனோகரி ச . ரி2 . . க2 . ம1 . ப . த2 . . . நி3
24 வருணப்பிரியா ச . ரி2 . . க2 . ம1 . ப . . த3 . . நி3
.
V - பாண 25 மாரரஞ்சனி ச . ரி2 . . . க3 ம1 . ப த1 . . நி1 . .
26 சாருகேசி ச . ரி2 . . . க3 ம1 . ப த1 . . . நி2 .
27 சரசாங்கி ச ரி2 . . . க3 ம1 . ப த1 . . . . நி3
28 ஹரிகாம்போஜி ச . ரி2 . . . க3 ம1 . ப . த2 . . நி2 .
29 தீரசங்கராபரணம் ச . ரி2 . . . க3 ம1 . ப . த2 . . . நி3
30 நாகநந்தினி ச . ரி2 . . . க3 ம1 . ப . . த3 . . நி3
.
VI - ருது 31 யாகப்பிரியா ச . . ரி3 . . க3 ம1 . ப த1 . . நி1 . .
32 ராகவர்த்தனி ச . . ரி3 . . க3 ம1 . ப த1 . . . நி2 .
33 காங்கேயபூஷணி ச . . ரி3 . . க3 ம1 . ப த1 . . . . நி3
34 வாகதீச்வரி ச . . ரி3 . . க3 ம1 . ப . த2 . . நி2 .
35 சூலினி ச . . ரி3 . . க3 ம1 . ப . த2 . . . நி3
36 சலநாட ச . . ரி3 . . க3 ம1 . ப . . த3 . . நி3
பிரதி மத்திம இராகங்கள்
VII - ரிஷி 37 சாலகம் ச ரி1 . . க1 . . . ம2 ப த1 . . நி1 . .
38 ஜலார்ணவம் ச ரி1 . . க1 . . . ம2 ப த1 . . . நி2 .
39 ஜாலவராளி ச ரி1 . . க1 . . . ம2 ப த1 . . . . நி3
40 நவநீதம் ச ரி1 . . க1 . . . ம2 ப . த2 . . நி2 .
41 பாவனி ச ரி1 . . க1 . . . ம2 ப . த2 . . . நி3
42 ரகுப்பிரியா ச ரி1 . . க1 . . . ம2 ப . . த3 . . நி3
.
VIII - வசு 43 காவாம்போதி ச ரி1 . . . க2 . . ம2 ப த1 . . நி1 . .
44 பவப்பிரியா ச ரி1 . . . க2 . . ம2 ப த1 . . . நி2 .
45 சுபபந்துவராளி ச ரி1 . . . க2 . . ம2 ப த1 . . . . நி3
46 ஷட்விதமார்க்கிணி ச ரி1 . . . க2 . . ம2 ப . த2 . . நி2 .
47 சுவர்ணாங்கி ச ரி1 . . . க2 . . ம2 ப . த2 . . . நி3
48 திவ்யமணி ச ரி1 . . . க2 . . ம2 ப . . த3 . . நி3
.
IX - பிரகம 49 தவளாம்பரி ச ரி2 . . . . க3 . ம2 ப த1 . . நி1 . .
50 நாமநாராயணி ச ரி1 . . . . க3 . ம2 ப த1 . . . நி2 .
51 காமவர்த்தனி ச ரி1 . . . . க3 . ம2 ப த1 . . . . நி3
52 ராமப்பிரிய ச ரி1 . . . . க3 . ம2 ப . த2 . . நி2 .
53 கமனச்ரம ச ரி1 . . . . க3 . ம2 ப . த2 . . . நி3
54 விச்வம்பரி ச ரி1 . . . . க3 . ம2 ப . . த3 . . நி3
.
X - திசி 55 சியாமளாங்கி ச . ரி2 . . க2 . . ம2 ப த1 . . நி1 . .
56 சண்முகப்பிரியா ச . ரி2 . . க2 . . ம2 ப த1 . . . நி2 .
57 சிம்மேந்திரமத்திமம் ச . ரி2 . . க2 . . ம2 ப த1 . . . . நி3
58 ஹேமவதி ச . ரி2 . . க2 . . ம2 ப . த2 . . நி2 .
59 தர்மவதி ச . ரி2 . . க2 . . ம2 ப . த2 . . . நி3
60 நீதிமதி ச . ரி2 . . க2 . . ம2 ப . . த3 . ./td> நி3
.
XI - ருத்ர 61 காந்தாமணி ச . ரி2 . . . க3 . ம2 ப த1 . . நி1 . .
62 ரிஷபப்பிரிய ச . ரி2 . . . க3 . ம2 ப த1 . . . நி2 .
63 லதாங்கி ச . ரி2 . . . க3 . ம2 ப த1 . . . . நி3
64 வாசஸ்பதி ச . ரி2 . . . க3 . ம2 ப . த2 . . நி2 .
64 மேசகல்யாணி ச . ரி2 . . . க3 . ம2 ப . த2 . . . நி3
66 சித்ராம்பரி ச . ரி2 . . . க3 . ம2 ப . . த3 . . நி3
.
XII -ஆதித்ய 67 சூசரித்ர ச . . ரி3 . . க3 . ம2 ப த1 . . நி1 . .
68 ஜோதிஸ்வரூபிணி ச . . ரி3 . . க3 . ம2 ப த1 . . . நி2 .
69 தாதுவர்த்தனி ச . . ரி3 . . க3 . ம2 ப த1 . . . . நி3
70 நாசிகாபூஷணி ச . . ரி3 . . க3 . ம2 ப . த2 . . நி2 .
71 கோசலம் ச . . ரி3 . . க3 . ம2 ப . த2 . . . நி3
72 ரசிகப்பிரியா ச . . ரி3 . . க3 . ம2 ப . . த3 . . நி3