கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] பதிப்புரிமைகளை மதியுங்கள்
- பதிப்புரிமை பெற்ற ஆக்கங்கள், படிமங்கள், கோப்புகளை சம்பந்தப்பட்டவர்களின் முறையான அனுமதியின்றி விக்கிபீடியாவில் பதிவேற்றாதீர்கள்.
[தொகு] பேச்சுப்பக்கங்களில்
- இங்கு இலக்கண சுத்தமாக உரையாடத் தேவையில்லை என்றாலும், கண்ணியமாகவும் கனிவாகவும் உரையாடுவது அவசியம்.
- உங்கள் பதிப்புகளில் கையெழுத்திடுங்கள்.
[தொகு] பயனர் நல்லுறவு
- எந்த ஒரு பக்கத்திலோ பயனர் செயல்பாட்டிலோ பிழை கண்டால், அது எளிதில் உங்களால் திருத்தி அமைக்கப்படக் கூடியதாய் இருந்தால், நீங்களே அதை முதலில் திருத்தி விடுங்கள். அதை திருத்துமாறு ஒரு குறிப்பை பதிப்பதை விட இது பயனுள்ளதும் பிற பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதாகும். இப்பிழை ஓரிரு முறை மட்டுமே ஒரு பயனரால் கவனக் குறைவாகச் செய்யப்பட்டிருப்பின் அதை சுட்டிக் காட்டத் தேவையில்லை. பலரும் இப்பிழையை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தால் தகுந்த உரையாடல் பக்கங்களில் தெரியப்படுத்துங்கள். ஒரே பயனர் அதே பிழையை பல முறை அறியாமல் செய்து வந்தால், அவரது பேச்சுப்பக்கத்தில் ஆலோசனை வழங்குங்கள். புதுப்பயனர்கள் வெற்று விமர்சனங்களை முன்வைப்பது புரிந்து கொள்ளத்தக்கது என்றாலும், அனுபவம் வாய்ந்த பயனர்கள் பிறரது குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுவது உவப்பாக இருக்காது. குறைகளை மட்டும் கூறாமல், அக்குறைகளை களைய சிறிதேனும் முயற்சி எடுப்பது விக்கிபீடியா என்னும் கூட்டு முயற்சிக்குப் பயனுள்ளதாகவும் பயனர்களுக்கு இடையே நல்லுறவை வளர்க்கவும் உதவும். எடுத்துக்காட்டு, ஒரு புதுப்பயனர் விக்கி நடைக்கு ஒவ்வாத வகையில் எழுதுவதாகத் தோன்றினால், அவருடைய சில கட்டுரைகளை முதலில் விக்கியாக்கம் செய்யுங்கள். இது நற்பங்களிப்பாகவும் அப்பயனருக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும். பிறகு, அவருடைய பேச்சுப் பக்கத்தில் கருத்து தெரிவித்தால், தன் பங்களிப்பை எப்படி சிறப்பாக செய்யலாம் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியும்.