Wikipedia:பொதுவான குறைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விக்கிபீடியாவில், ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் காணப்படும் பொதுவான குறைகள் (எழுத்துப்பிழைகள், மென்பொருள் கோளாறுகள்..)குறித்து இந்தப் பக்கத்தில் தெரியப்படுத்துங்கள்.
பொருளடக்கம் |
[தொகு] எழுத்துப்பிழைகள்
[தொகு] editing a section
ஒரு பக்கதின் ஒரு பகுதியை தொக்குத்தால், "தொகுத்தல் (Editting) XYZ (பிரிவு)" என்று வருகிறது. 'Editing' spellingஐ கவனிக்கவும். --Harikishore 12:48, 5 ஏப் 2005 (UTC)
- I removed the English word. Mayooranathan 19:13, 13 ஏப் 2005 (UTC)
- m:LanguageTa.php இங்கே பல மொழிபெயர்ப்புக்களை ஒரு முறை நான் சரி செய்தேன். இருந்தும் இந்த எழுத்துப்பிழை எங்குள்ளதென்று தெரியவில்லை. மயூர நாதன் விளக்கவும். -- Sundar 05:24, 7 ஏப் 2005 (UTC)
- m:LanguageTa.php இல் திருத்தங்கள் செய்தால், ஒரு bureaucrat தரத்திலுள்ள ஒருவர்தான் அவற்றைச் செயற்படுத்த முடியும். ஆரம்பத்தில் Brian மூலம் தான் இதனைச் செய்வித்து வந்தேன். இப்பொழுது இந்த முறையைக் கைவிட்டுவிட்டார்கள்போல் தெரிகிறது. இப்பொழுது அனைத்து முறைமைசார் தகவல்கள் அட்டவணை பக்கத்தில் அனைத்து Namespaces களிலுமுள்ள பெரும்பாலான Messages அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. இங்கே தனித்தனியாக Message களைத் தொகுக்க முடியும். உடனடியாகவே அது செயற்படுத்தப்படும். சிக்கல் என்னவெனில் இதையும் ஒரு administrator மட்டும்தான் செய்ய முடியும்.Mayooranathan 13:03, 7 ஏப் 2005 (UTC)
- Sorry, I was wrong in saying that the bureaucrats could give effect to the changes made to language.php files. I think a developer or few selected people only can do it. Mayooranathan 15:00, 7 ஏப் 2005 (UTC)
இப்பிழை இன்னமும் இருக்கிறது. அண்மையில் en:User:Nichalp இதைப் பற்றி தெரிவித்தார். -- Sundar \பேச்சு 13:37, 13 செப்டெம்பர் 2005 (UTC)
[தொகு] Redirecting the donations page
I obsereved that most of the other language wikipedias redirect the nankodaikaL page found in the navigation pane to the donations page in wikimedia foundation.Currently I have just given a link to the foundation page.I request the page be redirected until we come up with a tamil version of wiki foundation website.Thanks.--ரவி (பேச்சு) 09:43, 13 ஏப் 2005 (UTC)
[தொகு] சிறப்புப் பக்க வழு?
சிறப்பு:Most linked to pages பக்கத்தில் உள்ள ஏற்கனவே உள்ள பக்கங்களுக்கான இணைப்புகள் அனைத்தும் சிகப்பு வண்ணத்தில் உள்ளன. இது ஒரு வழு என்றால், வழு அறிக்கை பதியலாம்--ரவி (பேச்சு) 14:22, 1 செப்டெம்பர் 2005 (UTC)
[தொகு] முதற் பக்க இற்றைப்படுத்தல்
புகு பதிகை செய்யாமல் முதற் பக்கத்தை பார்த்தால் பெரும்பாலும் இற்றைப்படுத்தப்படாமல் இருக்கிறது. இது ஏன்? எல்லா பக்கங்களும் இப்படி இற்றைப்படுத்தப்படாமல் இருக்கிறதா? இதை எப்படி சரி செய்வது?--ரவி (பேச்சு) 11:39, 13 செப்டெம்பர் 2005 (UTC)
- நான் புகுபதிகை செய்யாமல் பார்த்தேன். சரியாக இருக்கிறது. ஒருவேளை அண்மையில் Mediawiki:Common.css மற்றும் Mediawiki:Monobook.css ஆகிய ஸ்டைல்ஷீட்டுகளினால் இருக்கலாம். புகுபதிகை செய்யாமல் முன்னுரிமைகளில் சென்று எந்த ஸ்டைல்ஷீட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளது என்று பாருங்களேன். -- Sundar \பேச்சு 12:06, 13 செப்டெம்பர் 2005 (UTC)
சுந்தர், புகுபதிகை செய்யாமல் என்னுடைய கணினியில் பக்கங்கள் இற்றைப்படுத்தப்பட்டு தான் இருக்கிறது. ஆனால்,வேறு கணினிகள், browsing centreகளில் புகுபதிகை செய்யாமல் பார்க்கும் போது முதற்பக்கம் ஒன்றிரண்டு நாட்கள் பின் தங்கி இருக்கிறது.பக்கங்கள் தானாக purge ஆவது போல் ஏதாவது செய்ய முடியுமா? அதே போல புகுபதிகை செய்யவிட்டால் வெவ்வேறு கணினிகள் வெவ்வேறு கட்டுரை எண்ணிக்கைகள் காண்பிக்கின்றன. இதையும் கவனிக்க வேண்டும். என்னுடைய முன்னுரிமைகளில் Monobook skin தேர்வு செய்யப்பட்டுள்ளது. அப்புறம், உங்கள் ஆலோசனை படி புகுபதிகை செய்யாமல் எப்படி முன்னுரிமைகளை பார்ப்பது என புரிபடவில்லை. புகுபதிகை செய்தால் தானே முன்னுரிமைகளை பார்க்க முடியும்??--ரவி (பேச்சு) 13:03, 13 செப்டெம்பர் 2005 (UTC)
- புகுபதிகை செய்யாத பயனர்களுக்கு மட்டும் "ஸ்குவிட் கேஷ்" (en:Squid cache) என்கின்ற வகை இணையத்தளத் தேக்கிகளைப் (?) பயன்படுத்துகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு .இங்கே பார்க்கவும். மற்றபடி முன்னுரிமைகள் தொடர்பான என் கருத்து தவறு. -- Sundar \பேச்சு 13:21, 13 செப்டெம்பர் 2005 (UTC)
இப்பொழுது விளங்குகிறது, சுந்தர். ஆக, இதை ஒன்றும் பண்ண முடியாது :)--ரவி (பேச்சு) 14:23, 13 செப்டெம்பர் 2005 (UTC)
[தொகு] படிமப்´பேச்சுப்பக்கங்கள்
படிமப் பேச்சு:Tamilpolice.jpg பக்கம், படிமம்:Tamilpolice.jpg பக்கத்தின் பேச்சுப் பக்கம் போல் இல்லாது தனிக்கட்டுரைப்பக்கம் போல் உள்ளது. இது வழு தான் என நினைக்கிறேன். சுந்தர், இது குறித்த வழுவை பதிய முடியுமா? எல்லா முறையும் உங்களையே வழு பதிய சொல்வதை பொருட்படுத்த மாட்டீர்கள் என நினைக்கிறேன். wikipedia jargonல் உங்களுக்கு நல்ல பரிச்சயம் உண்டு என்பதால் நீங்கள் மெடா விக்கி காரர்களுக்கு எளிதில் விடயத்தை புரிய வைத்து விடுவீர்கள் என்பதால் தான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். கூடிய சீக்கிரம் நானும் இவ்விடயத்தில் பரிச்சயம் பெற முயல்கிறேன்.--ரவி (பேச்சு) 09:58, 17 அக்டோபர் 2005 (UTC)
- வியப்பாக உள்ளது. படிமம் இங்கே உள்ளது பேச்சுப் பக்கம் மட்டும் எப்படு கட்டுரையாகக் கருதப்படுகிறது என்று தெரியவில்லை. நாளை கண்டிப்பாக வழு பதிகிறேன். -- Sundar \பேச்சு 13:35, 17 அக்டோபர் 2005 (UTC)
-
- அனைத்து படிமப் பேச்சுப் பக்கங்களிலும் இச்சிக்கல் உள்ளது. எவரேனும் இங்கே நான் விளக்கியுள்ளதுபோல் விளக்கி ஒரு வழு பதியுங்கள். எனக்கு இன்றும் வேலை கூடுதலாக உள்ளது. என்னையும் (எனது மின்னஞ்சல் முகவரியைக் [sundarbecse yahoo டாட் காம்] கொண்டு) கவனிப்பவர்/அவதானிப்பவர் பட்டியலில் (CC-list in the bug) இணைத்து விடுங்கள். -- Sundar \பேச்சு 10:12, 18 அக்டோபர் 2005 (UTC)
[தொகு] கோப்புப்பெயர்கள்
இந்த குறையை சொல்வதற்கான இடம் இதுதானோ தெரியவில்லை. அத்தோடு இது ஏற்கனவே அல்கசப்பட்ட விடயமாகவும் இருக்கலாம். விக்கியின் ஒரு பொதுவான குறைபாடாக நான் காண்பது கோப்புப்பெயர்கள். ( ஒவ்வொரு கட்டுரையும் வழங்கியில் சேமிக்கப்படும் உரைக்கோப்புகளின் பெயர்கள்) நீண்ட அர்த்தமற்ற குறியீடுகளாய் அமைகிறது. இதனால் தொடுப்பு(URL) கூட இவ்வாறே அமைந்துவிடுகிறது. தொடுப்பை உலாவியின் முகவரிப்பெட்டியிலிருந்து அப்படியே நகலெடுத்து பொது இடங்களில் பயன்படுத்த முடியாதுள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் நான் பயன்படுத்தும் டொக்குவிக்கியும் இதே குறைபாட்டை கொண்டிருக்கிறது. இதைப்பற்றி மீடியாவிக்கியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதா?
--மு.மயூரன் 10:20, 17 அக்டோபர் 2005 (UTC)
- மயூரன், உங்கள் வலைப்பக்கத்தில் இருந்து இங்கு இணைப்பு தரும்போது அர்த்தமற்ற நீண்ட குறியீடுகளை அப்படியே URLஆகத் தருவதற்கு பதில் அப்படியே கட்டுரையின் பெயரைத் தரலாம். எடுத்துக்காட்டாக. இந்தியா கட்டுரைக்கு இணைப்பு தர http://ta.wikipedia.org/wiki/இந்தியா என்றே இணைப்பு தரலாம். இந்த பதில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா என்று தெரியவில்லை. அந்த நீண்ட அர்த்தமற்ற குறியீடுகள் தமிழ் யுனிகோடு எழுத்துக்களுக்கான குறிகளாக இருக்காலம் என நினைக்கிறேன்.--ரவி (பேச்சு) 10:35, 17 அக்டோபர் 2005 (UTC)
- என்னுடைய வலைப்பக்கத்தில் தொடுப்பு கொடுப்பதானால் பரவாயில்லை. சில இடங்களில் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கிறேன்.
ஆனால் முடிந்தவரை நீங்கள் சொன்னவாறு தான் செய்துவருகிறேன். ஆனாலும் இந்த பிரச்சனை கவனத்திலெடுக்கப்படவேண்டியது. தமிழ் யுனிகோட் குறியீடுகளின் 16 பிட் அளவை எட்டு எட்டாக உடைத்து ஹெக்சாடெசிமல் பெறுமானங்களாக மீடியாவிக்கி கோப்புகளுக்கு பெயரிடுகிறது. இதுதான் அடிப்படை பிரச்சனை. இதன் தொழிநுட்பரீதியான பரிகாரம் என்ன என்று தெரியவில்லை. --மு.மயூரன் 14:14, 17 அக்டோபர் 2005 (UTC)