பேச்சு:புவியியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Is புவியியல் = Earth Sciences?
What are the core sub diciplines??
[தொகு] புவி அறிவியல் - Earth Sciences
நிலவியல், புவிச்சரிதவியல், புவிப்பொதியியல்-Geology
- பனியாற்றியியல்-Glaciology
- நில உருவாக்கவியல்-Geomorphology
- தொல்லுயிராய்வியல்-Palaeontology
- பூதத்துவ இயல்-Geography
- புவியமைப்பியல்-Geophysical
சூழலியல், சூழியல் - Enviornmental Studies
- வாழ்சூழ்நிலைவியல் - Ecology
- தட்டவெட்பவியல் - Climatology
- வானிலைவியல் - Meteorology
- காட்டியல் - Forestry
- மீன்வள அறிவியல் - Fishery
- கனிப்பொருளியல் - Minerology
- பெருங்கடல் ஆய்வியல் - Ocenography
- வாயு மண்டல அறிவியல் - Atomospheric Sciences
- நிலவுலக நீர் ஆய்வியல் - Hydrology
வேளாண்மையியல், விவசாயம்-Agriculture
- மண்ணியல்-Soil Science
- புல்லியல்- Agrostology
- உழவியல், பயிராக்கவியல் - Agronomy
- வேளாண் பயரியல் - Agricultural Botany
- வேளாண் வேதியியல், விவசாயவிரசாயனவியல்-Agricultural Chemistry
--Natkeeran 22:10, 22 பெப்ரவரி 2006 (UTC)
நற்கீரன், புவியியல் தொடர்பான கலைச் சொற் பயன்பாட்டில் எனக்கு நேரடியான பரிச்சயம் குறைவு. இங்கே நான் பயன்படுத்தியுள்ள சொற்களுட் பெரும்பான்மையானவை TVU இன் அகராதிகளிலிருந்து பெற்றவைதான். நிலவியல் தொடர்பான அகராதியில் ஏராளமான சொற்கள் உள்ளன. Earth Sciences is an all-embracing term for the sciences related to the planet Earth. என்றுதான் ஆங்கில விக்கிபீடியாவில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இதன்படி புவியியல், நிலவியல், புவிச்சரிதவியல் போன்ற பல துறைகள் இதனுள் அடக்கம். Earth Sciences என்பது Social Sciences என்பது போன்ற ஒரு சொற்பயன்பாடு என்றுதான் எண்ணுகிறேன். நீங்கள் மேலே கொடுத்துள்ள துறைகள் அனைத்தும் Earth Sciences என்பதனுள் அடங்கும் என்பதுதான் எனது கருத்தும். இவற்றையும் கட்டுரையில் சேர்த்துக்கொள்ளலாம்.
நீங்கள் தந்துள்ள துறைகளின் தமிழ்ச் சொற்கள் தொடர்பான எனது சில கருத்துக்களைக் கீழே தந்துள்ளேன். For discussion.
நீங்கள் தந்துள்ள கலைச்சொற்களிற் பலவும்கூட TVU போன்ற தளங்களிலிருந்து எடுக்கப்பட்டவை என்றே எண்ணுகிறேன். இதிலே பனியாற்றியியல் என்பதை நானும் TVU இல் பார்த்தேன். இதில் தட்டச்சுப் பிழை ஏற்பட்டிருக்கிறதென்றே கருதுகிறேன். glaciers என்பது பனியாறு எனவே Glaciology என்பது பனியாறு + இயல் = பனியாற்றியல் என்றுதான் வரும். பனியாற்றியியல் என்று அல்ல. Geography என்பதற்கும் புவியியல் என்பதே பரவலாக வழக்கிலுள்ள சொல். பூதத்துவ இயல் தேவையற்று நீண்டிருக்கும் ஒரு சொல்லாகவே எனக்குப் படுகிறது. நீங்கள் கொடுத்துள்ள வானிலைவியல், வாழ்சூழ்நிலைவியல் போன்ற சொற்களிலும் சொற்புணர்ச்சியில் பிழை இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். இவை வானிலையியல், வாழ்சூழ்நிலையியல் என்றுதான் வரவேண்டும். மேலும், வாழ்சூழ்நிலையியல் என்பது வாழ்சூழலியல் என்று அமைவது பொருத்தம். சூழ்நிலை = context. இங்கே வரவேண்டியது environment, surroundings என்ற பொருளுடைய சொல்லே. சூழல் என்பது பொருத்தமாக அமையும். இவற்றை விடவும், நீங்கள் கொடுத்துள்ள வாயு மண்டல அறிவியல், நிலவுலக நீர் ஆய்வியல் ஆகிய சொற்களுக்குப் பதிலாக வளிமண்டல அறிவியல், நீர்வள இயல் என்பன பொருத்தமானவை என்பது எனது கருத்து. mineral என்பதற்கு கனிப்பொருள்' என்பதோடு கனிமம் என்ற சொல்லும் பயன்பாட்டிலுள்ளது. இதனால் minerology என்பதை கனிமவியல் எனறும் சொல்லலாம். இது சுருக்கமான சொல். Mayooranathan 09:44, 23 பெப்ரவரி 2006 (UTC)
நீங்கள் சுட்டியபடி த.இ.ப இச்சொற்களை சேகரித்தேன் என்று நினைக்கின்றேன். அனேகமாக உங்கள் பரிந்துரைகளுடன் ஒத்துபோகின்றேன்.
புவியியல் என்ற சொல்லை Earth Sciences (including geography) என்ற பொது பதத்தில் தான் நாம் விக்கிபீடியாவில் பயன்படுத்துவாதாக தெரிகின்றது. ஆகையால், geopraphy என்ற பொது பயன்பாட்டில் உள்ள சொல்லுடன் குழப்பம் விழைவிக்காதா?--Natkeeran 14:00, 23 பெப்ரவரி 2006 (UTC)