Wikipedia:தமிழ் விக்கிபீடியா தர கண்காணிப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] விக்கிபீடியாக்களின் தர ஆழம்
விக்கிபீடியாக்களின் தர ஆழம் குறித்த வரையறையும் புள்ளி விவரங்களும் மேல்-விக்கிப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இந்த முறையின் துல்லியம் கேள்விக்குரியது என்றாலும், நமக்கு மேல் கட்டுரைகளை கொண்டிருக்கும் இந்திய மொழி விக்கிபீடியாக்களை காட்டிலும் தமிழ் விக்கிபீடியாவின் தரம் அதிகமாகவே உள்ளது. அது மட்டுமன்றி 10,000 கட்டுரைகளுக்கு கீழும் நம்மை விட அதிகமாகவும் கட்டுரைகளை கொண்டுள்ள விக்கிபீடியாக்களிலும் afrikaans விக்கிபீடியா மட்டுமே சற்று அதிக தரத்தில் உள்ளது. நம்மை காட்டிலும் மிகக் குறைந்த கட்டுரைகளை கொண்டுள்ள மலையாள விக்கிபீடியா நம்மை விட அதிக தரம் கொண்டதாய் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், மலையாள விக்கிபீடியாவை நான் பார்வையிட்டவரை பக்கங்களில் அவ்வளவு உள்ளடக்கம் காணப்படவில்லை. பல சிறிய தொகுப்புகளை அவர்கள் செய்திருக்கக் கூடும். இந்த நிலையில், தொடர்ந்து நாம் தரத்தில் கவனம் செலுத்தி முன்னிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.--Ravidreams 11:18, 20 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] ஆகஸ்ட்டு மாதம்: தமிழ் விக்கியின் தரம்
ஆகஸ்ட் 2006க் கான தரம் பற்றிய அளவீட்டின் படியும் நாம் முன்னணியில் இருகின்றோம். ஆனால் தெலுங்கு விக்கி கட்டுரை எண்ணிக்கையில் மிக முன்னேறி உள்ளது (14000+), வங்காளி மொழி (9500+), மராத்தி மொழி (5400+). கன்னடமும் பிற இந்த்ய மொழிகளும் மிக விரைந்து வந்து கொண்டிருக்கின்றன. கட்டுரை எண்ணிக்கை பெரும் பொருட்டு இல்லை என்றாலும், தமிழ் பின்னைடைந்து கொண்டு வருகின்றது. மொத்த பைட் அளவிலே நாம் 16 M (மற்ற இந்திய மொழிகளைக்காட்டிலும் அதிகம்), மற்றும் பிற தரம் அளவீடுகளிலும் முன்னணியில் இருக்கின்றோம் (ஆனால் நம் முன் வீச்சு குறுகி வருகின்றது).
Lang | official | >200ch | new/day | edits | bytes | >0.5K | >2.0K | edits | size | words | internal | interwiki | image | external | redirects |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Te | 5.1 k | 3.5 k | 66 | 3.7 | 2238 | 36% | 7% | 4.5 k | 11 MB | 628 k | 56 k | 47 k | 1.8 k | 2.8 k | 434 |
Bn | 6.4 k | 3.1 k | 91 | 4.7 | 1722 | 26% | 5% | 12 k | 11 MB | 500 k | 35 k | 74 k | 1.7 k | 1.2 k | 1.1 k |
Ta | 4.1 k | 3.7 k | 19 | 8.8 | 4131 | 59% | 17% | 5.5 k | 16 MB | 706 k | 51 k | 54 k | 2.3 k | 4.6 k | 975 |
Ka | 3.6 k | 2.8 k | 24 | 4.4 | 2288 | 37% | 6% | 3.4 k | 8.0 MB | 377 k | 29 k | 12 k | 855 | 1.2 k | 757 |
mr | 5.2 k | 1.9 k | 9 | 4.5 | 1415 | 21% | 5% | 2.3 k | 7.1 MB | 370 k | 16 k | 10 k | 237 | 1.1 k | 628 |
--C.R.Selvakumar 22:38, 24 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
[தொகு] ரவியின் கருத்துக்கள்
-
- செல்வா, தகவல்களை தொகுத்து தந்ததற்கு நன்றி. நாம் மிகவும் மெனக்கெடும் தரக் கண்காணிப்பு நல்ல பலனை தந்து வருவதில் மகிழ்ச்சி. இதில் கோபியின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. எல்லா தர அளவுகளிலும், இருக்கும் கட்டுரைகள் வீதத்தில் (per article basis) பார்த்தால் நாம் தான் முன்னணியில் இருக்கிறோம். இந்திய விக்கிபீடியாக்கள் மட்டுமல்ல, பல பிற நாட்டு முன்னணி விக்கிபீடியாக்களுக்கு இணையாக நாம் தர அளவுகளில் முன்னிருக்கிறோம். இது குறித்து நான் ஓரிரு மாதங்களுக்கு முன் தயாரித்து அளித்த அட்டவணையும் நினைவு கூறத்தக்கது. பிற இந்திய மொழி விக்கிபீடியாக்களின் எண்ணிக்கை மிக குறுகிய கால அளவில் திடுமென உயர்ந்திருக்கிறது. அனேகமாக தானியங்கிப் பங்களிப்புகள் காரணமாக இருக்கலாம். இது குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. slow and steady wins the race. user:ganeshbot வந்த பின் நாமும் பயனுள்ள முறையில் கட்டுரை பரப்பை கூட்டலாம். என்றும் தரமே முதல் என்ற இலக்கை விக்கிபீடியா தொடர வேண்டும் என்பது தான் எனது விருப்பம். விக்கிபீடியாவின் வளர்ச்சி, ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு ஒப்ப இருந்தால் நன்றாக இருக்கும். தொடக்கத்தில் மூன்று வயது வரை உடல் வளர்ச்சி, திடத்தில் கவனம் (தொடக்கத்தில், விக்கிபீடியா கட்டுரை எண்ணிக்கை அதிகரிக்க கவனம் - 1000, 2000 கட்டுரைகள் வரை இப்படித் தான் ஓடினோம்.) பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக குழுந்தைக்கு அறிவூட்டுதல் - அது போல் விக்கிபீடியா கட்டுரைகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தும் நேரம் வந்திருக்கிறது. தன் குழந்தையின் உடல் வளர்ச்சி இல்லாத அறிவு வளர்ச்சியிலும் அறிவு வளர்ச்சி இல்லாத உடல் வளர்ச்சியிலும் எந்த தாயும் மகிழ மாட்டாள். இவ்விரு வளர்ச்சிகளிலும், தாய் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவாள். ஒன்றுக்காக ஒன்றை விட்டுக்கொடுப்பதில்லை. அணைக்க வேண்டிய நேரத்தில் அணைத்தும் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தும் இவ்விரு வளர்ச்சிகளிலும் கவனம் செலுத்துவாள். அவ்வப்போது பிற குழந்தைகளை ஒப்பிட்டு நம் குழந்தை அந்தளவு வளரவில்லையே என்று ஒப்பிடுவதும் இயல்பு தான். நாம் ரொம்ப மெனக்கடாவிட்டாலும், உடல் தானே கொஞ்சமாவது வளரும். ஆனால், அதிகம் மெனக்கெட்டால் தான் அறிவு கொஞ்சமாவது வளரும். உடல் ஒரு வயதுக்குப் பிறகு வளர்வதை நிறுத்திக் கொள்கிறது. ஆனால். அறிவு மட்டுமே கடைசி வரை வளர்க்கத்தக்கது. உடல் வளர்ந்திருக்கும் அளவுக்கு அறிவு வளர்ந்திருக்கிறதா என்றும், பிற பிள்ளைகளின் அளவுக்கு நம் பிள்ளை வளர்ந்திருக்கிறதா என்றும் சோதித்துக் கொள்ளல் அவசியம். ஆனால், நம் பிள்ளை பலசாலியாகவும் திடமாகவும் வளரும்போது, பிற பிள்ளைகளின் ஊளைச்சதையை பார்த்து நாம் நம்மை குறைத்து நினைக்கத் தேவையில்லை. உயரத்துக்கேற்ற பருமனும் இருத்தல் அவசியம். (ஊளைச்சதை - ஒரு பயனுமற்ற வெறும் கட்டுரை எண்ணிக்கை அதிகரிப்பு முயற்சிகள்; உடல் வளர்ச்சி - கட்டுரை எண்ணிக்கை வளர்ச்சி; அறிவு வளர்ச்சி - கட்டுரைத் தர மேம்பாடு; தாய் - பங்களிப்பாளர்கள; சமூகம் - பயனர்கள்; உயரம் - கட்டுரை எண்ணிக்கை; பருமன் - கட்டுரைத் துறை பரப்பு.). தந்தையும் தாயும் போல் இருநது நாம் தமிழ் விக்கிபீடியா வளர்ச்சியில் கவனம் செலுத்தினால், இதனை அவையத்து முந்தியிருக்கவும் செய்யலாம்; சான்றோன் எனக் கேட்டும் மகிழ்லலாம். (சரி, ரொம்ப உணர்ச்சிவசப்படுகிறேனா இல்ல ரொம்ப அறுக்கிறேனா தெரியல..எல்லாம் எங்க அக்கா பையன் வளர்ச்சியை பார்த்து வந்து அதுவா விழுற உவமைகள் ! :) )--ரவி 23:58, 24 செப்டெம்பர் 2006 (UTC)
ரவி, கருத்துக்களுக்கு நன்றி. த.வியை உரமுடன் வளர்க்க இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. இன்னும் நிறைய பயனர்கள் வரவேண்டும். அடிப்படையாக எழுத வேண்டியவை இன்னும் மிக ஏராளமாய் இருக்கின்றன, இருக்கும் பயனர்களாவது, ஒரு நாளைக்கு 2-3 குறுங்கட்டுரையாவது எழுத வேண்டும். விடுமுறை நாட்களில் 4-5 கட்டுரைகள் எழுத வேண்டும். இக்கட்டுரைகளில் ஒரு படம் + 4-5 வரிகள் இருந்தாலும் போதும். எல்லோராலும் மயூரநாதனைப் போல கட்டுக்கோப்பாக ஒருமுனைப்புடன் எழுத இயலாவிட்டாலும், சுந்தரைப் போல அறிவுக்கு கிளர்ச்சியூட்டும் கருத்துக்களை பற்றி எழுதாவிட்டாலும். அடிப்படையான செய்திகள் எழுத ஏராளம் உள்ளன (20-30 ஏரிகள், 20-30 மலைகள், 30-40 நாடுகள், 30-40 பூச்சிகள், பூரான்கள், 30-40 விளையாட்டுகள், நூற்றுக்கணக்கான அறிவியல் கருத்துக்கள், நூற்றுக்கணக்கான கலை பற்றிய கருத்துக்கள்...). இப்பொழுதுள்ள பயனர்கள் மிக அருமையாக பணியாற்றுகிறார்கள். பாராட்டுகள்! தொடர்ந்து பணியாற்றி பயன் பெருக்குமாறு அனைவர் சார்பிலும் வேண்டிக்கொள்ளுகிறேன்.--C.R.Selvakumar 01:02, 25 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
[தொகு] செல்வாவுக்கு மறுமொழியும் வேண்டுகோளும்
அடிப்படையாக எழுதப்பட வேண்டியவை இன்னும் ஏராளமாக இருக்கின்றன. உண்மைதான் செல்வா. முக்கிய விடயங்கள் தொடர்பான பட்டியல்களை உருவாக்கிப் பின்னர் அவை எல்லாவற்றையும் பற்றிய கட்டுரைகளை உருவாக்க நாம் முயலலாம். இப்பொழுது டெரன்ஸ் நாடுகள் பற்றியும் சிந்து கருநாடக இசை தொடர்பாகவும் நற்கீரன் தமிழர் வாழ்வியல் தொடர்பாகவும் எழுதி வருகின்றனர். நான் நாட்கள் மற்றும் ஆண்டுகளை முடித்துக் கொண்டு நோபல் பரிசு பெற்றவர்களைப் பற்றிச் செய்ய உத்தேசம். நேரந்தான் கிடைப்பதாயில்லை. அவசியமாக உடனடியாகத் தொடங்குவதற்கு ஒரு 20,000 தலைப்புக்கள் வரை உள்ளன. யாராவது ஒருவர் மொழிகள் பற்றித் தொடங்குவது மிக அவசியம். துறைசார் அறிவுடைய செல்வா தொடங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. --கோபி 15:36, 25 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] நற்கீரனின் கருத்துக்கள்
செல்வா தகவல்களுக்கு நன்றி. உங்களை போன்ற அறிவும், அனுபவமும், ஈடுபாடும் கொண்ட பிற பல பயனர்கள் த.வி க்கு பங்களிக்க முன்வரவேண்டும். ரவி, கோபி தரம் தொடர்பாக எடுத்துவரும் கவனம் பாரட்டுக்குரியது. குறிப்பாக கோபி பல தேவையற்ற பக்க வழிமாற்றங்களை நீக்குவது நன்று. சுந்தரின் உவமையான இலக்கணத்துக்கமைந்த நிரல் போன்று ஒரு த.வி கட்டுரையில் இருக்கவேண்டிய அடிப்படைக் கூறுகளை நாம் வரையறை செய்வது த.வி தரத்தைப் பேண உதவும். --Natkeeran 01:07, 25 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] ஆகஸ்ட் 2006 புள்ளிவிபரப் பகுப்பாய்வு
இன்னொரு புள்ளிவிபரப் பகுப்பாய்வு
[தொகு] ஜூலை 31, 2006 இன்றைப்படுத்தப்பட்ட த.வி. புள்ளிவிபரங்கள் நோக்கிக் கருத்துக்கள்
[தொகு] தமிழ் விக்கிபீடியா புள்ளிவிபரங்கள்
- தமிழ் விக்கிபீடியா புள்ளிவிவரங்கள் (அட்டவணை)
- தமிழ் விக்கிபீடியா புள்ளிவிவரங்கள் (வரைபடம்)
- மொழிவாரி விக்கிபீடியா பட்டியல் (தமிழ்:69: 30-ஜூலை-2006)
- அனைத்துமொழிப் புள்ளிவிபரங்கள் (அட்டவணை)
- அனைத்துமொழிப் புள்ளிவிபரங்கள் (வரைபடம்)
[தொகு] C.R.Selvakumar அவர்களின் இந்திய மொழி விக்கிபீடியாக்கள் ஒப்பீடு
அண்மையில் தந்துள்ள 'சூன் புள்ளி விவரத்தின் படி, தமிழானது இந்திய மொழிகளில் முதலாவதாக உள்ளது. கட்டுரை எண்ணிக்கையில் மராத்தியும், மிக அண்மையில் வங்காளி மொழியும் நம்மைத்தாண்டி சென்றுள்ள போதும், விக்கியின் தர மதிப்பீடுகள் யாவற்றிலும் தமிழே முதலாவதாக உள்ளது. கட்டுரை எண்ணிக்கையில் முன்னே நிற்கும் மராத்தி விக்கியின் அளவு 5.5M , தமிழ் விக்கியின் அளவு 13M. வங்காளி மொழி மிக விரைந்து கட்டுரை எண்ணிக்கையில் வளர்ந்து இருந்த போதும் அதன் அளவு 4.1M தான். பிற எல்லா வகையான தரம் மதிப்பிடும் அளவீடுகளிலும் தமிழே முன் நிற்கின்றது. நாம் இன்னும் பன்முக வளர்ச்சி பெறவேண்டியுள்ளது. இடைவிடாது கூடி உழைத்தால் தமிழ் விக்கி முதல் 20-30 மொழிகளில் ஒன்றாகவும், மிகச்சிறந்த விக்கிகளில் ஒன்றாகவும் வர வாய்ப்புண்டு. மிகு பயனளிக்க வல்ல ஒரு ஆக்கம். அறிவுக்கோயில்களாக எழுப்பலாம். பன்முறை சொல்லிய செய்திகள் சரிதானா, இன்னும் சிறப்பாகச் சொல்லுவது எப்படி, இன்னும் பயனுடைய கருத்துக்கள் சேர்ப்பது எவ்வாறு, இன்னும் என்னென்ன படங்கள், சமன்பாடுகள், வெளியிணைப்புகள், உள் சுட்டிகள் தரலாம் என விடாது எண்ணி மெருகேற்றினால், மிகச்சிறந்த படைப்பாக இது அமையும். ஒரு கோயிலைப்போலவே பல்லோருடைய கூட்டுழைப்பால் எழுந்த ஒரு பயன்மிகு ஆக்கமாய் இது விளங்க வல்லது.--C.R.Selvakumar 00:41, 1 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா
கீழ்க்காணும் 'சூன் மாதத்திற்கான புள்ளி விவரத்தைப் பார்க்கவும்.
Lang | official | >200ch | new/day | edits | bytes | >0.5K | >2.0K | edits | size | words | internal | interwiki | image | external | redirects |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Mr | 4.2K | 1.5K | 10 | 4.2 | 1316 | 18% | 4% | 2.6K | 5.5MB | 271K | 14K | 9.1K | 213 | 552 | 519 |
Ta | 3.1K | 2.7K | 10 | 8.4 | 4219 | 59% | 18% | 3.5K | 13MB | 583K | 40K | 35K | 2.0K | 3.7K | 745 |
Ka | 2.4K | 1.6K | 26 | 4.3 | 2152 | 35% | 7% | 2.0K | 5.0MB | 219K | 14K | 8.3K | 709 | 525 | 467 |
Te | 3.3K | 2.9K | 1 | 4.2 | 2946 | 54% | 10% | 904 | 9.6 MB | 582 k | 48 k | 17 k | 1.7 k | 2.7 k | 301 |
Bn | 2.7 k | 982 | 33 | 4.9 | 1485 | 16% | 4% | 4.8 k | 4.1MB | 169 k | 9.8 k | 24 k | 582 | 305 | 383 |
இது நமது விக்கியை மென்மேலும் வளர்த்தெடுக்க ஊக்கம் தருவதாய் உள்ளது. மேலும் முனைப்புடன் செயல்படுவோம். -- Sundar \பேச்சு 07:28, 1 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] மே 10, 2006 இன்றைப்படுத்தப்பட்ட த.வி. புள்ளிவிபரங்கள் நோக்கிக் கருத்துக்கள்
[தொகு] தமிழ் விக்கிபீடியா புள்ளிவிபரங்கள்
- அட்டவணை வடிவத்தில் புள்ளிவிவரங்கள்
- படிம வடிவத்தில் புள்ளிவிவரங்கள்
- மொழிவாரி விக்கிபீடியா பட்டியல் (தமிழ்:71-18/04/2006)
- பிற தளங்களிலிருந்து வரும் உள்ளிணைப்புகள்
[தொகு] கருத்துக்கள்
- அதிகாரப்பூர்வ தமிழ் விக்கிபீடியா புள்ளிவிவரங்கள் மே 10 அன்று இற்றைப்படுத்தப்பட்டுள்ளன. பல வழிகளிலும் தமிழ் விக்கிபீடியாவின் தரம் உயர்ந்து வருவது (அல்லது நிலைத்து வருவது) இதில் கண்கூடாகத் தெரிகிறது. தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிப் போக்குகளை எளிமையாக புரிந்து கொள்ளலாம்--ரவி 09:55, 2 ஜூன் 2006 (UTC)
- முனைப்போடு பங்களிப்பவர்களின் எண்ணிக்கை வளர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதே போக்கில் இன்னமும் வளர வேண்டும். -- Sundar \பேச்சு 11:14, 2 ஜூன் 2006 (UTC)
- ரவி, சுந்தர் ஆகியோர் குறிப்பிட்டிருப்பது போல தமிழ் விக்கிபீடியா பல துறைகளில் சரியான திசையில் செல்வது தெரிகிறது. முக்கியமாகப் பங்களிப்பவர்களின் எண்ணிக்கை வளர்ந்துள்ளது. அதே நேரம் சில துறைகளில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியிருப்பதையும் இது எடுத்துக் காட்டுகின்றது. முக்கியமாக, 2.0Kb க்கு மேற்பட்ட கட்டுரைகளின் அளவு 19% ஆகவும், 0.5Kb க்கு மேற்பட்டவற்றின் அளவு 57% ஆகவும் உள்ளது. இது தொடர்ந்தும் இறங்கு முகமாகவேயுள்ளது. இவற்றை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவேண்டும். அத்துடன் Official Count 2.7k ஆக இருக்கும்போது Alternate Count (at least one internal link and 200 (ja,ko,zh:50) characters readable text) 2.2k ஆகவே உள்ளது. இது சுமார் 500 கட்டுரைகள் (18.5%) உள்ளிணைப்புகள் இல்லாதவையாகவோ, 200 க்கும் குறைவான எழுத்துக்களைக் கொண்டவையாகவோ இருப்பதைக் காட்டுகிறது. இவற்றுட் பலவற்றை இலகுவாக 0.5Kbக்கு மேற்பட்ட கட்டுரைகளாக மாற்றிவிடலாம். இதன்மூலம் 0.5Kbக்கு மேற்பட்ட கட்டுரைகளின் தொகையையும் 70 - 75% வரை உயர்த்தி விடமுடியும். Mayooranathan 14:43, 2 ஜூன் 2006 (UTC)
[தொகு] விக்கிபீடியா தரம் உள்ளடக்கம் நோக்கி பயனர்கள் கருத்துக்கள்
வலைப்பதிவுகளிலும், பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றிலும் ஒருவர் தனது சொந்தக் கருத்துக்களை எழுதலாம். ஆனால், விக்கிபீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட அறிவுத் திரளை மக்களுக்குக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டது. சொந்தக் கருத்துக்களும் அபிப்பிராயங்களும் இதில் இடம் பெறுவதில்லை. இதனால், வேறு சொற்கள் பயன்பாட்டில் இல்லாதபோது தவிர, இருக்கும் சொற்களுக்கு மாற்றாக அங்கீகாரம் பெறாத புதுச் சொற்களைப் பயன்படுத்துவது கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து. Mayooranathan 09:32, 17 பெப்ரவரி 2006 (UTC)
[தொகு] தமிழ் விக்கிபீடியாவும் கூகுலும்
wikipedia என்ற keyword கொண்டு தேடினால் தமிழ் விக்கிபீடியா தளம் கூகுல் தேடல் முடிவுகளில் 4வது விடையாக வருகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு அடுத்து நம் விக்கிபீடியா தான் உள்ளது. மற்ற மொழி பதிப்புகள் எல்லாம் அடுத்து தான் வருகின்றன. இதன் மூலம் ஆங்கில விக்கிபீடியாவைத் தேடும், இதுவரை தமிழ் விக்கிபீடியாவை கவனித்திராத, தமிழர்கள் நம் தளத்துக்கு வரும் வாய்ப்புண்டு.
இது, ஆச்சரியமான ஒன்று தான். இத்தனைக்கும், என்ற சொல் கூட நம் முதல் பக்கத்தில் இல்லை. ஒரு வேளை தமிழ் விக்கிபீடியாவின் Pagerank அதிகமாக உள்ளதா? அறிந்தவர் விளக்கலாம். எனினும், தேடு பொறிகளுக்கு விளங்கும் வகையில் நம் பக்கங்களை வடிவமைப்பதில் நாம் எடுத்துக் கொண்ட கவனம் பயன் தரத் தொடங்கியிருப்பது கண்டு மகிழ்ச்சி.
மேலும், மயூரநாதன் கூகுலில் தமிழ் விக்கிபீடியாவின் குறித்து எனக்கு தனி மடலில் தெரிவித்த ஆர்வமூட்டும் கவனிப்புகளையும் கீழே தருகிறேன்.
There are indications that the Tamil wikipedia is on the path to becomes the single most sourse of information in Tamil. Recently I did a small study to findout how often Tamil wikipedia figure in the searches through search engins. I used 100 randomly selected Tamil words in google search. In 30% instances TW figured first in the list. It appeared within first five in 63% times. 75% of the times it came within first 10, and 85% times within 20. This shows that there are very high percentage of chances for an infi\ormation seeker inTamil to end up in TW. Therefor we need to be more responsible in developing Tamil Wikipedia.
--ரவி 12:00, 9 ஜூன் 2006 (UTC)
கூகிள் தேடுபொறி விக்கிபீடியாவை அநேகமாக முதலாவது அல்லது இரண்டாவதாகப் போடுகின்றது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று தலையங்கமே தமிழில் அமைவதும் அதன் URL (Uniform Resource Locator) தமிழில் அமைவதே அத்துடன் நடுநிலைப் போகும் காரணமாக அமைகின்றது. கட்டுரையின் அளவை மாத்திரம் கூகிள் தேடுபொறி தேடும் என்ற அவசியம் இல்லை. தற்சமயம் கூகிள் தேடுபொறியானது 150 இற்கும் மேற்பட்ட விதிகளைப் பாவித்து மிகப் பொருத்தமான ப்க்கத்தைக் கண்டுபிடிக்கின்றது. எனவே ஒருவரிக் கட்டுரைகள், மீள்வழிநடத்தற் பக்கங்கள் இவற்றை நீக்குவதால் பெரிதாகப் பலனேதும் இல்லை. எனினும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே. மீள்வழிநடத்தற் பக்கங்கள் கூகிள் தேடுபொறிமூலம் தேடும்போது கிடைக்க வாய்ப்புள்ளது இவ்வாய்ப்பை நாம் மீள்வழிநடத்தல் பக்கங்களை அழித்தால் கிடைக்காமற் போய்விடும். தகவற் தொழில் நுட்பத்தில் பல கட்டுரைகள் எழுதப் படவேண்டும். மருத்துவம் சம்பந்தமாக விரல் விட்டு எண்ணக்கூடிய கட்டுரைகளேயுள்ளன. கட்டிடக் கலை தொடர்பாக ஆரம்பம் முதல் சிறப்பாக கட்டுரைகளை மயூரநாதன் வழங்கி வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் இன்னமும் 1000இற்குக் குறைவான பயனர்களேயுள்ளனர் எனவே நாம் புதிய பயனர்களைப் பெறுவதிலும் கட்டுரைகளை அதிகரிப்பதிலும் அவற்றை மேம்படுத்துவதிலும் கூடுதலாகக் கவனம் செலுத்தவேண்டும். --Umapathy 01:12, 25 செப்டெம்பர் 2006 (UTC)
-
- உமாபதி, கோபி நீக்கும் பக்க வழிமாற்றங்கள் கவனக்குறைவால், அல்லது அலட்சியத்தால் நகர்த்தலின் போது விடப்பட்டவை. பயனுள்ள பக்க வழிமாற்ற பக்கங்களை அவர் நீக்க மாட்டார். இவற்றைத் தவிர பயனுள்ள் பக்க வழிமாற்றங்களை நாம் உருவாக்க வேண்டும். சிவகுமார் அவர்கள் அவ்வப்பொழுது பல தகுந்த பக்க வழிமாற்றங்களை உருவாக்கி வருவது கவனிக்கத்தக்கது. --Natkeeran 01:19, 25 செப்டெம்பர் 2006 (UTC)
-
-
- நன்றி நற்கீரன், கோபியின் பல மடங்கு நேரத்தைச் செலவழித்து விக்கிபீடியாவை மேம்படுத்தும் ஆர்வத்தை பாராட்டுகின்றேன். எனினும் சில உடைந்த இணைப்புக்களும் காணப்படுகின்றன. எடுத்துக் காட்டாக நடப்பு நிகழ்வுகள் இங்கேயுள்ள தலைப்பொன்று ஈழத்தமிழர் படுகொலைப் படலம் வழிமாற்றப்பட்டு ஈழத்தமிழர் படுகொலைகள் எனமாற்றப் பட்டிருந்தது. இப்போது வழிமாற்றம் நீக்கப் பட்டிருந்ததால் உடைந்த இணைப்புக்களே தோன்றுகின்றன. ஆங்கிலத்தில் சொல்வது போல் More work more problem. தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் கோபியின் பங்கு அளப்பரியது. அவர் தொடர்க்கம் முதலே வேகமாகப் பங்களித்து விக்கிபீடியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றுவருகின்றார். மீள்வழிநடத்தல் குறித்து சரியான முடிவொன்றை தமிழ் விக்கிபீடியாவில் எடுக்கவேண்டும். ஆங்கிலத்தில் தலைப்பை உருவாகி மீள்வழிநடத்தலாமா இல்லையா என்பதும் முடிவெடுக்கப் படவேண்டும். இது கூகிள் ஏர்த் போன்றவற்றிலிருந்து தமிழ் விக்கிப்பீயாவை இணைப்பதற்கு உதவும்--Umapathy 03:06, 25 செப்டெம்பர் 2006 (UTC)
-
[தொகு] தரமுயர்த்தல் கண்காணிப்பு கூறுகள்
அதிகாரப்பூர்வ விக்கிபீடியா புள்ளிவிவரங்கள், ஒரு விக்கிபீடியாவின் தரம் எவ்வறு கண்காணிக்கப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள உதவுகிறது. தமிழ் விக்கிபீடியாவின் தரம் உயர்த்த ஒவ்வொரு பங்களிப்பாளரும் எளிதில் ஆற்றக்கூடிய சில பணிகள்:
- தகுந்த இடங்களில், நடைக் கையேடுக்கு ஏற்ப, உள் மற்றும் வெளி இணைப்புகள், விக்கியிடை இணைப்புகள் தருவது.
- பக்கங்களை பக்கவகைப்படுத்துவது (தற்பொழுது 24% பக்கங்களே வகைப்படுத்தப்பட்டுள்ளன (ஆங்கில விக்கிபீடியாவில் 81%) இது மிகவும் குறைவான விகிதமாகும்)
- தகுந்த எண்ணிக்கையில், பொருத்தமான படங்கள் இணைப்பது
- குறுங்கட்டுரைகளை விரிவாக்குவது (தற்பொழுது 19% கட்டுரைகளே 2 கிலோ பட்டுக்கு அதிகமாக உள்ளன (ஆங்கில விக்கிபீடியாவில் 32%). இது மிக மிக குறைவான விகிதமாகும். ஏற்கனவே உள்ள குறுங்கட்டுரைகளை விரிவு படுத்துவதில் சிரமம் இருந்தாலும், புதிய கட்டுரைகளை விரிவாக எழுத முற்பட வேண்டியதின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது)
- புள்ளிவிவரப் பட்டியலில் கண்காணிக்கப்படாவிட்டாலும், தமிழ் விக்கிபீடியாவில் கணிசமான அளவு தமிழாக்கம் செய்யப்படவேண்டியுள்ள கட்டுரைகள், வார்ப்புருக்கள் உள்ளன. அவற்றை விரைவில் தமிழாக்குவது அவசியம்.
--ரவி 12:00, 9 ஜூன் 2006 (UTC)
[தொகு] தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள்/மக்கள் எண்ணிக்கை கணிப்பீட்டில் அடிமட்டத்தில்
en:Wikipedia:Wikipedia articles per population
[தொகு] தமிழ் மொழி விக்கிபீடியாவும் பிற இந்திய மொழி விக்கிபீடியாக்களும்
தமிழ் இந்திய மொழிகளில் இப்பொழுது இரண்டாவதாக உள்ளது. வங்காள மொழியும் கன்னட மொழியும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன (கட்டுரை எண்ணிக்கையில்). அடிப்படையான அளவீடுகளின் படி தமிழே முதலாவதாக இது வரையிலும் இருந்து வருகின்றது. அனால், கன்னடத்திலும் மிக அழகாக செய்திருப்பது போலத் தெரிகின்றது (எனக்கு கன்னடம் படிக்கத் தெரியாது, ஆனால் ஓரளவு எழுத்துக்கூட்டி மிக மிக மெள்ள சில வரிகள் படிக்க முடியும்). முன்னணியில் நிற்கும் மராட்டி மொழிக்கும் தமிழுக்கும் சுமார் 1000 கட்டுரைகள் வேறுபாடு உள்ளது. ஆனால் மராட்டிய மொழியில் தரமான வளமான கட்டுரைகள் குறைவு. கருத்துப் பரவலும் குறைவு. பல இந்திய மொழிகளும் கிரிக்கெட் வீரர்களையும், திரைப்படம் பற்றியும், ஊர், மாநிலம், நாடு பற்றிய கட்டுரைகளையும் கொண்டே கட்டுரை எண்ணிக்கைகளைக் கூட்டியுள்ளன. அறிவான கருத்தூறும் ஆக்கங்கள் மிக குறைவு. இடைவிடாதும், இன்னும் தக்கார் பலரையும் கொண்டு உழைத்தால், த.வி. ஒரு சிறந்த அறிவுப் பயன் கருவூலமாகத் திகழ வாய்ப்புள்ளது. ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு நல்ல நிலையை எட்டும் என்று எண்ணுகிறேன். இதுவரையிலும் த.விக்கு உழைத்தவர்கள் மிகச்சிறப்பாக பணியாறியிருக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இன்னும் சுமார் 100 தரமான உழைப்பாளிகள் வந்து ஆக்கங்கள் தர இயலும். தரவேண்டும். --C.R.Selvakumar 17:12, 16 ஜூலை 2006 (UTC)செல்வா
-
- கன்னட மொழி விக்கிபீடியா பகுப்புக்களில் அவர்கள் சேர்த்திருக்கும் banner மெருகூட்டுகின்றது. மேலும் அவர்கள் விக்கிபீடியா மாநாடு ஒன்றை இந்தியா - பெங்களூரில் விக்கிபீடியா அமைப்பின் ஆதரவுடன் கூட்டி தங்களை விரிவாக அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. --Natkeeran 18:23, 16 ஜூலை 2006 (UTC)
தமிழ் விக்கிபீடியா தற்போது 1000 கட்டுரைகளைத் தாண்டியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்த ஆயிரம் கட்டுரைகளில் ஏராளமான குறுங்கட்டுரைகள் இருக்கின்றன. முழுமையாக மொழி பெயர்க்கப்படாத கட்டுரைகளும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் முழு அளவுத் தமிழ்க் கட்டுரைகளாக வளர்த்து எடுக்க வேண்டியுள்ளது. ஆயிரம் தாண்டிய உற்சாகத்தோடு மேலும் உழைப்போம். ஹிந்தி, மராட்டி போன்றவற்றை எட்டிப்பிடிப்பது பெரிய விடயமல்ல. ஆங்கில மொழியிலுள்ளது போல இலடசக்கணக்கில் தமிழிலும் கட்டுரைகள் வேண்டும்.
தமிழ்ப்பிரியன் மராட்டி மொழியில் உள்ளதைவிடத் தமிழில் ஏன் கட்டுரைகள் குறைவாக இருக்கின்றன என்று கேட்டிருக்கிறார். மராட்டி மொழி குறைந்த மொழியல்ல. அதுவும் வளமுள்ள மொழிதான். கட்டுரைகளின் எண்ணிக்கைகளைக் கூட்டுவது கஷ்டமானதல்ல. குறுங்கட்டுரைகளை அதிக அளவு உருவாக்குவதன் மூலம் கட்டுரை எண்ணிக்கையை விரைவில் கூட்டமுடியும். பல மொழிகளில் இவ்வாறு செய்கிறார்கள். ஆரம்பத்தில் நானும் பல குறுங்கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். பின்னர் அவற்றை விரிவு படுத்தியும் இருக்கிறேன். தமிழில் கட்டுரை எழுதுபவர்கள் பயனுள்ள விபரங்கள் அடங்கிய கட்டுரைகளை எழுதுவதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்கள் ஏனைய இந்திய மொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழிலேயே நீளமான கட்டுரைகள் அதிக விகிதத்தில் உள்ளன. கடந்த மே மாதத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களிலிருந்து எடுக்கப்பட்ட விபரங்கள் சிலவற்றை கீழே தருகிறேன். இவை தமிழ் விக்கிபீடியாவின் ஆரோக்கியமான வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.
விபரம் - | தமிழ் - | ஹிந்தி - | சமஸ் - | மராட்டி - | தெலுங்கு |
---|---|---|---|---|---|
கட்டுரை எண்ணிக்கை (அதிகாரபூர்வ) - | 665 - | 1200 - | 1100 - | 1000 - | 180 |
கட்டுரை எண்ணிக்கை (மாற்று முறை) - | 586 - | 426 - | 733 - | 161 - | 132 |
ஒரு கட்டுரைக்கான சராசரி பைட்டுகள் - | 5508 - | 1592 - | 1902 - | 882 - | 2990 |
கட்டுரைகள் 0.05 kb க்கு மேல் - | 71% - | 22% - | 46% - | 10% - | 41% |
கட்டுரைகள் 2.0 kb க்கு மேல் - | 26% - | 7% - | 6% - | 3% - | 11% |
தரவுத்தள அளவு - | 3.6M - | 2.5M - | 6.7M - | 0.76M - | 0.64M |
சொற்கள் - | 185K - | 119K - | 124K - | 32K - | 29K |
உள் இணைப்புகள் - | 13.0K - | 8.3K - | 4.0K - | 0.145K - | 1.2K |
படிமங்கள் - | 560 - | 229 - | 65 - | 55 - | 24 |
இது பல வகையிலும் தமிழ் விக்கிபீடியா முண்ணணியில் இருப்பதைத்தான் காட்டுகிறது. இந்த நிலையை நாங்கள் பாதுகாத்துவர வேண்டும். கட்டுரைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்கும் அதே நேரம் அவற்றின் தரத்தை அதிகரிக்கவும் முயல வேண்டும். கடந்த மே மாதம் வரை விக்கிபீடியா புள்ளிவிபரங்களைக் கிரமமாக வெளியிட்டு வந்தார்கள். ஆரம்பத்தில் மேற்கண்ட விடயங்களில் தமிழ் விக்கிபீடியாவின் நிலையை உயர்ந்த மட்டத்தில் பேணுவதற்கு இவ்விபரங்கள் மிகவும் உதவியாக இருந்தன இப்போது இவ்விபரங்கள் இற்றைப்படுத்தப் படுவதில்லை. Mayooranathan 20:49, 16 ஆகஸ்ட் 2005 (UTC)
[தொகு] 1000 கட்டுரைகள் மகிழ்ச்சி !
இன்று விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை 1000த்தை தாண்டி காட்டியபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. விக்கிபீடியாவின் வளர்ச்சியில் பலரும் பல கட்டங்களில் இந்த 1000 கட்டுரை இலக்கை அடைய வேண்டியது குறித்து குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்பொழுது இந்த இலக்கை எட்டிப்பிடித்திருப்பது மன நிறைவை தருகிறது. இதன் மூலம் பிற மொழி விக்கிபீடியா தளங்களிலிருந்து தமிழுக்கு வரும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தமிழ் விக்கிபீடியா திட்டத்திற்கு Visibility அதிகரிக்கும் என்றும் நம்புகிறேன். இந்த மைல்கல்லை அடைவதற்கு உதவிய ஒவ்வொருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக இத்திட்ட தொடக்க காலத்திலிருந்து செயல்பட்டு வரும் மயூரநாதன், அப்புறம் சுந்தர், சந்தோஷ் குரு, ஹரி கிஷோர், ஆனந்த், Voice on wings, உதயகுமார் மற்றும் அண்மைக்காலத்தில் இத்திட்டத்தில் இணைந்து மிகுந்த முனைப்புடன் பல புதிய பயனுள்ள கட்டுரைகளை உருவாக்கி வரும் சிவகுமார், ஸ்ரீநிவாசன், கார்த்திகேயன், மயூரன், நற்கீரன் ஆகியோருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 1000 கட்டுரைகள் என மகிழும் அதே நேரத்தில், இவற்றில் பல குறுங்கட்டுரைகள் தாம் என்பதையும் இன்னும் மேம்படுத்தி எழுதத் தக்கன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தவிர, ஒரு கலைக்களஞ்சியத்தில் கட்டாயம் இடம் பெற வேண்டிய கட்டுரைகள் பலவும் இன்னும் எழுதப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். பல நாடுகளை சேர்ந்த பல்துறை அறிஞர்கள், ஆர்வலர்கள் இந்தத்திட்டத்தில் பணியாற்ற வரும் போது இந்தக்குறை தானாக நீங்கும் என நம்புகிறேன். அது வரை, அவரவர் ஆர்வத்திற்கும் புலமைக்கும் ஏற்ப தற்பொழுது உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவதிலும் புது கட்டுரைகளை உருவாக்குவதிலும் விக்கிபீடியா தளத்தை பராமரிப்பதிலும் தொடர்ந்து உதவுமாறு தற்பொழுது உள்ள பயனர்களை கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--ரவி (பேச்சு) 12:08, 14 ஆகஸ்ட் 2005 (UTC)
- ஆம், மிக்க மகிழ்ச்சி.
ஆங்கில விக்கிபீடியாவின் முதற் பக்கத்திலிருந்து இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்.(இணைப்பு en:User:BanyanTree-ஆல் ஏற்கெனவே தரப்பட்டுள்ளது.) - கூடிய விரைவில் விக்கிபீடியா:அனைத்து மொழி விக்கிபீடியாக்களிலும் இருக்க வேண்டிய கட்டுரைகளின் பட்டியல்-ல் உள்ள அனைத்து கட்டுரைத் தலைப்புகளிலும் கட்டுரைகள் உருவாக்கப்படும் என நம்புகிறேன். -- Sundar \பேச்சு 05:58, 16 ஆகஸ்ட் 2005 (UTC)
[தொகு] விக்கிபீடியா தரம் தொடர்பான கட்டுரைகள்
- Information Quality Discussions in Wikipedia - ஆங்கிலம்
- Digital Maoism: The Hazards of the New Online Collectivism by Jaron Lanier - ஆங்கிலம்