Wikipedia பேச்சு:சொல் தேர்வு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] விக்கிபீடியாவில் சொல் தேர்வு குறித்த கலந்துரையாடல்
என் தனிப்பட்ட விருப்பம் கூடுமானவரை வடமொழி மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் இருக்கும் வரையில் தமிழ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். சில பொதுவான சூழல்களும் என் விருப்பப் பயன்பாடுகளும்:
- இணையான தமிழ்ச் சொல் செயற்கையானதாகவும் பிறமொழிச் சொல் மிகக் கூடுதலான அளவு வழங்கியும் வருதல் (எ-கா) பேனா (தூவல் நல்ல தமிழ்ச் சொல்லாயிருப்பினும் அவ்வளவாக வழக்கத்தில் இல்லை) - பிறமொழிச் சொல்
- மிகவும் அண்மைய கண்டுபிடிப்புகள் மற்றும் கருத்துக்கள் அல்லது இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்படாத ஆனால் சில குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர பொதுமக்களால் அறிந்திரப்படாத ஆங்கிலச் சொற்கள் (எ-கா) கணிக்கப்பட்ட குறுக்குவெட்டு வரைவி வரிக் கண்ணோட்டம் Computed tomography scan - தமிழ் கலைச்சொல் மற்றும் அடைப்புக் குறிக்குள்ளோ அல்லது இணைப்பின் இறுதியில் உள்ள கட்டுரையிலோ ஆங்கிலப் பயன்பாடு
- தமிழிலேயே வேறு இணைச்சொல் இதுவரை இல்லாமல் வடமொழியை பெரும்பாலான தமிழாசிரியர்கள் உட்பட யாவரும் நெடுநாட்களாக பயன்படுத்தி வருதல் (எ-கா) இராகம் - பிறமொழி
- தமிழ்ச்சொல்லும் வடமொழிச்சொல்லும் இரண்டுமே வழக்கத்தில் இருத்தல் (எ-கா) ஆறு, நதி - தமிழ்ச் சொல்
- இணையான வடமொழிச்சொல்லோ பிறமொழிச்சொல்லோ தமிழ் உச்சரிப்பில் பொருந்தாமலிருத்தல் (எ-கா) விசேஷம் தமிழ்ச்சொல் வேறு வழியில்லை என்றால் எழுத்துப்பெயர்ப்பாவது செய்யவேண்டும்.
இருப்பினும் மேற்கூறியவற்றை அப்படியே நெளிவு சுழிவின்றிப் பயன்படுத்த வேண்டுமென்பதில்லை. ஆங்காங்கே இசைந்து கொடுக்கலாம். இருப்பினும் எவருக்கேனும் ஓரிடத்தில் நல்ல இணைத்தமிழ்ச் சொல் தெரியாதிருந்தால் அவருக்கு தோன்றும் சொல்லைப் பயன்படுத்தலாம். அதே நேரம் பிறருக்கு அதை நல்ல தமிழ்ச் சொல்லால் மாற்றுவதற்கும் உரிமை உண்டு என்பதையும் கொள்ள வேண்டும். இவையனைத்தும் என் தனிப்பட்ட விருப்பங்களே. -- Sundar \பேச்சு 07:11, 11 ஆகஸ்ட் 2005 (UTC)
- I certainly agree with Sundar's opinions. but some quick commments on words like ஆறு, நதி. கங்கை ஆறு, யமுனை ஆறு, சிந்து நதி. இம்மூன்றும் நான் தொடங்கி வைத்த கட்டுரைகள். ஆறு என்ற சொல்லையே கங்கை, யமுனை தலைப்பிலும், கட்டுரையிலும் பயன்படுத்தியிருந்தாலும், சிந்து ஆறு என்பதை விட சிந்து நதி பொருத்தமாகவும் அழகாகவும் இருப்பதாக நான் கருதியதால் இந்த தலைப்பை தேர்ந்தெடுக்க நேர்ந்தது. இது போல் சில இடங்களில் இசைந்து கொடுப்பது குற்றமாகாது. இது பிறமொழி மூலம் கொண்டு தமிழரால் அதிகம் பயன்படுத்தப்படும் வேறு சில சொற்களுக்கும் பொருந்தும். - ஸ்ரீநிவாசன் 07:57, 11 ஆகஸ்ட் 2005 (UTC)
- ஆம், நீங்கள் சொல்வது சரியாகத்தான் உள்ளது. சிந்து நதி என்ற பயன்பாடு பாரதியார் பயன்படுத்தியதைத் தொடர்ந்து வழக்கத்திற்கு வந்துள்ளது. இம்மாதிரியான இடங்களில் நாம் இசைந்து கொள்ளத்தான் வேண்டும். இந்த உரையாடல்களில் உள்ள கருத்துக்களை எவரேனும் தொகுத்து விக்கிபீடியா:சொல் தேர்வு என்ற கட்டுரையை உருவாக்கலாம். அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் அந்த கொள்கை முன்வடிவை கலந்தாய்வு செய்யலாம். பின்னர் அது ஒரு நடை நெறிமுறையாகட்டும். கடைசியாகக் கொடுக்கப்பட்டுள்ள கட்டுநீக்கம் (அவரவர் விருப்பத்திற்கு பயன்படுத்தலாம், மற்றவர் விரும்பினால் தமிழ்படுத்திக் கொள்ளலாம்) இருக்கும் வரை இந்த நெறிமுறையினால யாருக்கும் சிக்கல் இல்லை. -- Sundar \பேச்சு 08:41, 11 ஆகஸ்ட் 2005 (UTC)
- தமிழில் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாமா இல்லையா என்பது தொடர்பான விவாதம் தமிழர் மத்தியில் இறவா வரம் பெற்ற ஒன்று. மேலே உள்ள கருத்துக்கள் அனைத்திலும் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும் சுந்தருடைய கருத்துக்களுடன் எனக்குக் கூடிய உடன்பாடு உண்டு. தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் அடிப்படையானது. ஆனால் சூழ்நிலைகளை ஒட்டி வழக்கமான பயன்பாட்டிலுள்ள சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனாலும் பிற மொழிச் சொற்களின் பயன்பாட்டை ஒரு விதியாக வைத்துக்கொள்வது நல்லதல்ல. உங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கும், ஒரு காலத்திலே அறிஞர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் 50%க்கு மேல் சுத்தமான சமஸ்கிருதச் சொற்களைக் கலந்து "மணிப்பிரவாளம்" என்று அழைக்கப்பட்ட ஒரு நடையில் தமிழை எழுதினார்கள். அந்த நிலையிலிருந்து தமிழை விடுவிக்க மறைமலை அடிகள் போன்றவர்கள் பெரிய இயக்கமே நடத்த வேண்டியதாயிற்று. இன்று ஆங்கிலம் அந்த இடத்தை எடுத்துக் கொண்டுள்ளது. பல்வேறு துறைகள் சார்ந்த வேகமான வளர்ச்சி ஏராளமான புதிய பொருட்களையும் எண்ணக் கருத்துக்களையும் அன்றாடம் புழக்கத்துக்குக் கொண்டுவருகின்றது. இதனூடாக புதிய புதிய பிறமொழிச் சொற்களும் வந்து சேருகின்றன. இவற்றைவிட இன்றைய பத்திரிகைகளும், திரைப்படங்கள், வானொலி, தொலைக்காட்சி முதலானவைகளும் நல்ல தமிழ்ச் சொற்கள் இருக்கும்போதே வேண்டுமென்றே பிறமொழிச் சொற்களைப் புகுத்தித் தமிழ் வளர்ச்சிக்குச் சேவை செய்ய முயல்கின்றன. இந்தச் சூழ்நிலையில் தமிழ் தமிழாகவே வளர்க்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஒரு கடமை உண்டு. புதிதாக வரக்கூடிய எல்லாப் பொருள்களுக்கும், எண்ணக் கருத்துகளுக்கும், தமிழ்ச் சொற்கள் இருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. இதனால் பிறமொழிச் சொற்களை அப்படியே பன்படுத்துவோம் என்பதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. கூடிய வரையில் தமிழ் மரபுக்குப் பொருத்தமில்லாத சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்களை உருவாக்க முயல்தல் பிழையான ஒன்றல்ல. ஆரம்பத்தில் புதிய சொற்கள் புழங்குவதற்குக் கடினமாக இருந்தாலும், காலப்போக்கில் இயல்பாகிவிடும். எடுத்துக்காட்டாக, இலங்கையில், புதிதாக உருவாக்கப்பட்ட எத்தனையோ தமிழ்க் கலைச் சொற்கள் இன்று மாணவர்கள் மத்தியில் மிகவும் இயல்பாக வழங்கிவருவதைக் காணலாம். நூற்றுக்கணக்கான எழுத்துக் கூட்டுவதற்கே கடினமான லத்தீன் மொழி மருத்துவக் கலைச் சொற்களையும், தாவரவியல் வகைப்பாட்டுப் பெயர்களையும் நம்மவர்கள் தலைகீழ்ப் பாடமாக வைத்திருப்பது நாம் அறியாதஒன்றா? செல்வாக்குள்ள பத்திரிகைகளும், முன்னர் குறிப்பிட்ட ஏனைய பொது ஊடகங்களும் பெரும்பாலும் வணிக நோக்கங் கொண்டவை. விற்பனையே அவர்களது முக்கிய குறிக்கோள். ஆனால் விக்கிபீடியா அத்தகையது அல்ல. ஸ்ரீநிவாசன் குறிப்பிட்டதுபோல் கலைக்களஞ்சியம் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது அவசியமே. ஆனாலும் தமிழ் தமிழாகவே வளர்க்கப்படுவதை உறுதி செய்துகொள்வதும் விக்கிபீடியா போன்ற இலாப நோக்கமற்ற திட்டங்களின் கடமையாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து. இவ்வாறு எழுதுவதனால் பிறமொழிச் சொற்கள் தொடர்பில் கடுமையான போக்கை நான் ஆதரிப்பதாகக் கருத வேண்டியதில்லை, எழுதும்போது தமிழ் மொழியில்தான் நாங்கள் எழுத முயல்கிறோம் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தான் நான் சொல்ல விரும்புகிறேன். உண்மையில் நானும் ஏராளமான ஆங்கில, வடமொழிச் சொற்களை எழுதும்போது பயன்படுத்துவது உண்டுதான் எனினும் கூடியவரை அவற்றைத் தவிர்க்கவே முயல்கிறேன். Mayooranathan 10:37, 11 ஆகஸ்ட் 2005 (UTC)
சுந்தர், மயூரநாதன், ஸ்ரீநிவாசன் எல்லாரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து எனக்கு தமிழ் தட்டச்சு செய்யும் வேலையை மிச்சமாக்கி விட்டீர்கள் :) அனைவரின் கருத்துக்களும் மிதவாதப் போக்குடையதாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் உள்ளன. அவற்றை தொகுத்து கூறும் முகமாகவும் என் நிலைப்பாட்டை தெளிவாக்குவதற்காகவும் சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன்.
- If the subject is very old and the related tamil word is non existant or unpopular , then we shall continue to use the non tamil word. (ex.,using பேனா, சாவி, ஆட்டோ (vehicle) is ok since tamil word தூவல் for pen திறவு கோல் for சாவி are unpopular and tamil word for auto does not exist)
- If the word is almost universal in use, then we should continue using it even if it is non tamil word (ex., Nitrogen, hydrogen etc should be used as such in Tamil too without trying to translate. Such use will avoid confusion)
- If the non tamil word has some meaning by itself then we should try to translate it.(ex., Bacteria means small rods and virus means posion.. One can see that there are discussions going on in wikipedia talk pages regarding coining the right term for these non tamil words)
- If the subject is recent and the tamil word is non existant, then we should try to coin new words and start using it in wikipedia and thus try to make the new word popular. This is particularly critical in fields like science . Such iniatives will make tamil a modern day usable language for all fields instead of just being confined to literature or philosophy. Also, it will kickstart a process of thinking in tamil by tamil people in all fields. I donno what our ancestors were doing two three centuries back when the most significant advancements in sciences started. Even if there had been tamil scientists who thought in Tamil nothing was documented and so we don have any technical tamil vocabulary in use. Then once we started learning modern science, we were taught by british in english and shamefully that process is continuing. (u can ask any student working in non english speaking university and they can tell u how shameful it is to not have an understanding of technical things in our own language. May it be germans or chinese they cannot belive that how we cannot think in our own language when it comes to science).It is heartening that compared to other indian languages, tamil is atleast in the forefront in the internet. Any language that does not make it modern will end up dying and we should be aware that we should start understanding and thinking in our own language to keep it alive.
- However popular is the non tamil word if there is an equal popular tamil word then one should prefer using the tamil word only. It is in this vein that I suggested ஆறு be used instead of நதி. almost 50 years ago everyone in Tamilnadu could understand the மணிப்பிரவாள நடை. So there was no need to launch a தனித்தமிழ் இயக்கம். But if the trend had continued, by now almost tamil would have sunken into a foreign language. Similarly there are many english words that even a grandma in a village will understand (ex., கரண்ட், ஹலோ) now and it is very tempting to think why we should not continue to use those words. The danger is that after some time we will never realise which is Tamil and which is non tamil ..Recently I had been watching lot of hindi movies and I am shocked to know that lot of words which I have though to be good tamil words are actually not tamil (ex., காரணம், முக்கியம், அநியாயம், மேஜை, கவிதை, விசுவாசம்..and the list grows endlessly..some intelligent (!) ancestor of ours had discovered the அம் விகுதி and had joined it to many non tamil words to make it look tamil ). Equal tamil words of the examples I have given should have been in use some centuries before but we have lost them today. In this context, we have a responsibility to use tamil words if it is popular. Otherwise we may end up losing it in due course. While we may not be aware what is tamil and what is non tamil word, atleast if someone points out that there is a equal popular tamil word exists we should be ready to change it. Use of non tamil words is not a sin and it is allowed by tamil grammar books. But I belive that this liberty should be used carefully and sparsely with fore thought.
- We may use english or latin nouns but in all such occassions the non tamil words should be transliterated in Tamil and a atleast a rough meaning should be given in brackets.
I am typing this message in english just to underline a fact that I am neither a pure tamil activist nor a die hard tamil fanatic. I also understand the difficulty in writing good tamil articles and the time taken to type the articles in Tamil.
As mayooranathan mentioned, atleast in non commercial ventures like this we should be aware of the responsibility and need to write in good tamil. As he mentioned certain tamil terms may look ridiculous in the beginning but it will become normal once it comes into popular use. and wikipedia having a potential to become a popular and strong source of information in Tamil (ex., கைப்பேசி, இணையம், குறுஞ்செய்தி are popularly used words even among common men in singapore just because singapore tamil radio uses it whereas use of these words may be ridiculous in TN), why dont we adopt a good tsyle of writing here ? Its just a wish and suggestion.
நன்றி.
--ரவி (பேச்சு) 11:47, 11 ஆகஸ்ட் 2005 (UTC)
- நான் இந்தி மொழியை முறையாகக் கற்றதால்தான் நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதில் மேலும் முனைப்பு காட்டுகிறேன். இதனால் இந்தியையோ, பிற மொழிகளையோ நான் வெறுக்கிறேன் என்பதில்லை.
- To quote my English teacher, "when you use English and Tamil in a single sentence, you're doing a disservice to two languages at the same time".
- இதுவே எனது வழிகாட்டுதலாக இதுவரை இருந்துள்ளது. இருப்பினும், பொதுவாக மொழியை வளர்ப்பது விக்கிபீடியாவின் மைய நோக்கமல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்னை உட்படுத்திய பெரும்பாலான விக்கிபீடியர்களுக்கு அதுவும் ஒரு குறிக்கோளாக இருக்கலாம், அவ்வாறு இருப்பின் அவர்கள் அதைப் பின்பற்றுவதில் தவறு எதுவுமில்லை. இருப்பினும், எந்த ஒரு இறுக்கமான கோட்பாடும் தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். ஆகையால் நாம் ஒரு இணைப்படுத்தப்பட்ட நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும்.
- இரவி கவிதை போன்ற எடுத்துக் காடுக்களைக் கூறியுள்ளார். தொல்காப்பியத்திலேயே மாத்திரை போன்ற வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டால் எவ்வளவு அதிர்ச்சியூட்டும்? நம்மால் வரலாற்றை மாற்றி எழுத முடியாது. இருப்பினும் நம் மொழி இன்னும் உயிர்ப்புடன் இருந்து வருவதைக் கண்டு மகிழ வேண்டும். இனி வரும் நாட்களில் இவ்வுயிர்ப்பை பாதுகாக்க வேண்டும். ஈப்ரு மொழி, மொழிகளின் புத்துயிர்ப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மொழிகளைப் பாதுகாப்பதில் எனக்குத் தெரிந்த ஒரு சிறந்த பலன் அம்மொழியில் மட்டுமே உள்ள அம்மொழியினர் மட்டுமே அறிந்திருக்கும் தகவல்கள் பாதுகாக்கப்படும். பொதுவாக அவை அம்மொழி பேசுபவர்கள் வாழும் பகுதிகளில் அத்தகவல்கள் பயனளிக்கும். எடுத்துக்காட்டாக ஆடிப்பட்டம் தேடி விதை, தை பிறந்தால் வழி பிறக்கும் போன்றவை. இதே வழியான நோக்கில் பிறமொழிகளை, குறிப்பாக நாம் வசிக்கும் இடத்தில் பேசப்படும் மொழிகளைக் கற்பதில் பயன் உண்டு. -- Sundar \பேச்சு 13:22, 11 ஆகஸ்ட் 2005 (UTC)
I agree that Wikipedia's prime objective is not to grow tamil and that we cannot frame any hard and fast rules in this regard. Any such rule will only end up in hampering the sprit of wikipedians and the growth of this project. It shall only be left to the discretion of the author to choose the words in the article he writes. In excessive cases of unnecessary non tamil words use we may reqwrite the article. Otherwise, i agree that we need to be some what lenient in this regard. This discussion shall remain here in order to orient the new users towards our stand on this issue.--ரவி (பேச்சு) 14:20, 11 ஆகஸ்ட் 2005 (UTC)
- சுந்தர் தொல்காப்பியத்தில் இடம்பெறும் வடமொழிச் சொல்லைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். எப்பொழுதும் தமிழில் உள்ள வடமொழித் தாக்கத்தை பற்றியே பேசப்படுகிறது. தமிழ் மொழியின் சில சொற்கள் ஏன் வடமொழியை பாதித்திருக்கக்கூடாது? ஒரு சொல் தமிழ் மொழியில் மட்டும் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் சில தமிழ்ச் சொற்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவா என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. நான் தமிழ் இலக்கியமோ இலக்கணமோ அதிகம் படித்தவனல்ல. அதனால் எது தூய தமிழ்ச் சொல் எது இல்லை என்று வேறுபடுத்தும் விதி எனக்குத் தெரியாது. ஆகவே என் சந்தேகம் trivial ஆக இருக்கலாம். அப்படி இருந்தால் தயை செய்து என்னை மன்னித்து என்னை தெளிவுபடுத்தவும். ஆனால் வடமொழி பேசுவோரும் தமிழ் பேசுவோரும் ஒரே நிலப்பரப்பில் பல் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். ஆக இரு மொழிகளும் ஒன்றை ஒன்று பாதித்தல் இய்ல்பு. எந்த மொழியிலும் அருகில் பயன்படுத்தப்படும் பிற மொழியின் பாதிப்பு தவிர்க்க முடியாதது. இதற்கு சமஸ்கிருதம் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது என்பது என் சிந்தனை. முன்னர் கூறியது போல் நான் கூறுவதில் தவறு இருந்தால் என்னை திருத்தவும்.
- மற்றபடி மயூரநாதன், சுந்தர், ரவி ஆகியோரின் மிதவாத கருத்துக்களுக்கு நான் உடன்படுகிறேன். மற்ற பயனர்களும் தங்கள் கருத்துக்களை இங்கே கொட்டினால் நன்று- ஸ்ரீநிவாசன் 15:59, 11 ஆகஸ்ட் 2005 (UTC)
- இக்கேள்வியை எழுப்பியதற்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் இவ்விடயத்தில் நாம் ஒரு தற்காப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது கவலைக்குறியது. ஆம், பல நல்ல தமிழ் சொற்கள் வடமொழிக்குச் சென்றுள்ளன. நகர், நாகரீகம் போன்றவை அவ்வாறானவை என்று ஒரு மொழியியலாளர் ஆய்ந்து கூறியுள்ளார். இவ்வாறு நாம் இனங்கண்டுள்ள சொற்களைப் பயன்படுத்தத் தயங்க வேண்டியதில்லை.
- வடமொழியிலிருந்து தமிழுக்கு வரும் சொற்களில் பலவற்றை வடமொழிக்கே உரித்தான கிரந்த ஒலிகளின் மூலம் அறியலாம். -- Sundar \பேச்சு 05:27, 16 ஆகஸ்ட் 2005 (UTC)
Srinivasan, I accept your view that some of the words that we think as Sanskrit based could have actually been gone from Tamil to Sanskrit and in that case we do a mistake of avoiding good tamil owrds too. However, I hope that once we gain more knowledge in Tamil and other related languages we can reduce the frequency of this mistake. None of us here are professional linguistic scientist and such mistakes are bound to happen. Once we realise the mistake, we can correct them. I hope that this is all a process of learning. Then, it is really surprising that u can write without mistakes in Tamil even without learning much tamil grammar and literature. Some of my classmates who have studied Tamil as first language for 12 years still can't write good prose in Tamil :( --ரவி (பேச்சு) 10:05, 12 ஆகஸ்ட் 2005 (UTC).
என் கருத்து; ரொம்ப சிந்திக்க வேண்டாம் எந்த வார்த்தைகளை உபயோக படுத்த வேண்டும் என்று. சில சுலபமான ஏற்பாடுகள்.
அ. பேச்சில் எந்த சொல் புரியுமோ, அதையே எழுதலாம்(கொச்சையாக்காமல்). உதாரணமாக நாடகம், சினிமா, பத்திரிகைகள், கதைகளில் வரும் பதங்கள்.
ஆ. பெரிய வார்த்தைகளை விட சிறிய வார்த்தைகளை பயன்படுத்தவும்.
இ. பெரிய சொற்றொடரை விட சிறியதையே பயன்படுத்தவும்.
ஈ. படிக்கிறவனுக்கு கஷ்ட படாமல் புரியணும்.--விஜயராகவன் 23:36, 5 டிசம்பர் 2006 (UTC). இன்னும் முக்கியமானதொன்று - கருத்துக்களை சுருக்கமாக சொல்லவும்; சொல், சொற்றடர், வாதம் இவற்றின் நீளத்தை அவசியத்துக்கு மேல் இழுக்க வேண்டாம்.--விஜயராகவன் 23:53, 5 டிசம்பர் 2006 (UTC)