Wikipedia:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருளடக்கம் |
[தொகு] தமிழ் விக்கிபீடியாவின் குறிக்கோள்/நோக்கம்
எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியத்தை ஆக்குவதே எமது முதன்மைக் குறிக்கோள். தமிழ் விக்கிபீடியா இக்குறிக்கோளுக்கான வழிமுறையும் செயல்வடிவும் ஆகும். |
[தொகு] முக்கிய கொள்கைகள்
அனைத்த கொள்கைகளையும் படித்த பின்னர் பங்களிக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் முக்கியமான கொள்கைகளை அறிந்துகொள்வது உங்களைத் தமிழ் விக்கிபீடியாவின் செயற்பாடுகளுடன் இணைந்து ஆராக்கியமாக பங்களிப்பதை விரைவுபடுத்தும்.
- நடுநிலை நோக்கு: கட்டுரைகளில் ஒரு பக்கசார்பு வாதங்களை மட்டும் எடுத்துகூறுவதை தவிர்த்து, தகுந்த அனைத்த பார்வைகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து உரிய இடம்தாருங்கள்.
- பதிப்புரிமைகளை மீறாதீர்கள்: விக்கிபீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். இதில் பதிப்புரிமையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆக்கங்களை சேர்க்காமல் இருப்பது எமது குறிக்கோளுக்கு இன்றியமையாதது. பதிப்புரிமைகளை மீறாதிருப்பது சட்டச் சிக்கல்களையும் தவிர்க்கும்.
- எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம். இதுவே எமது முக்கிய நோக்கம். இதைத்தவிர எமக்கு எந்தவித அரசியல், பண்பாட்டு, பக்கசார்பு நோக்கங்களும் கிடையாது. தனிப்பட்ட விக்கிபீடியர்களின் கொள்கைகளுக்கும் அவர்களின் தமிழ் விக்கிபீடியா தொடர்பற்ற கருத்துக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் விக்கிபீடியா எந்தவிததிலும் பொறுப்பேற்க்காது. மேலும் தகவல்களுக்கு: Wikipedia:தமிழ் விக்கிபீடியா இவை அன்று.
- சக பயனர்களின் பங்களிப்புக்களுக்கு மதிப்பளியுங்கள். தமிழ் விக்கிபீடியா ஒரு கூட்டு மதிநுட்ப ஆக்கம் ஆகும். பிறரின் ஆக்கங்களுக்கு மதிப்பளிப்பது இத்திட்டத்துக்கு இன்றியமையாது. மேலும் தகவல்களுக்கு: Wikipedia:ஒழுங்குப் பிறழ்வுகள், Wikipedia:விக்கி நற்பழக்கவழக்கங்கள், en:Wikipedia:Resolving disputes.
[தொகு] கொள்கைகள் ஏன் தேவை?
எமது குறிக்கோள் எமக்கு முக்கியமானது. தமிழ் விக்கிபீடியா உருப்பெற ஒரு ஒருமித்த தொலைநோக்கு திட்டக்கண்ணுடன் செயல்படுவது இன்றியமையாதது. எமது செயல்திட்டங்களை நெறிப்படுத்த எமது விழுமியங்களிலும், பண்பாட்டு சூழலும், நோக்கத்திலும் இருந்து எழும் தெளிவான கொள்கைகளும் வழிகாட்டல்களும் புரிந்துணர்வுகளும் எமக்கு தேவையாகின்றது.
[தொகு] வழிமுறை கேள்விகள்
[தொகு] கொள்கைகள் எப்படி முடிவு செய்யப்படுகின்றன?
தமிழ் விக்கிபீடியாவில் இரண்டு முக்கிய கொள்கைத் தொகுதிகள் உண்டு. அவை
- விக்கிபீடியாவின் முக்கிய கொள்கைகள்
- தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்
விக்கிபீடியா,குறிப்பாக ஆங்கில விக்கிபீடியாவின் எமக்குரிய கொள்கைகளை நாம் கவனத்தில்கொண்டும் மதித்தும் செயற்படுகின்றோம். எனினும் தமிழ் விக்கிபீடியாவின் குறிக்கோள்களுக்கென அவ்வப்பொழுது கொள்கைகள் வகுத்து நடைமுறைப்படுகின்றன. தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள் அனைத்தும் உடனடியாக வடிவம் பெறுவதில்லை. பல கொள்கைகள் பயனர்களின் புரிந்துணர்வுடன் எழுதப்படாமல் இருக்கின்றன. எனினும் வடிவு பெற்ற கொள்கைகள் எப்படி உருவகம் பெற்று எழுதப்பட்டன் என்பது கீழே விளக்கப்படுகின்றது.
- Wikipedia:ஆலமரத்தடி மற்றும் பிற உரையாடல் பக்கங்களில் கொள்கைகள் திறந்த முறையில் தேவைக்கேற்ப பரிந்துரைக்கப்பட்டு அலசப்படுகின்றது (பரிந்துரைத்தல் (Recommendations or Proposal) -> கருத்துக்கோரல்/கலந்துரையாடல் (Request for Comments/Consultations) -> திருந்திய கொள்கைகள் அல்லது சீர்திருத்தப்பட்ட பரிந்துரைகள் (Refined Policies)). இச்செயற்பாடு திறந்தமுறையில் ஒளிவுமறைவின்றி (open and transparent), பொறுப்புணர்வுடன், அனேக பயனர்களின் கருத்துக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் மதிப்பளித்து மேற்கொள்ளப்படவேண்டும்.
- அனேக கொள்கைகளுக்கு ஒரு இணக்க முடிவு எட்டப்பட்டு எழுதப்படுகின்றது. இணக்க முடிவே விரும்பப்படுகின்றது, எனினும் தேவையேற்படின் வாக்குபதிவும் மேற்கொள்ளப்படலாம். (Consensus or Democratic Agreement)
- அனேக கொள்கைகள் இறுதியான இறுக்கமான வடிவு கொள்வதில்லை. பயனர்கள் ஆட்சோபனைகளை தெரிவிக்கும் பட்சத்தில் மீள்பரிசீலனைக்கு கொள்கைகள் ஈடுபடுத்தப்படும்.
மேலும் தகவல்களுக்கு: en:Wikipedia:How to create policy
[தொகு] கொள்கைகள் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன?
தமிழ் விக்கிபீடியா அதன் பயனர்களால் ஆக்கப்படுகின்றது. எனவே கொள்கைகளை ஆக்குவதும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் பயன்ர்களையே சாரும். தமிழ் விக்கிபீடியா சமூகம் கூட்டாக கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றது. மேலும் தகவல்களுக்கு:
[தொகு] கொள்கைகளின் வகைகள்
- உத்யோகபூர்வ கொள்கைகள் (Official policies)
- பரிந்துரையிலிருக்கும் கொள்கைகள் (Semi-policies or Proposed policies)
- வழிகாட்டல்கள்
மேலதிக தகவல்களுக்கு: en:Wikipedia:List of policies
கையேடுகள், வழிகாட்டுக்கள், உதவிகள் பட்டியல்களுக்கு Wikipedia:சமுதாய வலைவாசல் பக்கத்தைப் பார்க்கவும்.
[தொகு] விதிமுறைகளின் வகைகள்
Every current policy falls into one of the following five categories:
- பழக்கவழக்க விதிமுறைகள் - Behavioral: standards for behavior on Wikipedia to make it a pleasant experience for everyone.
- உள்ளடக்க விதிமுறைகள் - Content: which topics are welcome on Wikipedia and give quality and naming standards.
- Enforcement: what action authorised users can take to enforce other policies.
- Deletion: the fraught area of deleting articles that are considered undesirable.
- Legal and copyright: law-based rules about what material may be used here, and remedies for misuse.